பரிமாணங்கள்
_________________________________
ருத்ரா
எனக்கு ஏதோ பயம்.
ஸ்ட்ரோக் வரலாம்.
சிறுநீரகம் நின்று விடலாம்.
இல்லாவிட்டால்
எந்த விதமாகவாவது
சின்னாபின்னம் நிகழலாம்.
இது ஒரு டைமன்ஷன்.
எல்லாம் ஐன்ஸ்டீனின் ஸ்பேஸ்டைம்ல்
சுருட்டி வைக்கப்பட்டது தான்.
இன்றைய இழைக்கோட்பாடு
இருப்பத்தாறு என்கிறது போசானிக்கில்.
பத்து என்கிறது
சூப்பர் சிம்மெட்ரியில்.
இது பிரபஞ்சமே கழன்று கொண்ட நிலை.
எம் தியரி எனும்
எல்லாவற்றுக்கும் ஆன தாய்க்கோட்பாட்டில்
பதினொன்று.
நம் ராமானுஜன் என்றைக்கோ
சொல்லிவிட்டுப்போன
மாடுலர் ஃபங்ஷன்ஸ்
எட்டுகளின் மடங்காய்
இருபத்து நாலு என்று குறிப்பிட்டு
காட்டிவிட்டது.
ப்ரேன் காஸ்மாலஜி
கணித சமன்பாடுகளை
சங்கிலி சங்கிலியாய்
எழுதிக்கொண்டிருக்கிறேன்.
இந்த "பயம்"பற்றிய டைமன்ன்ஷனை
யாரிடம் கேட்பது?
புதிது புதிதாய் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்
திடுக்கிட வைத்து புல்லரிக்கச்
செய்து கொண்டே இருக்கிறது.
பாருங்கள்
அந்த "செவ்வாய்க் கோளில்" கூட
ஒரு பெரிய சிவலிங்கச்சிலை
அந்த பாழ்வெளியில்
சாய்ந்து சரிந்து கிடப்பதாய்
நாஸா காட்டுகிறதாம்.
இன்னும் விட்டால்
அந்த ப்ராக்ஸிமா பி எனும்
வெளி பூமியிலிருந்து
"போகர்"கூட சிக்னல் அனுப்பிவிடுவார்
போலிருக்கிறது.
இப்போது பயம் எனும் டைமன்ஷன்
பூதாகரமாய்
என்னை உலுக்கிக்கொண்டிருக்கிறது.
அட சீ என்ன இது?
அந்த சக்கரநாற்காலியின்
சக்கரவர்த்தி திருமகன்...
மனிதம் கோடி மடங்காய்
எழுச்சி பெற்ற அறிவியல் உருவகம்..
"ஸ்டீஃபன் ஹாக்கிங்" என
உச்சரித்தேன்.
நானும் இப்போது "போகருடன்"
ஹாயாய்..அந்த
எக்ஸொப்ளேனட்டில்...
______________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக