ஞாயிறு, 22 நவம்பர், 2020

ஒளி படைத்த கண்ணினாய்.....

 ஒளி படைத்த கண்ணினாய்..... 

____________________________________ருத்ரா


இந்திய ஜனநாயகமே!

உன் முகம் சிதையும்

யுகம் இன்று

உன் முகத்தில் 

உன் மூக்கின் அருகே வந்து

தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கிறதே

இதன் சாக்கடை சுவாசம்

உன்னைக்

கொஞ்சமும் நெருடவில்லையா?

பீகார் எனும்

பிரதேசத்தில்

சாதிகளின் மதங்களின்

சதுரங்கக்காய்கள்

ஆடிய நர்த்தனங்களில்

இந்திய அன்னையின் திருப்பாதங்களே

காயம்பட்டு 

ரத்தம் வடிப்பது 

உனக்கு வலிக்க வில்லையா?

இவிஎம்

தேர்தலின் இதயம் என்றார்களே

அதன் ரத்த நாளங்களைத்

சொடுக்கி

ஓ! புனிதமான ஜனநாயகமே

உன்னை 

அவர்களின் "திருகு தாளங்களுக்கு"

ஏற்றவாறு ஆடவைத்துவிட்டார்களே!

வெள்ளமெனத் திரண்ட‌

எதிர்க்கட்சிகளின் கனவுகளின்

மென்னியைத் திருகி

தன் சுயலாபத்தை 

தக்க வைத்துக்கொண்டார்களே!

இதை எந்த‌

நீதித்தராசில் போட்டு

நியாயம் தேடுவது?

தராசுக்கோலை அழுத்திப்பிடிக்கும்

இடத்தில் அல்லவா

அவர்களின் அலங்கரித்த‌

சிம்மாசனம் நிறுவப்பட்டிருக்கிறது.

பீஹார் மாடலின் மந்திரக்கோல்

கையில் இருப்பதால்

வருகின்ற தேர்தல்கள் எல்லாம்

இனி 

அவர்களுக்குத்தானே

கவரி வீசும்.

ஓட்டுக்களின் நியாயம்

அந்த ஓட்டுகளின் ஆழத்துக்குள்ளேயே

சமாதியாக்கப்படும்

அவர்களின் சாணக்கியமே

இங்கு சனாதன‌ம்.

சனாதன நாயகம் இந்த நாட்டின்

ஜனநாயகமாய்

விளங்குவது

மானிட நீதி மலர்ச்சியின்

ஒரு தலைகீழ் பரிணாமம் ஆகும்.

அன்பான இந்திய மக்களே

இந்த தலைகீழ் தத்துவ யோகானங்களை

தவிடு பொடியாக்குங்கள்.

உண்மையான ஜனநாயகத்தின் 

உன்னத வெளிச்சம் உங்கள் 

கண்களில் பாயட்டும்.

புதிய பாரதமே! 

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா! வா!

உறுதிகொண்ட நெஞ்சினாய் வா! வா! வா!


_______________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக