அந்த பாரதியும் இந்த பாரதியும்
_____________________________________
ருத்ரா
பக்தி இல்லையேல்
தமிழ் இல்லை.
தமிழ் இல்லையேல்
சிவபெருமான்
சமயக்குரவர்களிடம்
தமிழில் அடியெடுத்துக்கொடுத்து
பாடமுடியாமல் போய் இருக்கும்.
தமிழின் இனிமையை
கேட்க அந்த
புலித்தோலை அரைக்கசைத்தவன்
சீற்றமுடன் ஆணை இட்டிருக்கக்கூடும்.
தமிழ் இல்லையென்றால்
"பக்தி" என்ன பாடு பட்டிருக்கும்?
அந்த பாரதி அம்மையாருக்கும்
இது புரியாமலா இருந்திருக்கும்?
அவர் ஆணித்தரமாக பட்டிமன்றங்களில்
வாதிடும்போது
தமிழில்
அறிவார்ந்த கருத்துகளைத்தானே
முன் வைக்கிறார்.
அதை விட்டு
சப்பளாக்கட்டைகளை
அடித்துக்கொண்டா பேசுகிறார்.
"நெஞ்சு பொறுக்குதில்லையே
............"
என்று
அந்த பாரதி
இந்த பாரதியை நினைத்து தான்
மனம் புழுங்கியிருப்பாரோ?
_______________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக