ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

"பிரபஞ்சங்களின் முந்திரிக்கொத்து"

 

"பிரபஞ்சங்களின் முந்திரிக்கொத்து"

(multiverses)

_________________________________________


கடவுள் இல்ல போடா

இது கடவுளே சொன்னது.

மனிதனின் விஞ்ஞானம்

மொத்த பிரபஞ்சத்தையுமே

ஒரு வெங்காயம் ஆக்கி விட்டது.

உரிக்க உரிக்க‌

அதனுள்

கொத்து கொத்தாய் பிரபஞ்சங்கள்.

"ஒன்று மில்லை"யிலிருந்து

"எல்லாம்".

அல்லது

"எல்லாமே ஒன்றுமில்லை" தான்.

டாக்டர் பென்ரோஸ் 

"சுருள் சுருளாய் பிரபஞ்சம்"

(சைக்கிளிக் யுனிவர்ஸ்)

என்றார்.

பெரியாரும் பிரம்மமும்

கை கோர்த்துக்கொண்டு விட்டார்களா?

"பிற" எனும் "தோன்று"எனும்  அடிச்சொல்லே

பிரம்மம் ஆனது.

அந்த "தமிழ்ச்சொல்லே"

வியப்பு ஆகி 

பெரித் பெரிது 

பெரிதினும் பெரிது ஆனது.

எனவே

தமிழனே முதல் பிராமணன்.

ஆம்.

நூல் போட்டு 

அடையாளப்படுத்திக்கொள்ளாத‌

பிராமணன்.

தூ..

மானங்கெட்டவனே.

அப்படியொன்றும்

அந்த சொல்லை அப்பிக்கொண்டு

அலைய வேண்டாம்.

பெரிதினும் பெரிதான அந்த‌

சொல் மகா அற்பமாய்

சிறுத்துக் குறுகிக்குறுகி

சாதிகளின் முடை நாற்றத்துள்

முடங்கிப்போனது.

சரி இதை துடைத்து விட்டு

இந்த அண்டங்கள் எனும்

"பிரபஞ்சங்களின் முந்திரிக்கொத்து"

பற்றி பார்ப்போம்.

_______________________________________

இ பி யெஸ்.



Physicist Claims They Have Uncovered The First Evidence of the Multiverse | Watch

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக