திங்கள், 2 நவம்பர், 2020

அரிதாரங்கள் தந்த அவலங்கள்.

 அரிதாரங்கள் தந்த அவலங்கள்.

=======================================ருத்ரா


நமது ஜனநாயகத்துக்கு

பளிங்கு கட்டிடம் 

பிரம்மாண்டமாய் இருக்க

ஓலைக்கொட்டகைக்குள்

சினிமா நிழல் பூசிய 

ஒளிப்பூச்சிகள் 

அரிதாரம் பூசிக்கொண்டு

ஆள வந்தன.

அதிலிருந்து மீண்டு வரவில்லை

நம் சித்தாந்தக்கனவுகள்.

அந்த அட்டைகள் உறிஞ்சியது போக‌

இங்கே என்ன மிச்சம் இருக்கிறது

சிந்திப்பதற்கு?

இன்னும் சினிமாவின் குத்தாட்டங்களே

இந்த ஓட்டுகளில் 

கும்மியடித்துக்கொண்டிருக்கின்றன.

இந்த நாட்டை கொஞ்சம்

ஆண்டு கொள்கிறேன்

அதற்கு "செங்கோல்"செய்ய‌

உங்கள் "முதுகெலும்பை"

கொஞ்சம் முறித்து தாருங்களேன்

என்று சொன்னால் போதும்

கோடி கோடி 

முதுகெலும்புகள் குவிந்து விடும்.

அப்படி  குவிந்ததால் 

கிட்டத்தட்ட ஒரு ஐம்பது ஆண்டுகளாய்

தமிழ் நாட்டில் இவர்கள்

முதுகெலும்பு இல்லாமலேயே  இருக்கிறார்கள்.

அது தேவையே இல்லை என்றும் 

பழகியும் போனார்கள்


நடந்தவைகள் இனியும் 

நடப்பவைகளாக இல்லாமல் 

பார்த்துக்கொள்வோமாக!


_______________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக