ஞாயிறு, 8 நவம்பர், 2020

மெல்லிய மயிலிறகைக்கொண்டு...

 மெல்லிய மயிலிறகைக்கொண்டு...

___________________________________________ருத்ரா


மெல்லிய மயிலிறகைக்கொண்டு

காளிதாசன் 

காதல் வரிகளை நீவினான்.

கண்ணதாசன் அந்த‌

காளிதாசனைப்பிழிந்து

பேனாவில் ஊற்றிக்கொண்டான்.

வைரமுத்து 

தமிழ்ச்சொற்களில்

அதன் அடுக்குகளின் இடுக்குகளில்

மின்னலைக்காய்ச்சி ஊற்றினார்.

இன்னும்

ந.முத்துக்குமார்

புதுக்கவிதைகளை

தயக்கம் இல்லாமல்

அந்த நரம்புக்கருவிகளிலும்

துளைக்கருவிகளிலும்

இசையமைக்க சுகமாக‌

உருட்டிக்கொடுத்து உயிர் ஊட்டினார்.

காதல் என்பது 

கவிதையா?

வாழ்க்கையா?

நாவலா? சினிமாவா?

இப்போது

கைபேசிகளுக்குள் ‌

மின்காந்தத்தை விட‌

காதலின் ஹார்மோன்களே அதிகம்.

வாழ்வு வடிவங்களின்

உப்பு புளி மிளகாயும்

சாதி மத சம்பிரதாயங்களின்

ரத்த சதைக்குள் நெருடும்

எலும்புக்குவியல்களுமாய்

இருக்கின்ற நிகழ்வுகள்

பாறைகளாய் அமுக்க‌

நசுங்கிய கரப்பான் பூச்சிகளின்

ரெக்கையும் மீசையும்

பாசில் சித்திரமாய் தெரிய‌

இங்கே

காதல் ஒரு படம் காட்டுகிறது.

பார்க்கும் வரை பாருங்கள்.

அதிலே

வாழும் வரை வாழுங்கள்.

இந்தக் கொடுமைகளும்

இனிமைகள் தான்.

இப்படி எழுதுவதும் 

இதை படிப்பதும்

ஒரு குகைவழிப்பயணம்.

வெளிச்சப்பிஞ்சு கண்ணைத் தடவும் வரை

இருட்டுகளே நம் விழிவெண்படலங்கள்.


_______________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக