புதன், 18 நவம்பர், 2020

‍‍‍முகவரிகள்.

 

முகவரிகள்.

__________________________________ருத்ரா


என் இனிய தமிழ் நெஞ்சங்களே!

தமிழ் வாழும்.

தமிழ் வெல்லும்.

என்று சொல் அடுக்கி

நம் தமிழ் வீடு கட்டிய போதும்

நம் வீட்டுக்குள்

ஏன் இத்தனை கள்ளிகள்?

ஏன் இத்தனை முள்ளிகள்?

நம் வாழ்வின் நிகழ்வுகள் அத்தனைக்கும்

அந்த எச்சில் மந்திரங்கள்

உமிழ்ந்து நம்மீது

வர்ணம் ஏற்றிக்கொண்டிருக்கவேண்டுமா?

அந்த ஆதிக்கம் எனும்

காலமே செத்துப்போன ஒரு

பிணச்சுமை தான்

நம்மை இன்னும் 

அழுத்திக்கொண்டிருக்கவேண்டுமா

மனு தர்மம் என்ற பெயரில்?

அது நம் கண்ணுக்கு தெரியவில்லையே

என்று

அந்த "ஒநாய் உறுமல்களை"

தம் தொண்டைக்குள் மறைத்து

பல குரல் மன்னர்களாய்

பவனி வரும் ஜிகினா மகுடதாரிகளின்

வேடம்தனை புரிந்து கொள்ளுங்கள்.

சாதிஅடுக்குகளில்

ஒன்று தன் கீழுள்ளதை அமுக்க

அடுத்தது 

அடுத்த தன் கீழ் உள்ளதை அமுக்க

கடைசி 

மண்புழு வரை

இப்படி நசுக்கி நசுக்கி

நம்மை அறியாமலேயே

நாம் இந்த மண்ணில் 

புதைந்து போகவோ

தமிழை ஏந்தி நின்று கொண்டிருக்கிறோம்?

அழகிய நம் திணைகளில்

"பாலை" மட்டுமா எஞ்சியது?

அயல் மொழி ஆயுதம் தாங்கிய‌

அந்த "ஆறலை கள்வர்களா"

நம்மை அடக்கி ஆள்வது?

அறிவுச் சுடர் கொளுத்திய 

நம் அருந்தமிழை

தேர்தல் எனும்

அந்த கணிப்பொறிக்குள்ளா

கல்லறை கட்ட இந்த‌

சூழ்ச்சியாளர்கள் முயல்வது?

இந்த கோவில்களும் அதன்

உள்ளே சமஸ்கிருத‌

வவ்வால்களின் நாராச சடசடப்புகளும்

நம் தமிழை விழுங்கி

எச்சமிடுவதற்குள்

எச்சரிக்கை கொள்ளுங்கள்

அன்பான தமிழர்களே!

சென்ற தடவை வென்று விட்டோமே

என்று

இப்போது ஏமாந்து போய் விடும்

ஆபத்துக்குழிகள் 

நிறைய உண்டு நம் பாதையில்.

நம் கையை வைத்து

நம் கண்ணை குத்தச்செய்யும்

மந்திரங்களில்

மயங்கிப்போய்விடாதீர்கள்.

"தமிழ் காப்போம்.

தமிழகம் காப்போம்."

இந்த 

இரு வரிகள் மறவாதீர்.

மறந்தால் இவ்வுலகில்

நமக்கு இல்லை

முகவரிகள்!


_______________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக