செவ்வாய், 4 அக்டோபர், 2022

பிரம்ம சிரிப்பு

 


எல்லாவற்றையும் பூஜை செய்யும் 

வழக்கம் ஒட்டிக்கொண்டதால்

கடவுள் இல்லை என்பதையும்

தேங்காய் உடைத்து கற்பூரம் கொளுத்தி

பூஜை செய்தார்கள்.

கடவுளே உள்ளம் குளிர்ந்து

"வெளித்தோன்றி சொல்லிவிட்டார்.

நான் கடவுள் இல்லை.

கடவுள் நான் இல்லை.

கடவுள் கடவுளே இல்லை.

கடவுள் என்பது இல்லவே இல்லை.

சந்தோஷம் தானே"


சந்தோஷமா?

அயோக்கியப்பயலே

மொள்ள மாரி

கசமாலம் 

முடிச்சவிக்கி

முட்டாப்பயலே..

.................

"அப்படியா..

அந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கு

இது வரையும் 

இது தான் அர்த்தமா?"

கடவுள் ஓடியே போய்விட்டார்.

கடவுளைக்காணோம்.


"கடவுள்...

இதோ தூணிலும் இருப்பார்

துரும்பிலும் இருப்பார்.

..........

..............."


பக பகவென்று

சிரிப்பொலி மட்டும் கேட்டது.

பிரம்ம சிரிப்பு அது.


_____________________________________________________‍

ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக