வியாழன், 20 அக்டோபர், 2022

ஆளை விடு சாமி

 ஆளை விடு சாமி

______________________________________

ருத்ரா




"நெஞ்சு பொறுக்குதில்லையே"

இந்த வரிகள் மூலம்

பாரதி நம் நெஞ்சில்

துயரத்தின் 

அந்த காக்காய் முட்களை

பாய்ச்சுகின்றார்.

சாதி மதங்களை 

இன்னும் இன்னும் இவர்கள்

சப்பாத்திக்கள்ளிகளாய் வளர்க்கிறார்கள்.

இறைவன் வகுத்த விதி என்று

இறைவன் வடிவமான மக்களைக்கூட‌

சேற்றில் அமுக்கி வைத்திருக்கிறார்கள்.

திரு அவதாரங்கள் எடுத்த கடவுளர்களே

உங்களை முகமூடிகள் ஆக்கி

உங்கள் கல்லறைகள் மீது அல்லவா

களிப்பு நடனங்கள் ஆடுகின்றார்கள்.

நீங்கள்

மீனாய் தவளையாய் பல்லியாய் பாச்சையாய்

பன்றியாய் பலவிதமாய்

அவதாரம் எடுத்தீர்களே

ஒரு மனிதனாய்

இந்த மாய்மாலங்களை எல்லாம்

சுட்டுப்பொசுக்குகிற‌

செந்தீச்சுடர் ஏந்திய மனிதனாய்

கிளர்ந்து வாருங்கள்.

கடவுள் சொன்னார்.

கடவுளாய் இருப்பது சுலபம்.

கல் தானே நான் கவலை இல்லை.

அவர்களே ஏதாவது புராணங்கள் தொடுத்து

மாலைகளாய் போட்டுக்கொண்டிருப்பார்கள்.

மனிதனாய் அவதாரம் எடுத்தால்

இந்தக்கல்லின் மீது தானே 

நானும் முட்டி முட்டிக்கேட்கவேண்டும்.

கடவுளாய் இருப்பதே எளிது.

நான் நாத்திகனாய் இருப்பதற்கு

இந்த கல்லே போதும்.

ஆளை விடு சாமி!



_________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக