செவ்வாய், 31 ஜூலை, 2018

கலைஞர் -5

கலைஞர் -5
==========================================ருத்ரா

ஒருவர் எழுதியிருந்தார்
கட்டுமரம் கரை ஒதுங்கியது
என்று.
கவிழ்ந்து விடமாட்டேன்
கட்டுமரமாய் மிதப்பேன்
என்று சொன்ன‌
அந்தக்கவிஞனை
இந்தக்கவிஞன் கலாய்த்திருந்தான்.
"ஆமாம் உடன் பிறப்பே!
கரையில் இருந்தாலும் நீ
அவநம்பிக்கைக் கடலில்
மூழ்கிக்கொண்டிருக்கிறாயே என்று
கரை ஒதுங்கி உன்னைக்
கரையேற்ற வந்திருக்கிறேன்.
எழுந்துவா! தம்பி!"
என்று தான் அதைப்பார்த்து
எழுதியிருப்பார்.
முர்சொலியின் அச்சுச்சுவடுகள் எல்லாம்
தமிழின் நரம்புகளை
தமிழின் உள்ளத்துக் கருவுயிர்ப்பின்
தொப்பூள் கொடியாய்
இழைபின்னிக்கிடக்கிறது.

ராகுல் வந்து பார்த்தார்.
ரஜனி வந்து பார்த்தார்.
அந்த பேட்டிகள் எல்லாம்
நம்பிக்கையை
இந்தக்கூட்டத்துக்கு
பன்னீர் தெளித்தன.
ரஜனி இறைவனையும் கூட
அழைத்து வந்திருந்தார்.
நிச்சயம் அந்த இறைவன் அருள்
இவருக்கு பூரணமாக உண்டு
என்று மனம் நெகிழ்ந்தார்.

வயது காரணமாய்த்தான்
கல்லீரல் போன்றவை
கலகம் செய்கிறது என்று
"காவேரி" அறிக்கை தருகிறது.
அன்பான கல்லீரலே !
பெயரில் தானே
உன்னிடம் "கல்"இருக்கிறது.
அதுவும்
கலைஞரின் தமிழில் கரைந்து
அது காணாமல் போய்விடுமே.
நுங்குத்தமிழில்
சங்கத்தமிழை அவர்
நுவலும்போது
எங்கள் கவலைகள் யாவும்
பறந்து போகுமே!
எங்களை கலைஞரை பேசவிடு.

தமிழ் வாழ்க !
கலைஞர் வாழ்க!

======================================================












ஜூங்கா

ஜூங்கா 1
==========================================ருத்ரா

சினிமாக் கதாநாயகன் என்பவன்
வானத்திலிருந்து
குதித்து வந்தவன் என்ற‌
கோட்பாடு எப்பவோ
தகர்க்கப்பட்டு விட்டது
என்பதே தற்போதைய நிலை.
அதன்
சிறப்புமிகு அடையாளம்
நம் விஜயசேதுபதி என்பது
உண்மையிலும் உண்மை.

ஆனால் அவர்க்கு
இப்போது நீண்ட கோட்டும் சூட்டும்
கொடுத்திருக்கிறார்கள்.
சிகையை பின்புறம்
தேங்காய்த்துவையல் மாதிரி
ஒரு அறிவுஜீவி முடிச்சு அல்லது
உச்ச நாகரிக சின்னம்
என்பது போல்
காட்டியிருக்கிறார்கள்.
கொடுத்த பாத்திரத்தை
பிய்ச்சு உதறியிருப்பதாகத்தான்
சொல்கிறார்கள்.

லண்டன் சுவிட்சர்லாந்து மாதிரி
காட்சிகள் மாறியிருப்பதிலும்
ஒரு அபூர்வ வேறுபாடு தெரிகிறது.
நானும் ரவுடி தான் படத்திலிருந்து
ஒரு வித "கச்சா ஃபிலிம்" தனத்திலிருந்து
வெளியே
குதித்துவிட்ட‌
அல்ட்ரா மாடர்ன் அவுட்லுக் தென்படுகிறது.
கதையும்
அப்படி ஒரு "இயான் ஃப்லெமிங்க்"
கதைச்சட்டத்துக்குள்
திணிக்கப்பட்டிருக்குமோ?
தெரியவில்லை.

இந்தக்கணிப்பும்
ஒரு ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் தான்.
விலாவரியாய்
அந்த ஒண்டர்ஃபுல் ஜிகர்தண்டாவை
அப்புறம்
உறிஞ்சி உறிஞ்சி குடிக்கலாம்.
அவரிடமிருந்து ஆரஞ்சுமிட்டாய்கள்
நடிப்பின் அடர்ந்த இனிமையை
நமக்கு தந்திருக்கின்றன.
இதில் திகிலும் "த்ரில்லும்"
சேர்ந்ததொரு நெசவில்
எந்தக் கிழிசலும்  தொய்வும் இல்லாமல்
ஒரு முத்தான நடிப்பை  கோர்த்திருக்கிறார்.


=======================================================

திங்கள், 30 ஜூலை, 2018

கலைஞர்- 4

கலைஞர்- 4
=========================================ருத்ரா

தேறி வருகிறார்.
நலம் அடைந்து வருகிறார்.
தொண்டர்களின்
அழுகைச்சீற்றத்துக்கு
அணை போடவா
இந்த அறிக்கைகள்?
வெளியே வருகிறவர்கள்
நலமாய் இருப்பது தெரிகிறது
என்கிறார்கள்.
"நன்னம்பிக்கை முனையை"
தொட்டு
அன்றைய கடற்பயண வீரர்
மெகல்லன்
பயணம் தொடர்ந்தது போல்
நாமும் கண்ணீர்க்கடலில்
வீழ்ந்து போகாமல்
கலைஞரின் புன்னகை எனும்
அந்த புதுச்சுடரொளியை
காண்போமாக!


ஆனாலும்
சில "ட்வீட்டர்கள்"
சள சளக்கின்றனவே!

அவை
வகுப்பில் விவரமறியா
சிறுவர்கள் எறியும்
காகித அம்புகளா?
இணைய தளத்திலிருந்து அந்த‌
இதய தளத்துக்கா
ஈட்டி எறிந்து விளையாடுவது?
ஒரு தமிழன்
கவலைக்கிடமாய் இருக்கையில்
அவனுக்கு
ஒரு "பீஷ்மர் அம்புப்படுக்கையை"
அமைப்பதற்கா
இந்த அம்பு விளையாட்டுகள்?
நாம் "தமிழர்களா"?
என்று
நம் நெஞ்சை
தொட்டு தொட்டுப் பார்க்க வேண்டிய‌
வரலாறுகளின் ஆற்றுப்படைகளைத்தான்
நிறைய கண்டிருக்கிறோம்.
வில் புலியை தாக்கும்.
புலி மீனைத் தின்னும்.
கோவூர்கிழார்கள் தேவைப்படுகிற‌
வில் அம்புப் பாட்டுகள் தானே
நம் செய்யுட்கள்?

தமிழா!
எதிரிகளை விட துரோகிகளே
கொடியவர்கள் என்று
நம் மூன்று கொடிகளும்
ஒன்றை யொன்று
வெட்டிக்கொண்ட‌
ரத்தம் சொட்டும் சங்கத்தமிழ்
என்றைக்கு
உலகத்தமிழர்கள் உருவாக்கும் ஒரு
செம்மொழித்தமிழின்
செஞ்சுடரொளி வீசப்போகிறது?
ஒரு தமிழன் இன்னொரு தமிழனை
துரோகி என நினைத்து
வாள் வீசிக்கொண்டே போனால்
நாம்
என்ற சொல்லும் இறந்து போகும்.
தமிழர்கள்
என்ற இனமும் அழிந்து போகும்.
லட்சம் தமிழர்களை இழந்தோம்.
அதே வழியில் இன்னும்
கோடித்தமிழர்களை இழந்து விடவா
இந்த இழி நெருப்பை உமிழ்கிறோம்?
காழ்ப்பில்
விளைந்த வரிகள் அல்ல இவை!
கால ஓட்டத்தின் அதிர்வுகளை
அறியச்செய்யும் வரிகள் இவை.

=========================================================


மாயமான் வேட்டை


மாயமான் வேட்டை
============================================ருத்ரா

உச்சம் தொடு
உயரம் தொடு
இந்த உரத்த குரல்களின்
வேட்டைக்காடுகளில்
பெய்யும் அம்பு மழை
உன்னை ஓட ஓட விரட்டுகிறது.
பணம் புகழ்
இந்த மாயமான்கள்
உன்னை எங்கெல்லாமோ
இழுத்துச்செல்கிறது.
மனிதனின் முழு வீச்சு
இந்த வெற்றியின் மைல்கற்களை
நோக்கித்தான்.
ஆனாலும் கடல்போன்ற‌
உன் பொழுதுகளில்
சிறு கீற்றுத்துளிகளை
அதோ அந்த மைனாப்பறவைகளை
பார்த்து களிப்படையேன்.
வானம் போன்ற விரிந்த‌
உன் மனம் உனக்கு தெரியும்.
அப்போது
உன் அருகாமையில்
உள்ள முட்புதர்களில்
கிடப்பவர்களின் ரத்த சிவப்பில்
உன் கனவு ரோஜாக்களின்
இளஞ்சிவப்பு அடி பட்டு போய்விடும்.
உன் காலடி தடங்களில்
எத்தனை அப்பாவிப்புழுக்கள்
நசுங்கிக்கிடக்கின்றன‌
என்பதும் தெரியும்.

இப்போது புரியும்
அந்த வேட்டைக்கார அர்ஜுனன் போல்
உன் குறி
குரூரமாய்
ஒரு ரத்தப்பசி கொண்டு அலையாது.
நீ வெற்றிச்சிகரம்
ஏறுவதற்கு
உனக்கு படிகளாய்
படுத்துக்கிடப்பவர்களை
ஒரு போதும் காணவிடாமல் செய்வது
அந்த உன் தன்லாபம் எனும்
காட்டுத்தீ தான்.

இந்தப் பெருந்தீயை
எப்படி நீ வளர்த்துக்கொள்ளவேண்டும்?
அதனால்
உன்னை மானிட நேயத்தோடு
போர்த்திக்கொள்ளும்
இந்த சமுதாயம்
கருகிச்சாம்பலாய் போனாலும்
கவலையில்லை.
உன் "டார்கெட்" தான்
உனக்கு ரத்த சிவப்பு அணுக்கள்.
மற்ற உயிர்ப்புகள் எல்லாம்
வெறும் செத்த அணுக்கள்.
இப்படியே யோசி.
இதை மாத்தி யோசிக்காதே.
இந்த குளோபல் பொருளாதாரம்
இந்த நச்சு அம்புகளைத்தான்
உன் அம்பறாத்தூணியில் செருகித்தருகிறது.
உன் கல்வியின் உயர் "பட்டங்களில்"
இந்த "மாஞ்சா" தான் தடவப்பட்டிருக்கிறது.
உன் போட்டியாளனின்
கழுத்தை அந்த‌
பட்டத்தின் கண்ணாடித்தூள் கயிறு
துண்டாக்கி உன் கண் முன்னே
எறிந்தாலும்
நீ முன்னேறு.
பங்கு மூலதனக்குறியீடு
கொள்ளைப்பணக் குவியல்களின்
குறியீடு.
வறுமையின் கபாலங்கள் குவிந்து
கிடந்தபோதும்
அதையும் அடுக்கி
அப்பார்ட்மெண்ட் கட்டு.
இது வளர்ச்சி.
ஆம் இது தான் வளர்ச்சி.
வானத்தை சொறிந்து விடும் கட்டிடங்களின்
பின்னே
விடியல் நம்பிக்கைகளின்
கல்லறைகளும்
கூடவே கட்டப்படுகின்றன.
உன் வேட்டை துவங்கி விட்டது.
சுரண்டல் தத்துவத்தின்
இந்த "பிக் பாஸ்"வேட்டையில்
உன் மீது எய்யப்படும்
அந்த நச்சு அம்பை
நீயே "டிசைன்"செய்து கொள்கிறாய்.

"கில்லர் இன்ஸ்டிங்க்ட்"
இதன் அசுரக்கோடு
"ஹிரோஷிமா நாகசாகி "வரைக்கும்
போய்விட்டது.
மானிடம்
அந்த கொத்து மரணங்களின்
நாய்க்குடை காளான்
புகை மண்டலங்களிலிருந்து 
மீளும் வழியை
நீ தெரிந்து கொள்ளவேண்டுமே .
எப்போது
நீ விழித்துக்கொள்ளப்போகிறாய்?
இதையும்
உன் ஆராய்ச்சிப்படிப்பாய்
எடுத்துக்கொள்
அன்பான மாணவனே!

=======================================================








ஞாயிறு, 29 ஜூலை, 2018

கலைஞர்- 3


கலைஞர்- 3
============================================ருத்ரா

இதய மருத்துவர்கள்
என்ன வேண்டுமானலும்
சொல்லிக்கொள்ளட்டும்.
தமிழ் வாழ்க!
கலைஞர் வாழ்க!
என்பதே எங்கள்
"சிஸ்டாலிக் மர்மர்"
டயஸ்டாலிக் மர்மர்"
துடிப்புகளுக்கு
எங்கள் பெயர்கள்.
எழுத்தெல்லாம்
அ"கர" முதல என்றானே வள்ளுவன்
அந்த "கர கர"ப்பான
முதல் இனிப்பே எங்கள்
முதல் வெடிப்பு.
பிரபஞ்ச கருப்பு ஸ்லேட்டில்
"பிக் பேங்"என்றாலும்
கலைஞர் என்றாலும்
எங்களுக்கு ஒன்று தான்.
காலத்தின் நீட்சிக்கு முந்திய‌
அந்த கோடோ புள்ளியோ
இல்லை
நுரைவடிவமோ
(குவாண்டம் ஃபோம் காஸ்மலாஜி)
எல்லாம்
எங்கள் தமிழின்
ஃபாசில் வடிவம் தான்.
கலைஞர் எனும்
தமிழின் அறிவியற்கருவி
எங்களிடம்
எப்போதும் உண்டு.

கோபாலபுரத்தின்
சாலைகளில் தமிழின்
முழக்கங்கள் மட்டுமே உண்டு
அழுகைக்குரல்கள் அங்கு
அடைக்காப்பதில்லை.

கலைஞருக்கு
கரம் நீட்டும்
ஆயிரம் கோடிச்சூரியன்களின்
ஒளிவிரல்கள் இங்கே
நீண்டு கொண்டே இருக்கும்.

தமிழ்த்தலைமகனே!
தங்கத்தலைவனே!
எழுந்து வா!
நிமிர்ந்து வா!
சுடர்ந்து வா!

தமிழா!
நீ நிற்கும் இந்த மண்
உன் தமிழ் மண்
என்று புரிய‌
கிருஸ்துவுக்குப்பின்னும்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்
உனக்கு வேண்டியிருந்தது.

அந்த "இருட்டைக்கிழித்தவன்"
இந்த தமிழன் அல்லவா.

அந்தத்தமிழும் வாழ்க!
அந்தத்தமிழனும் வாழ்க!

=======================================================





கலைஞர் -2

கலைஞர் -2
===============================================ருத்ரா

"கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே!"

இசை முரசு இன்னிசைச்  செல்வர்
"ஹனீ ஃ பா"அவர்களின் அந்த
கணீர்க்குரல்
ஒரு மௌனத்தேன்மழையை
காவேரி மருத்துவ  மனையில்
கலைஞரின் உள்ளுர்ணர்வுக்குள்
பொழிந்து கொண்டிருக்கிறது.
இறுக்கம் தளர்ந்து
நம்பிக்கையின் ஒரு பெரு வெளிச்சம்
படரத்துவங்கியது.

சென்னை நகரம்
தொலைக்காட்சி பெட்டிகளுக்குள்
"சேன்னல்"சதுரங்களில்
துண்டு போடப்பட்டன.
அந்த சன்னல்களின் வழியே
கலைஞரின் பழைய‌
காலண்டர் தாள்களை
நிகழ்ச்சிக்
குவியலக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

காலதேவனின் எதிர்பார்ப்பு
வேறு மாதிரியாக இருக்கிறது.
இவன் மீண்டும்
தன் கர கரப்புக்குரலில்
காலம் என்ற எனக்கும்
எனக்குள்
இருக்கும்
அந்த தமிழ்த்தாகத்திற்கும்
ஒரு கவி அரங்கம் நடத்தவேண்டும்
என்று காத்திருந்து
ஜனன மரண சுவடியை தூர எறிந்துவிட்டு
அங்கே காத்திருக்கிறான்.

கிருஷ்ணன் இல்லையே
பின் அது எப்படி கோபாலபுரம்?
என்ற கேள்விஎல்லாம் கேட்காமல்
இந்துத்வாவின் அன்பு நண்பர்கள்
எல்லாம்
அங்கே அணிவகுக்கின்றனர்.
"தீய சக்தி" என்ற "ஃ ப்ரேசைக்"கூட
தூர எறிந்து விட்டு
அம்மாவின் பிள்ளைகள்
ஒரு பாச இலக்கணத்தை எழுதுகின்றார்கள்.
அடியில் எரியும்
திராவிடத்தமிழ்க்கனல் இது.

இதுவும்
ஒரு ஆனந்தக்கண்ணீர் கொண்டு
தோய்த்து எழுதும்
"தமிழின்"வரலாற்று வரிகள் தான்.
இணைய தளங்களில்
உயர்த்தினாலும்  சரி
காலாய்த்தாலும் சரி
இந்த இமயம் அந்த இமயத்தில்
வில் புலி மீன் சுவடுகளை
பதிக்க முனைந்த
அவன் சரித்திரம்
அழிக்கப்பட முடியாத ஒன்று தான்.

நலம் அடைந்து வருகிறார்
கலைஞர்.
உள்ளே சுருட்டி
அடைத்து வைக்கப்பட்டிருக்கும்
அவரது
உதய சூரியப்புன்னகை
இதோ
இந்த கோடிக்கணக்கான
தொண்டர்களின் முகத்தில்
ஒரு ஒளி ஓவியம்
தீட்டிக்கொண்டிருக்கிறது.

வாழ்க தமிழ்!
வாழ்க கலைஞர் !

==================================================



சனி, 28 ஜூலை, 2018

எங்கள் மாண்புமிகு அப்துல்கலாம் அவர்களே!


எங்கள் மாண்புமிகு அப்துல்கலாம் அவர்களே!
===========================================================ருத்ரா

அந்த ராமேஸ்வரம் அலைகள்
மூச்சு விட்டு மூச்சு விட்டு
யோகா செய்வதாய்
இவர்கள் கற்பனை செய்யலாம்.
ஆனால்
"பேக்கரும்பின்" மண்ணிலிருந்து
அறிவியலின் ஒரு இனிய‌
அடிக்கரும்பு
அலையெழுப்பிக்கொண்டிருப்பதாய்
நாங்கள் உன்னை
நினைவு கூர்கிறோம்.

உன் எலும்புக்கூட்டை நிறுத்திவைத்து
மணிமண்டபம் என்று சொல்கிறார்கள்.
அக்னிப்பிரளயமாய்
இந்த இளைஞர்களின் அறிவு செதில்களில்
ஒரு விஞ்ஞானக்கனவை அல்லவா
நீ சிறகு விரித்துக்காட்டியிருக்கிறாய்.
இந்த மக்களின் ரத்தசதையையெல்லாம்
எல்லா மதங்களையும் கடந்த
உன் புன்னகையும் பேச்சுமாய்
ஒரு உயிர்ப்பை பூசிவிட்டுப் போனாயே!
அதன் மீது ஏதோ ஒரு
காவி வர்ணத்தையல்லவா தடவியிருக்கிறார்கள்.
நீ வாசித்துக்கொண்டிருப்பது
மத நல்லிணக்கத்தின் வரிகள்
என்பதை மறுத்து
உன் அருகில் ஒரு கீதையை
வைத்து
இந்த மண்டபத்தை திறந்து வைத்தார்கள்.
உன்னை
இந்த விண்வெளியையே வீணையாக்கி
அதன் ஜியுடி (பேரொன்றியக்கோட்பாடு)யின்
நரம்புகள் தடவி
நீ யாழ் இசைப்பதாகத்தான்
நாங்கள் பார்க்கிறோம்.
ஆனால்
இவர்கள் ஒரு "சரஸ்வதி வந்தனா"வுக்கு
அல்லவா
மாடல் ஆக்கி உனக்கு
ஒரு பொம்மைக்கொலு வைத்திருக்கிறார்கள்.
பூமியின் நிழல்
நிலாவைத்தீண்டியதற்கான
அந்த "கிரஹணத்"தீட்டு போவதற்காக
நதிகளில் "கங்காஸ்நானம்"செய்து
நம் நீர்வளங்களை
தீட்டு ஆக்கும்
இவர்கள் மேதாவித்தனைத்தை
வைத்துக்கொண்டு
"வளர்ச்சி" என்று நாம் பேசுவதே
ஒரு "சமுதாய ஒவ்வாமை"ஆகும்.
சமுதாயம் இந்த சடங்குகளின்
கிடங்குகளில்
வீழ்ந்திடாமல் இருக்க
அறிவியல் கிளர்ந்த
அக்கினிக்கனவுகளின்
"நாயகமே" நம்
ஜனநாயகத்துக்கு தேவை.
அதனால்
ஓ எங்கள் கனவுகளின் நாயகனே !
நாங்கள் தூங்கினாலும்
நீ கற்பித்த கனவுகளே
எங்கள் விடியல் சிற்பங்கள்.

==============================================










வெள்ளி, 27 ஜூலை, 2018

கலைஞர்


கலைஞர்
============================================ருத்ரா

அந்த கரகரப்பான குரல்....
"என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே"
என்னும் போது
இந்த மக்கள் கடல் அலையெழுப்பி
ஆரவாரம் செய்யும்.
என்?
உலக மானிட வளர்ச்சியின்
முதல் குரலும்
அதன் வரி வடிவும்
தமிழே
என்ற
அறிஞர்களின் ஆராய்ச்சியையே
நமக்கு ஒரு "ஆற்றுப்படை "ஆக்கியவர்
கலைஞரே!
தமிழ் மொழி
சாதி ஆதிக்கத்தின்
மண்ணுக்கு அடியில் கிடந்தது.
கோவில் படிக்கட்டுகளில்
சமஸ்கிருத சத்தங்களின்  கூளங்களால்
மிதிபட்டுக் கிடந்தது.
கலைஞர் எனும் தமிழ் உரிமையெனும்
அந்த உணர்ச்சி
இங்கு திரண்டு எழுந்தபோது தான்.
வள்ளுவன் குறளின் தேர்
ஒரு கோட்டம் ஆனது.
அய்யன் வள்ளுவனை அந்த‌
குமரி முனையில்
உலகத்தினர் நிமிர்ந்து பார்த்தனர்.
சங்கத்தமிழ்
கலைஞர் பேனாவில்
ஒரு உயிர்ப்பை சிலிர்த்துக்காட்டியது.
தமிழின் தொன்மை ஒளி
எங்கும் கதிர் பரப்பியது.
இலக்கணம் என்றால்
விளங்காதவர்கள் விளக்கெண்ணை என்றார்கள்.
விளக்கம் எனும் வெளிச்சத்தால்
தொல்காப்பிய பூங்காவாக‌
தண்ணிய நிழல் பரப்பியவர் அல்லவா கலைஞர்.
நாற்காலி அரசியல் செய்த சில
நரித்தனங்கள்
அவரை தோற்கடித்து விட்ட
அந்த இருண்ட கண்டத்தில் தான்
நம் தமிழ் அவமானப்படுத்தப்பட்டது.
தமிழ்ப்பாடநூல் அட்டையில்
உயர்ந்து நின்ற நம் வள்ளுவனை
இருட்டடிப்பு செய்ய அவன் மீது
கருப்பு அட்டை ஒட்டப்பட்டது.
தமிழின் எதிரிகள் கெக்கலிப்புகள்
என்ன செய்ய முடியும்
நம் தமிழை?
இந்த வறட்டு மேகங்களுக்கு இடையேயும்
முரசொலியில் தினம் தினம்
தமிழின் மழை தானே!
கலைஞரின் பேச்சும் மூச்சும்.
அது
அச்சேறி  அச்சேறி
பவள விழா ஆகி காட்டியது
அவர் துவளவில்லை  என்று.
அந்த நாற்காலியின் சக்கரங்கள்
கீதைத்தேர்ச் சக்கரங்களையும் விட
உயர்ந்தவை.
ஏனெனில் கீதையோ
மனு நீதி கொண்டு
மனிதனை அமிழ்த்தியது.
அவர் எழுத்துக்களோ
மனிதனின் சமூக நீதியை
மீட்டுக்கொடுத்தது.
அந்தக் காவேரியைப்பற்றி
நாம் மகிழ்ந்து கொண்டிருக்கும்
வேளையில்
இதோ ஒரு "காவேரி "
நம் தமிழ்த்துடிப்புகளின்
"சக்கரவர்த்தியை"
புன்னகைச்சுடர்
பூக்க வைத்துக்கொண்டிருக்கிறது.
கலைஞர் வாழ்க!
தமிழ் வாழ்க!

=====================================================
நேரம் மாலை 06.50.... 27.07.2018





கமல் -ரஜனிகளும் கருத்துக்கணிப்புகளும்

கமல் -ரஜனிகளும் கருத்துக்கணிப்புகளும்
======================================================ருத்ரா

ஒன் இந்தியா தமிழ் இதழின்
கருத்துக்கணிப்புக் குழு
சமீபத்தில்
ரஜனி கமல் மீதே
ஒரு "பூவா? தலையா?"
விளையாட்டு விளையாடி இருக்கிறது.

சிறப்பாக செயல்படுவார்களா?
என்ற கேள்விக்கு
சிறப்பாக செயல் பட மாட்டார்கள்
என்று 69 சதவீதம்
கருத்து தந்திருக்கிறார்கள்.

சாதிப்பார்களா? மாட்டார்களா?
என்பதற்கு
மாட்டார்கள்
என்று 51 சதவீதம்
வாக்கு அளித்திருக்கிறார்கள்.

மக்கள் கடலில்
சிறு சிறு தீவுகளாக இருப்பவர்கள்
இந்த இருவருக்கும்
விசில் அடித்து
உற்சாகமாய்
குட்டிக்கரணம் எல்லாம் போட்டு
அதரவு தந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த பெரும்பகுதி மக்களின்
சிந்தனை ஓட்டம் என்ன?

இவர்கள் அவ்வப்போது
தங்கள் பொந்துகளிலிருந்து
வெளிப்பட்டு
ஏதாவது "அறிக்கை மத்தாப்பு"களை
கொளுத்திப்போட்டு விட்டு
அப்புறம் அடங்கிக்கொள்கிறார்கள்.

ஜிகினாக்கள் மின்னும்
தங்கள் படப்பிடிப்பு உலகம்
எனும் அந்தப்புரத்தையே
அவர்கள் "மய்யம்"என்றும்
"உலகம்"என்றும்
அடைகாத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த தமிழ்ச்சமுதாயம்
பெற்றிருக்கும்
வலிகளுக்கும் காயங்களுக்கும்
தங்கள் "சினிமா ஸ்கிரிப்டுகளையே"
பாற்கடல் கடைந்து
அமுதம் என்று நீட்டுகிறார்கள்.
ஆனாலும் அது நஞ்சு தான்
என்று
இந்த பெரும்பான்மை மக்கள்
புரிந்து கொண்டார்கள்.
அதன் வெளிப்பாடே இந்த சதவீதங்கள்!

மோடிகளும் அமித்ஷாக்களும்
அரசாங்க எந்திரத்தின் பற்சக்கரங்களின்
சீற்றத்துடன்
ரோடு ரோலர்களாய் வருகையில்
இவர்களின் அரிதார ஆயுதங்கள்
என்ன செய்யும்?

இவர்களை எப்படி நம்புவது?
இதுவே
அவர்களின் அடித்தளத்துக்கேள்வி.
இவர்களது
அட்டை செட்டிங்க்ஸ்ல்
மக்கள் பிரச்னைகளுக்கு
போர்க்களம் அமைக்க முடியுமா?
தமிழ் மக்களின் புண்பட்ட தளங்களை
இந்த "பாகுபலி" டைப் கிராஃபிக்ஸ்களால்
சரி செய்ய முடியுமா?

இந்த கேள்விகள் வீசியவையே
அந்த கருத்துக்கணிப்புகள்.

================================================================

அலை

அலை

========================================ருத்ரா இ பரமசிவன்



அலையா? கடலா?

எது நீ சொல்?

முட்டாளே!

ஒன்று தானே இன்னொன்று.

ஒன்றில்லாமல் இன்னொன்றில்லை.

ஹா!ஹா!ஹா!

யாரை ஏமாற்றுகிறாய்?

நீ

காதலா? பெண்ணா? சொல்!

இரண்டும் தான்.

அடிப்பாவி!

என்ன ஏமாற்று வேலை.

பெண்களையெல்லாம் தேடினேன்..பார்த்தேன்.

அங்கே காதல் இல்லை.

காதலையெல்லாம் தேடினேன்...தேடினேன்

அங்கே ஒரு மூளிவானம் தான் தெரிந்தது..

அடி முட்டாளே!

எங்காவது ஒரு இதயம் துடிக்க‌

கேட்டிருக்கிறாயா?

அந்த இதயமாய் நீ ஆகியிருக்கிறாயா?

அந்த இதயத்துக்குள்ளும்..இதயத்துக்குள்ளும்

ஆயிரம் ஆயிரம்

ரோஜா இதழ் அடுக்குகளாய்

உணர்ந்து களித்து இலேசாய் ஆகியிருக்கிறாயா?

அது வரை

நீ கல் தான்.

அதுவும் கல்லறையை மூடிக்கிடக்கும்

கல் தான்.

உன் அருகே

ஒரு பச்சைப்புல்

உன்னைப்பார்த்து கேலியாய்

சிரிப்பதை புரிந்து கொள்ளும்

ஒரு மெல்லிய மின்னல்

என்று உன்னைத்தாக்குகிறதோ

அன்று

நீயே..காதலின்

கடல்.

நீயே..காதலின்

அலை.

=========================================================
16.05.2015

புதன், 25 ஜூலை, 2018

ஓலைத்துடிப்புகள் -26

ஓலைத்துடிப்புகள் -26
====================================================ருத்ரா



உடலோடு உடலுதல் முறுக்கும் செந்தீ
=========================================================ருத்ரா


தமிழ் மொழியின் நுண்சொற்பாடு ஒரு ஒப்பற்ற மொழியியல் வெளிச்சம் காட்டும் தன்மையது ஆகும்.உடல் என்றால் உடம்பு என்று தான் நாம் அறிவோம்.அந்த சொல் ஒரு ஆழமான தத்துவம்
அல்லது மெய்யுணர்வு தரும் சொல்லாக அல்லவா இருக்கிறது.உடலின் இயல்பே உள்ளே இருக்கும் உள்ளம் என்பதனோடு எப்போதும் பொருது கொண்டே இருக்கும் இயல்பினது ஆகும்.இதுவே எல்லா மனித மற்றும் சமுதாய நோய்களுக்கு காரணம்.சங்கத்தமிழ் வரலாற்றில் இப்படியொரு ஆழமான ஆராய்ச்சிக்கு வித்திடும் சொல் ("உடல்") என்பதை நான் மேலே கண்ட (ஐங்குறு நூறு..பாடல் 66)செய்யுள் புகுந்த போது தான் திக்குமுக்காடிப்போனேன். (உள்ளே இருப்பதால் தான் அது உள்ளம் எனப்படுகிறது என்பது மற்றொரு "வியப்பு தரும் சொல்" அது)
அதனால் தான் திருமூலர் போன்ற சான்றோர்கள் "உடம்பையே" கோவில் ஆக்கினார்கள் போலும்.இந்த "உடலை" வைத்து என் சங்கநடைப்பாடலை இங்கு நான் எழுதியுள்ளேன்.ஓரம்போகியார் எனும் அந்த சங்கப்புலவர் உண்மையிலேயே இலக்கியம் எனும் இமயம் ஏறி நின்று ஒளி காட்டியவர் என்றே நாம் கொள்ள வேண்டும்.கீழ்வரும் செய்யுள் ஒரு சான்று.

"உடலினென் அல்லேன்; பொய்யாது உரைமோ;
யார் அவள், மகிழ்ந!தானே...தேரொடு,நின்
தளர்நடைப்புதல்வனை யுள்ளி,நின்
வளைமனை வருதலும் வௌவி யோளே?"

(ஐங்குறு நூறு பாடல் 66)

"கோபம் கொள்ள மாட்டேன்.சண்டையிடமாட்டேன்.(உடலுதல் எனும் சொல் தெறிக்கும் அந்த "முரணும் உணர்வு" தலைவியின் வாயிலிருந்து எப்படி வெளிப்படுகிறது பாருங்கள்) பொய்யாது உரையுங்கள்.யார் அவள்? தேரை இன்னும் அதன் உரிய இடத்தில் கூட நிறுத்தவில்லை.அதற்குள் நம் மகனை கொஞ்சுவதற்கு இறங்கி விட்டீர்கள்.அந்தப்பயலின் "குறு குறு" நடை உங்களை குழைய வைத்திருக்கிறது.அதெல்லாம் சரி.கூடவே வந்த நம் புதல்வனை அள்ளியெடுத்துச்செல்கிறாளே! யார் அவள்?" தலைவியின் நெஞ்சம் உலைக்களம் ஆகிறது.அப்படியும் அவனை"மகிழ்ந" என்று அழைப்பதில் ஒரு குத்தல் நிறைந்த உணர்வு இருப்பினும் அவனைக்கண்டதும் அவள் மகிழ்கிறாளே அந்த மின்னல் வெளிச்சத்தை வைத்துக்கொண்டு தானே "ஆண்" பெண் மீது இத்தகைய கொடும் ஆதிக்கத்தை செலுத்துகிறான் என்பதனையும் காட்ட மேலே வரிகளில் "சூடு" போடுகிறார் புலவர். நம் முதுகு மட்டும் புண்ணாகவில்லை.நம் உள்ளுணர்வே (ஆத்மா)அந்த சூடு தாங்காமல் பற்றி எரிகிறது.என் பாடலின் பொழிப்புரையை அடுத்த இதழில் எழுதுகிறேன்.



உடலோடு உடலுதல் முறுக்கும் செந்தீ
===================================================


பைஞ்சாய்ப் பாவைக்கு பொய்ப்பாலூட்ட‌
நீள்தல் ஆற்றா குடுமியவாய் திகழ்தரு
பைஞ்சுரைச் சிறுகாய் அன்ன முலையின்
அண்மை காட்டி அரும்பவிழ் நகையொடு
தன்மை படர்த்தி நின்னை அழைக்கும்
மடவள் என்னிவள் வந்திசின் ஓம்புமன்!
முடமுது நாரை இறை தேடி அலம்ப‌
ஞாழல் கொடுஞ்சினை காலுடன் அலம்ப‌
பதைப்பத்ததைந்த நெய்தல் அங்கழி
பனி இமிர் பைந்திரை படர் கரை சேர்ப்ப!
உடலோடு உடலுதல் முறுக்கும் செந்தீ
உறைநோய் உற்று நின்னை நோக்கும்
நரம்பார்த்த தீங்கிளவியள் குழறல் ஒல்லுமோ.
ஒள்மணல் படுத்தன்ன கருங்கோட்டெருமை
ஒத்த திண்ணிய அம்பி ஆங்கு அடைகரை
சிறைபெய் குருகு கணங்கொள் துறைவ‌
மடப்பம் தீண்டிய சில்மகள்ப் பெருநோய்
துடைப்புன ஆற்றுதி விழி தூஉய் கண்டிசின்.
வெண்முளை வித்திய வினைசெறி யன்ன‌
கண்முளை எல்கதிர் உள்சிறை ஒடுங்க‌
இருள் தின்ற ஒளியாய் அளியள் ஆனாள்.
உண்துறை ஆங்கு மண்மறை முன்னே
உய்யக்கொள்வாய் பெரும்பணைத் தோளாய்!

=======================================================ருத்ரா
16.06.2015.



பெண்ணே (2)

பெண்ணே (2)
====================================ருத்ரா


கோழி கூவியது என்று
திடுக்கிட்டு முழித்துக்கொள்வாய்.
பால் பாக்கெட்
வாசல் பை தொட்டிலில்
விழுந்து கிடக்கும்.
அக்கினிக்குஞ்சின் சிறகு விரித்து
பால் காய்ச்ச‌
நீ தீக்குச்சி கிழிக்கும்போது தான்
சூரியன் கூட கிழக்கில்
தீப்பற்றிக்கொள்ள
அவசரம் அவசரமாய்
கொட்டாவி முறித்துக்கொண்டு
அந்த பனமர ஓலைகளுக்கிடையே
கசிந்து வழிகிறான்.
உலகத்துக்கு சாவி கொடுக்கவே தான்
நீ கண்விழிக்கிறாய் என‌
உனக்குள் அல்காரிதம் போட்டது யார்?
தாய்மையின் ஒரு தனிப்பட்ட‌
ஒரு பூலியன் அல்ஜீப்ரா
உன்னை இயக்கத்தொடங்கி விட்டது.
மார்கழியில்
சாணிப்பிள்ளையாருக்கு
பூசணிப்பூ குடை நடுவதில் இருந்து
பொங்கல் நாள் பூரிப்பில்
அந்த பூமிப்பெண்ணும் நாணம் கொண்டாள்
என்று அவளுக்கு
"மெகந்தி யிட்டு"
புளகாங்கிதம் அடையும் வரைக்கும்
நீ வெறும்
பெண் மட்டும் அல்ல!
இந்த மண்ணின் கண் நீ.
அதோ வருகிறான் பார்!
உன் மறுபாதி!
ஆவ் என்று கோட்டாவி எழுப்பி
கையில் பேப்பருடன்
"காப்பி ரெடியா" என்று கேட்டுக்கொண்டு.
இதோ என்று
ஒரு புன்முறுவலுடன் நீட்டுகிறாய்.
காஃபியில் ஆவி பறக்கிறது.
அந்த காஃபி அவன்.
ஆனால் அந்த ஆவி   நீ !

=============================================
26.09.15


செவ்வாய், 24 ஜூலை, 2018

ரஜனி கமல் மீது பூவா? தலையா?

நம்பிக்கையின்மை அதிகம்

https://tamil.oneindia.com/news/tamilnadu/thanthi-tv-s-opinion-poll-on-rajinikanth-kamal-haasan-325651.html
புகைப்படம் மற்றும் செய்திகளுக்கு "ஒன் இந்தியா தமிழ்" இதழுக்கு நன்றி.



ரஜனி கமல் மீது பூவா?  தலையா?
=============================================ருத்ரா


ஒன் இந்தியா தமிழ் இதழின்
கருத்துக்கணிப்புக் குழு
ரஜனி கமல் மீதே
ஒரு "பூவா? தலையா?"
விளையாட்டு விளையாடி இருக்கிறது.

சிறப்பாக செயல்படுவார்களா?
என்ற கேள்விக்கு
சிறப்பாக செயல் பட மாட்டார்கள்
என்று 69 சதவீதம்
கருத்து தந்திருக்கிறார்கள்.

சாதிப்பார்களா? மாட்டார்களா?
என்பதற்கு
மாட்டார்கள்
என்று 51 சதவீதம்
வாக்கு அளித்திருக்கிறார்கள்.

மக்கள் கடலில்
சிறு சிறு தீவுகளாக இருப்பவர்கள்
இந்த இருவருக்கும்
விசில் அடித்து
உற்சாகமாய்
குட்டிக்கரணம் எல்லாம் போட்டு
அதரவு தந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த பெரும்பகுதி மக்களின்
சிந்தனை ஓட்டம் என்ன?

இவர்கள் அவ்வப்போது
தங்கள் பொந்துகளிலிருந்து
வெளிப்பட்டு
ஏதாவது "அறிக்கை மத்தாப்பு"களை
கொளுத்திப்போட்டு விட்டு
அப்புறம் அடங்கிக்கொள்கிறார்கள்.

ஜிகினாக்கள் மின்னும்
தங்கள் படப்பிடிப்பு உலகம்
எனும் அந்தப்புரத்தையே
அவர்கள் "மய்யம்"என்றும்
"உலகம்"என்றும்
அடைகாத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த தமிழ்ச்சமுதாயம்
பெற்றிருக்கும்
வலிகளுக்கும் காயங்களுக்கும்
தங்கள் "சினிமா ஸ்கிரிப்டுகளையே"
பாற்கடல் கடைந்து
அமுதம் என்று நீட்டுகிறார்கள்.
ஆனாலும் அது நஞ்சு தான்
என்று
இந்த பெரும்பான்மை மக்கள்
புரிந்து கொண்டார்கள்.
அதன் வெளிப்பாடே இந்த சதவீதங்கள்!

மோடிகளும் அமித்ஷாக்களும்
அரசாங்க எந்திரத்தின் பற்சக்கரங்களின்
சீற்றத்துடன்
ரோடு ரோலர்களாய் வருகையில்
இவர்களின் அரிதார ஆயுதங்கள்
என்ன செய்யும்?

இவர்களை எப்படி நம்புவது?
இதுவே
அவர்களின் அடித்தளத்துக்கேள்வி.
இவர்களது
அட்டை செட்டிங்க்ஸ்ல்
மக்கள் பிரச்னைகளுக்கு
போர்க்களம் அமைக்க முடியுமா?
தமிழ் மக்களின் புண்பட்ட தளங்களை
இந்த "பாகுபலி" டைப் கிராஃபிக்ஸ்களால்
சரி செய்ய முடியுமா?

இந்த கேள்விகள் வீசியவையே
அந்த கருத்துக்கணிப்புகள்.

================================================================



மின்னல் கயிறுகள்.

மின்னல் கயிறுகள்.
=======================================ருத்ரா

எதைப் பற்றி கவலைப்படுவது?
அல்லது எழுதுவது?
இதோ மூச்சிறைக்கும் ஏக்கவிழுதுகளின்
இறகுப்பேனாவில்
கிறுக்கத்துவங்கினேன்.
இளம்பிராயத்தின் இடுப்பு அரைஞாண் கயிறுகள்
திடீரென்று ஒரு நாள்
மின்னல் கயிறுகள் ஆனபோது...
அந்த பூச்சி மயிர்களின்
மீசை வரிசை
திடீரென்று
ஏதோ ஒரு வானத்தின்
ஏதோ ஒரு விண்மீன் கண்ணடிப்புகளில்
பிரளய அலைகளாய்
புரட்டி போடும்போது...
வெறும் கூழ்ப்பூச்சியும் சிறகுமாய்
இருப்பதை
"பட்டாம்பூச்சியாய்" ஆக்கி
தன் பகல்கனவுகளின்
ஹார்மோன் எழுச்சிகளை
அதில் "பிக்காஸோ" ஓவியக்கூடமாக்கி
பிரமை தட்டிப்போய் கிடப்பது...
எதற்கு
இப்படி வார்த்தை ஜாலங்களைக்கொண்டு
என்னைச்சுற்றி
ஒரு "கோக்கூன்"கட்டிக்கொண்டு...
சட்டென்று
புதிய சிறகுகளைக்கொண்டே
பழைய சிறகுகளை முறித்துத் தள்ளிவிட்டு
ஒரே சொல்லில்
உயிரோடு எனக்கு
பளிங்கு சதையில் பொன் குழம்பு ரத்தத்தில்
கல்லறை கட்டிக்கொண்டேன்
சாக அல்ல‌
சாகாமல் சாவதை
ஒத்திகை பார்க்க..
காதல் என்று....

===============================================
22.12.2016

திங்கள், 23 ஜூலை, 2018

சிமிட்டல்கள்

சிமிட்டல்கள்
==========================================ருத்ரா

ஒரு கண்சிமிட்டல்
புகைப்படத்தின் பின்னே
கோடி லைக்குகள் குவிந்தனவாமே.
ட்விட்டர்களின் புதை காட்டில்
ஒரு பஞ்சுமிட்டாய்ச் சிரிப்பு கூட‌
பிரபஞ்சங்களின் சாளரம் ஆகிப்போனது.

இங்கே
என்னவள்
ஒருநாள் "குமுக்கென்று"
ஒரு புன்னகைக்குமிழியை
என் மீது தூவினாள்.

அது
ஒரு மயிற்பீலியின்
மெல்லசைவுக்குள்
கோடி கோடி சிமிட்டல்கள்
சிலிர்த்து நின்ற அதிசயம்.

வானங்கள் கசக்கி எறியப்பட்டன.
மேக மூட்டங்களின் திரைகள்
கந்தல் ஆகின.
நட்சத்திரங்கள்
பொடிப்பொடியாகி விட்டன.
சூரியனே பிரசவிக்க முடியவில்லை.
அதற்கும்
அவள் கூரிய பார்வையின்
சிசேரியன் தேவைப்படுகிறது.
மயிற்பீலியின் கீற்றுகள் வழியே
விழி ஒழுகும்
அந்த தேன்மழைக்கு ஏங்கி
அங்கே ஆயிரம் நிலவுகள் ஊர்வலம்.

அந்த பீலி எப்படி இங்கே
ஒரு பில்லியன் டாலர் "வியப்புக்குறி" ஆனது?
ஆம் அந்த மயிற்பீலி
அவள் முகத்தை அல்லவா
அங்கே வருடிக்கொண்டிருந்தது!

=================================================





ஞாயிறு, 22 ஜூலை, 2018

ஓலைத்துடிப்புகள். 25

ஓலைத்துடிப்புகள்- 25
========================================ருத்ரா இ பரமசிவன்


உள்ளாற்றுக் கவலை புள்ளி நீழல்
========================================ருத்ரா இ.பரமசிவன்.

தண்ணுமை அதிர்கண் நடுங்குபு முரல‌
அஃதோர் வெண்ணிப்பறந்தலை அன்ன
கிளர்வில் என் வெள்நீள் ஆரிடை
உள் உகுத்துப் பெயர‌
குண்டுநீராம்பல் தழும்பல் புரிதலின்
அவள் ஆழ்விழி ஆங்கெனை புதைசெய்
மருட்கண் படுத்த நெருப்புழி
தண்ணிய கடலும் தடவுசினை காந்தள்
தொடுநிலை போன்ம் உயிர்மெய் விதிர்த்தேன்.
கடவுள் ஆலம் புள்ளினம் மொய்ப்ப
தண்பூங் கால் உறழ் தீம் நறவு தூய 
உள்ளாற்றுக் கவலை புள்ளிநீழல்
உறுநிலை யன்ன மீள்பேறு ஆண்டு
களிமிக்கூர எய்துவன் கொல்லோ 

=================================================
(பொழிப்புரை தொடரும் )


நான்....





நான்....
===========================================ருத்ரா

நம்பிக்கை என்பது
ஒரு ரோஜாவை கற்பனை செய்வது அல்ல.
எதிரே இருக்கும்
ஒரு பொட்டலில்
யாராவது இந்த பிரபஞ்சம் முழுவ‌தையும்
தூக்கி வையுங்கள்.
நான் என் வாயைக்கொண்டே
"பூ" என்று ஊதித்தள்ளிவிடுவேன்.

ஆம்
அந்த "பூ"வை என் கோட்டில்
செருகிக்கொண்டு தான்
நடந்து வருகின்றேன்.
ஒரு நாள்
"ஆன் லைன்" பிசினெஸ்ஸில்
இந்த பூமி முழுவதையும்
பில்லியன் பில்லியன்....பில்லியன்
டாலர்களாக்கி
என் கோட்டுப்பைக்குள்
போட்டுக்கொண்டு விடுவேன்.

நீங்கள் மூச்சு விடுவதெல்லாம்
என் சின்ன சின்ன‌
"ஜிகா பைட்" கணினிபொறியில்
டவுன் லோட் ஆகி விட்டபிறகு
உங்கள் நாடி ஜோஸ்ய பிரசன்னங்கள்
எல்லாம்
என் குவாண்டம் "க்யூபிட்"களில் தான்.
உங்கள் ராசிச்சக்கரங்கள்
என் விரல் சொடக்குகளில்.
ஏதாவது ஒரு 2032 மே மாத ரெண்டாம் தேதியில்
சுனாமியின் ஆயிரம் மடங்கு
நாக்குச்சுருட்டல்களில்
ஒரு கண்டம் காணாமல் போய்விடும்
என்று அறிவிப்பேன்.
அதற்கு ஆதாரமாய்
விண்வெளியில் பல நூறு ஒளியாண்டு
தூரத்தில் நான் நிறுத்தியிருக்கும்
"சேடலைட்"ட்டில் எடுத்த‌
புகைப்படம் காட்டுவேன்.
அந்த பேரிடரை நிகழாமல் தடுக்க‌
அந்த ஆப்ரிக்காவின் அடர்ந்த காட்டில்
இருக்கும்
முண்டைக்கண்கள் பிதுங்க‌
ஒரு கோணாமாணா கபாலத்தில்
குடியிக்கும் கடவுளின் மந்திரத்தை
உச்சாடனம் செய்ய வைக்க‌
எல்லோரும்
எனக்கு இத்தனை ஆயிரம் டாலர்கள்
கட்டவேண்டும்
என்று எஸ் எம் எஸ்
உமிழப்பட்டுகொண்டே இருக்கச்செய்வேன்.
இந்த "அபோகேலிப்ஸ்  கிராஃபிக்கு"கள்
உங்கள் ரத்தத்தை உறையவைத்து விடும்.
அந்த பயம் தான்
என் மூலதனம்.
மூன்றாம் உலகப்போர்கள் தேவையில்லை.
"கம்பியூட்டர் கேம்ஸ்"போதும்
எல்லா மூளைகளையும்
எல்லா இதயங்களையும்
கசக்கியெறிந்து எங்கோ
ஒரு "அன் ரிட்ரீவபல்" மெமரிக்குள்
கடாசி விட!
ஆம்
கண்ணுக்குத் தெரியாமல்
டாலர் மழை கொட்டவைக்கும்
கார்ப்பரேட் தான்
நான்.

========================================================

சனி, 21 ஜூலை, 2018

காக்கி என்பது நிறம் அல்ல!

Chennai Police Helps Pregnant Women in Railway Station



 சில நேரங்களில் தமிழக போலீசார் செய்யும் செயல்கள் நம்மை திக்குமுக்காட செய்துவிடகிறது. திடீரென்று உணர்ச்சிப் பிழம்பான காரியங்களை செய்துவிட்டு, "காவல்துறை உங்கள் நண்பனேதான்" என்பதை அடிக்கடி நமக்கு பறைசாற்றி வருகின்றனர். அதற்கு ஒரு உதாரணம்தான் இது. நேற்று தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று சிக்னல் கோளாறு ஏற்பட்டுவிட்டது. அதனால், அந்த ரயிலானது, கோட்டை மற்றும் பூங்கா ரயில் நிலையங்களின் இடையே நின்றுவிட்டது. பாதி வழியில் ரயில் நின்றுவிட்டதால், பெரும்பாலான பயணிகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதனால் ரயிலிலிருந்து இறங்கி நடந்து சென்றுவிடலாம் என்று ஒவ்வொருவராக இறங்க தொடங்கினர். அப்போது அமுதா என்ற கர்ப்பிணி பெண்ணும் கீழே இறங்க முயற்சித்தார். நடைமேடை இல்லை என்பதாலும், படிக்கட்டுகள் உயரமாக இருந்ததாலும் அமுதாவால் இறங்க முடியவில்லை. வெகுநேரம் எப்படி ரயிலை விட்டு இறங்குவது என தெரியாமல் தவித்தார். இப்படியே 2 மணி நேரம் ஆகிவிட்டது. அமுதாவால் கடைசிவரை கீழே இறங்கவே முடியவில்லை. அப்போது போலீசார் இரண்டு பேர் அங்கு வந்தனர். அவர்களது பெயர் தனசேகர், மணிகண்டன். அமுதா கீழே இறங்க முடியாமல் தடுமாறி கொண்டிருப்பதை கண்ட அவர்கள், திடீரென ரயிலின் நுழைவு வாயிலில் படிக்கட்டு போல குனிந்து நின்றனர். இப்போது அமுதாவை தங்கள் மீது கால்வைத்து கீழே இறங்குமாறு சொன்னார்கள். அமுதாவும் ஒரு சிறு தயக்கத்திற்கு பின்னர், தன் கால்களை போலீசார் இருவரின் முதுகுகளின் மீது வைத்து கீழே இறங்கினார். இதேபோல அங்கு கீழே இறங்க முடியாமல் தவித்த வயதானவர்களுக்கும் இதேபோல படிக்கட்டு போல குனிந்து நின்றனர் இரு போலீசாரும். போலீசாரின் இந்த மனிதநேய மிக்க செயலை அங்குள்ளவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே பாராட்டி வருகிறார்கள். புல்லரிக்க வைத்த அந்த இரண்டு போலீசாருக்கும் பெரிய சல்யூட் ஒன்று நாம் அடித்தே ஆக வேண்டும்!

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-police-helps-pregnant-women-railway-station-325472.html

tamil.oneindia.com க்கு மிக்க நன்றி.

காக்கி என்பது நிறம் அல்ல!
==========================================ருத்ரா இ பரமசிவன்.

காக்கிச் சட்டை என்பது
வெறும் விடைத்த
கஞ்சி போட்டு தேய்க்கப்பட்ட
உடை அல்ல,
சமுதாயத்தின்
சட்ட  ஒழுங்கு அமைதிக்கு
"லாட்டி" சுழற்றும் வெறும் எந்திரத்தின்
உடையும் அல்ல.
அவ்வப்போது
எங்கோ எதற்கோ  கசியும்
அமுத ஊற்று எனும்
மானிட நேயத்தின் சுடரும் தான்
அது!
ஒரு உயிருக்குள் இன்னொரு உயிர்
சுமக்கப்படும் அந்த தாய்மையே
நம் கண்முன் தெரியும்
ஒரு மகத்தான பிரபஞ்சம்.
அதன் "பிக் பேங்க்"என்பது
உயிர்ப்பாய் விஸ்வரூபம் எடுத்து
தாயும் சேயுமாய் நமக்கு
தரிசனம் தரும் இன்னொரு
மகத்தான பிரபஞ்சத்தின்
மாணிக்க காட்சி ஆகும்.
இதை காக்கும் பெருந்தெய்வங்களான
நம் மதிப்பிற்குரிய
திரு.தனசேகர்
திரு,மணிகண்டன்
ஆகிய இருவரும்
நம்மால் விறைப்பாக
ஒரு பெரிய சல்யூட் வைக்கப்பட வேண்டியவர்கள்.
வழக்கமான "போலீஸ்"விருதுகள்
அவர்களுக்கு  வழங்கப்பட  இருக்கலாம்.
இவர்கள் காட்டிய அந்த
கடமை கண்ணியம் கட்டுப்பாடு எனும்
மானிடப்பேரொளிக்கு
"மானிட ரத்னா"
எனும் விருது அறிவிக்கப்பட்ட வேண்டிய
கட்டாயமான தருணங்கள் இவை.
இவர்களுக்கு நம்
மனமார்ந்த பாராட்டுக்கள்!!

===================================================



என்ன செய்வது இந்த சன்னல் கம்பிகளை?





என்ன செய்வது இந்த சன்னல் கம்பிகளை?
======================================================ருத்ரா

எத்தனை தடவை தான்
இந்தக் கம்பிகளை.
என் கண்களால் வருடுவது?
ஒரே ஒரு தடவை
அந்த கம்பிகளில்
நிலவின் பிம்பம் பிதுங்கி சிரித்தது
அப்புறம் காணவே இல்லை.
அந்த "கம்பி மத்தாப்புகளில்"
தினமும் ஒரு வெளிச்சத்தைப்பார்த்தேன்
அவள் முகம், காட்டாத
அந்த வெறுமையிலும்
தினமும் புதிது புதிதாய்
பூக்கள் தான்.
கதவுகள் சாத்தப்படும் சத்தம்
கேட்டு ஓடுவேன்.
அவள் அம்மா கதவுகளுக்கு
கொக்கி மாட்டுவது மட்டுமே
தெரிந்தது.
அந்த கொக்கியில்
அவள் எறிந்த
பொன் தூண்டில்கள்
என் மனம் தைத்ததில்
துடித்து துடித்து
வதை படுகின்றேன்.
இந்த கம்பிகளை மராமரம் ஆக்கி
அம்புவிடும்
அவள் கண்கள்
என் இருதய ஆழத்தில்
குத்திட்டு நிற்கிறது.
அந்த இரும்புக்கம்பிகளின்
வானத்தில்
ஒரு தடவையாவது
நட்சத்திரங்களின்
சாரல் தெறிக்காதா?
இன்னும்
கம்பிகள் எண்ணிக்கொண்டு தான்
இருக்கிறேன்.
அவள் எப்போது எடுப்பாள் என்னை
"ஜாமீன்"?

==================================================
26.01.2016

வெள்ளி, 20 ஜூலை, 2018

ஓட்டெடுப்பு

ஓட்டெடுப்பு
‍‍‍‍___________________________________ருத்ரா

உழுதவன்
கணக்கு பார்த்தான்
மரணங்களே மிச்சம்.

படித்தவனுக்கு
மலடாகிப்போன‌
எழுத்துக்களே மிச்சம்.

ஓட்டு போட்டவனுக்கோ
கணிப்பொறி தேய்த்து தேய்த்து
விரல்களே மிச்சம்.

அரசியல்வாதிக்கோ
தேர்தலுக்குத் தேர்தல்
வாக்குறுதிகளே மிச்சம்.

ஜனநாயகம்
ஓட்டெடுத்துப்பார்த்தது
சர்வாதிகாரமே மிச்சம்.

-----------------------------------------------------------------------




வியாழன், 19 ஜூலை, 2018

ஒரு நம்பிக்கையில்லா தீர்மானம்

ஒரு நம்பிக்கையில்லா தீர்மானம்
=================================================ருத்ரா

அவ்வப்போது
இந்த பாராளுமன்றம்
விழித்திருக்கிறதா?
இல்லையா?
என்று
சோதித்துப்பாருக்கும்
சோழி விளையாட்டு தான் இது.
எண்ணிக்கைகள்
உருட்டும் தேரோட்டம் தான்
நம் ஜனநாயகம்.
இது வெற்றி பெரும்போதெல்லாம்
இதன் அர்த்தம் புரிந்து கொள்ளப்படுகிறது
மக்கள் தோற்றுவிட்டார்கள் என்று.
இரண்டு கால் மனிதர்கள்
நான்கு கால் நாற்காலிகளால்
தோற்கடிக்கப்படுவதே
நமக்குப் பழகிப்போன மரபு.

இப்போது அந்த பரமார்த்த சீடர்களைப்போல‌
இந்த ஆறு
விழித்துக்கொண்டிருக்கிறதா? இல்லையா?
என்று
பார்க்கப்போகிறார்கள்.
அந்த பரமார்த்த குரு கதையில்
சீடர்கள் கையில் எரியும் கொள்ளியை
நீருக்குள் வைத்து
ஆற்றை சோதித்துப்பார்ப்பார்கள்.
அது "சுர்ர்ரென்று" இரைச்சல் இடும்.
"அய்யய்யோ விழித்துக்கொண்டிருக்கிறது"
என்று ஓடுவார்கள்.
அந்த அணைந்த கொள்ளியை
மறுபடியும் இட்டுப்பார்த்தால்
அவர்கள் புரிந்து கொண்டிருக்கலாம்
இந்த ஆறு தூங்குகிறது என்று!
ஆர்ப்பாட்டத்தில் பெற்ற எண்ணிக்கையின் வெற்றி
இப்போது
மக்களிடம் "அணைந்து" போயிருக்கலாம்!
மக்களின் எழுச்சியும் உணர்வும்
உண்டாக்கும் அலைகளை
எப்படி அளப்பது?
இது இறுதி ஆண்டு.
முதல் ஆண்டில் கணிப்பொறியைத்
தட்டிய அதே "விளையாட்டுத்தனம்"
இப்போது வடிந்து போயிருக்கலாம்.
அல்லது வேறு விளையாட்டுகள் விளையாட‌
அவர்கள் விரும்பலாம்.
ஆறுகள் நீரோடும் மணலோடும்
திருடப்பட்டுவிடும்
இந்த பொருளாதார சூதாட்டங்களில்
வளர்ச்சி என்பதே இங்கு
கானல்நீர் ஆற்றில் நடக்கும்
கும்பமேளாக்கள் தானே!
பகடைகள் கீதையை போதிக்கின்றன.
அதன் சக்கரங்களோ
மக்களின் ரத்தங்கள் வடிகட்டித்தந்த‌
வியர்வையிலும் கண்ணீரிலும்
குருட்சேத்திரங்கள் நடத்திக்கொண்டிருக்கிறன.
நம் அரசியல் சாசனம் ஒன்றும் இதிஹாசங்கள் அல்ல‌
கொத்துக்கொத்தாய் கதைகள் சொல்வதற்கு.

===========================================================


"நான் யார்?"






"நான் யார்?"
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍================================================ருத்ரா

திருவண்ணாமலை
பாறையிடுக்குகளில்
பள்ளி கொண்ட முனிவர்
ரமணர்.
மனத்தின் படர்ந்த வெளியில்
மேய்ந்தவர்.
ஒரு தூசு கூட‌
இந்த மேனியில்
கோடிக்கணக்கான
டன் எடையுள்ள பாறை தான்
அவருக்க்கு!
அந்த உறுத்தலில்
அவருள் முளைவிட்ட கேள்வி தான்
"நான் யார்?"
அவர் நினைத்தார்
இந்த பிரபஞ்சத்தையே கூட‌
மூடி மறைக்க
ஒரு கோவணம் போதும் என்று?
அது தான்
அந்த "நான் யார்?" என்ற கேள்வி.
ஒரு சமணத்துறவிக்கு
அதுவும் தேவையில்லை.
கேள்வியே கேட்கவேண்டாம்.
வெட்கம் எதற்கு?
ஆசை எதற்கு?
வேதனை எதற்கு?
பிரபஞ்சம் தன்னையே
மூளியாய்
உற்றுப்பார்த்துக்கொண்டிருப்பதே
பிரம்ம நிர்வாணம்.
ஆன்மீகம்
என்பதும்
இப்படி கண்ணாடியை
சில்லு சில்லாய் நொறுக்கி
ஒவ்வொன்றிலும்
தன் பிம்பதையே
பார்த்துக்கொண்டிருப்பது தான்.
இந்த இதயத்துள்
வெண்டிரிக்கிள் ஆரிக்கிள்
அறைகள் மட்டுமே
உண்டு
அதனுள் ரத்தம் ஆடும்
நர்த்தனமே ஆன்மீகம்.
அது தான்
இந்த உலகமே உறையும் இடம்.
அதில்
சூலங்கள் இல்லை.
சிலுவைகள் இல்லை.
பிறைகளும் இல்லை.
மலைகளை
கற்பாளங்களாக‌
வெட்டி வெட்டித்
தின்னும் ஆசைகள் இல்லை.
ஆற்றைச்சுரண்டி
மணலும் நீரும்
கொளையடிக்கப்படவேண்டும்
என்ற பணவெறி இல்லை.
என் மதம் உன் மதம்
என்ற கொலைகள் இல்லை.
மனித வர்ணங்கள் இல்லை.
இந்தப்பூவை
கோடரி கொண்டா பறிப்பது?
ஆன்மீகம்
மானிடப்பூ என்றால்
அரசியல் எனும்
கோடரிக்கு
அங்கு வேலையே இல்லை.
அப்படியென்றால்
ஆன்மீக அரசியல் என்பது
யாரோ
யாரையோ
ஏமாற்றுவது தான்.
அந்த "நான் யார்?"
அதற்கு எதிரே உட்கார்ந்திருக்கும்
அந்த "நீ யார்?"

ஓட்டு வைத்திருப்பவனே.
நன்றாய் உணர்ந்து கொள்
அந்த இரண்டுமே
அந்த கணினிப்பொறியின்
"பட்டன்" தான்!

====================================================


செவ்வாய், 17 ஜூலை, 2018

புழுக்களும் மனிதர்களும்




புழுக்களும் மனிதர்களும்
========================================ருத்ரா இ.பரமசிவன்.

காந்தித்தாத்தா
என்ற சொல்
முள்ளுமுனையில் கூட‌
மூணு குளம் வெட்டும்.
மூணு குளமுமே
பாழ் என்றாலும்
வெட்டிய இடம் எல்லாம்
அவர்
ரத்தமும் வேர்வையும் தான்.
சுதந்திரத்தை வாங்க‌
அடிமைத்தனத்தை
பண்டமாற்றம் செய்யச்சொன்னார்.
அப்படி மாற்றப்பட்டதை விடவும்
மாட்டிக்கிடந்ததே
நமக்கு பரம சுகம்.

கத்தியின்றி ரத்தம் இன்றி
யுத்தம் புரிவதன் உருவகமே
அந்த அண்ணல்!
உருவமே
மூளியாய் நின்றவர்களுக்கு
கத்தியும் புரியவில்லை
ரத்தமும் புரியவில்லை.
அதனால்
நம் ரத்தமே நமக்கு
தர்பூஸ் ஜூஸ்.
நம் அன்னையர்களே
நம் அண்ணன்களே
நமக்கு கைமா.
கள்ளு வேண்டாம் என்று
தென்னைகளை வெட்டிச்சாய்த்த‌
சினத்தின் எரிமலைகள் தான் நாம்.
இப்போது
ஃபாக்டரியும்
ரசம் நுரைக்கும்
கலர் கலர் கண்ணாடி பாட்டில்களுமே
நம் சாம்பல் மேடுகள்.
மூடி கடித்து கழற்றி யெறி.
சீசாவை கூசாமல்
வயிற்றுக்குள் கவிழ்.
சைடு டிஷ்?
அதோ
வாக்காளர் பட்டியலில்
வெயிட்டாக‌
"காந்தியின் புன்னகை" !
அமரர் ஆனவர்
எத்தனை தடவை தான்
இப்படி கொச்சைப்படுத்துவீர்கள்?
இதற்கும் கணக்கு கேட்டு
யாராவது பிராது கொடுக்கலாம்.
எண்ணிக்கை தெரியாதவர்கள்
அங்கே
தராசு தூக்கிக்கொண்டிருந்தால்
என்ன செய்வது?
மதிப்பீட்டாளர்கள்
இந்த "வாக்கு வங்கியில்"
தேய்மானம் போட்டு போட்டு
ஜனநாயகம் இங்கே
காணாமல் போனது!
உம்ம்...
எழுந்து நில்லுங்கள்.
அந்த "மகான் கேட்கவில்லை"
கேட்பது
அந்த பீரங்கிக்குண்டுகள்!
தந்தையே
உனக்கு சிரம் தாழ்த்துகிறோம்.
தீக்கொழுந்துகள் உன்னை
தின்றுவிட்டாலும்
மண்ணின் அடியில்
நீ
இன்னும் அந்த
புழுக்களுக்கு உன்னை
புசிக்கக்கொடுப்பதை
பார்க்க முடிகிறது.
எங்கள் கண்கள் கசிகின்றனவே!

==============================================
31.01.2016 ல் எழுதியது.



அசோகமித்ரனும் ஜெயமோகனும்

அசோகமித்ரனும் ஜெயமோகனும்
=====================================================ருத்ரா

இவர்கள் இருவரின் எழுத்துக்களையும்
தின்று செரித்து
"செர்ரி ப்ளாஸமாய்" புஷ்பித்துக்கொண்டிருப்பதாக‌
புல்லரிக்கும்
ஆர்.வி எனும் ("சிலிகான் ஷெல்ஃ ப்")
நம் எழுத்தாள நண்பர்
அவர்கள் இருவரில்
முதல்வரை இரண்டாமவர்
மட்டம் தட்டியது பிடிக்காமல்
தமிழ் மணம் வலைப்பூவில் தன்
எழுத்து மகரந்தங்களை கொட்டித்தீர்த்திருக்கிறார்.
மிகவும் அருமையான பதிவு.

ஆனால் அவர்கள் இருவருமே
சொல்லுக்குள் நிழலாட்டம் ஆடுபவர்கள்.
அவர்கள் சிறந்த எழுத்தாளர்கள்.
ஆனால்
சமுதாய நரம்புப்புடைப்புகள்
கொஞ்சமும்
தன் பேனாக்கூட்டுக்குள்
கரு தரிக்க விடக்கூடாது என்பதில்
கவனமாக இருப்பார்கள்.
ஒரு பிடி சோறு பற்றி
எழுதினாலும்
அதில் சோப்புக்குமிழிகளில் தோன்றும்
நெழியல்களும் வண்ணங்களும்
அல்லது வயிற்றுப்பசியின்
"சில்ஹௌட்"சித்திர விளிம்பின் சோகங்களும் கூட‌
இருக்கும்.
இருவரும் தன்னைச்சுற்றிய இறுக்கத்தின்
அசுரப்பிடியின்
கோரத்தை உடைத்துக்கொண்டு வரும்
பட்டுப்பூச்சிகளாக‌
வண்ணக்குழம்பின் லாவாவை
வாக்கியங்களுக்குள்
வடிவமைப்பார்கள்.
ஆனால் அந்த சிகப்பு விடியல் மட்டும்
அவர்களுக்கு
ஆபாசமோ ஆபாசம்.
இந்த வரிசையில்
ஜெயகாந்தன் கொஞ்சம் விலகித்தான்
நிற்கிறார்.
அந்த ஒரு பிடி சோற்றில்
தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும்
வியர்வையின்
விழிப்புகள் தரும் "அனாடமியை"
எழுத்து உமிழல்களில்
சூடு பறக்க நமக்கு படைத்திருக்கிறார்.
ஹேலுசினேஷன் என்பது மட்டுமே
இந்த மேட்டிமைக்காரர்களின்
தலையணை மேடுகள்.
அந்த சஞ்சரிக்கும்
கனவுக்காடுகள்
சில சமயங்களில் சப்பாத்திக்கள்ளிகளின்
முட்கள் கொண்டு
அதை ரவி வர்மா ஓவியமாக்கி
ரத்தச்சேறு தெளித்து
விளையாடிக்கொள்ளும்.
ஆர்.வி அவர்கள்
இந்த மயக்கப்போதையின்
கஞ்சாப்பூக்களை
தன் பூக்குவளையில் செருகிக்கொண்டு
சித்திரவதைப்படத்தேவையில்லை.
எப்படி எழுதினாலும்
வேத இனிப்பு சுலோகங்களை
வேறு வித பரல்கள் ஆக்கி
தங்கள் கிலுகிலுப்பைகளில்
குலுக்கி ஓசை எழுப்பும்
இந்த "அடிப்படை வாதிகளின்"
அடிக்குறிப்புகளை உணர்ந்துகொள்ளும்
நுண்மாண் நுழைபுலத்தோடு
விழித்திருங்கள் நண்பர்களே!
மரப்பாச்சிகள் இல்லை நீங்கள்.
இவர்கள் சொடுக்கும்
மதத்தின் அதிரடி மின்னல்களில்
பார்வை இழப்புகள் ஏற்படாமல்
காத்துக்கொள்ளுங்கள்
சிந்தனைச்சிற்பிகளே!

========================================================================






திங்கள், 16 ஜூலை, 2018

சத்தம்.




சத்தம்.

=======================================ருத்ரா



அழுதாயா? என்ன?

உன் இமையோரம்

திரண்டு நின்ற முத்துக்கள்

அந்த ஆழத்தை காட்டி விட்டனவே!



ஸீ யு ! பை ! என்றாயே!

ஆங்கிலத்தில்

உன்னை மறைத்துக்கொண்டாய்!

அந்த "ஸீ " என்பது

இந்தக்கடல் தானா?



சங்கத்தமிழ்

"நெய்தலில்"

அத்தனைக்கடல்களின்

அலைகளும்

உன் இமையோரப்

பாட்டாய்தான்

நங்கூரமிட்டு இங்கே

உன்னை ஒலிக்கின்றன.



அந்த "கல் பொரு சிறு நுரையில்"

காயம் பட்டு  பட்டு

இந்தக் கடலெல்லாம்

ரத்தம் தான்!

என் இதயமெல்லாம்

உன் சத்தம் தான்!



=========================================================


ரஜனியின் ஒரே வழி

ரஜனியின் ஒரே வழி
============================================ருத்ரா

"என் வழி தனி வழி"
என்ற ரஜனிக்கு
இப்போது இருப்பது ஒரே வழி!
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற‌
அந்த "முட்டுச்சந்தே"
அவர் காட்டும் வழி.
ஆன்மீக அரசியலின்
ஆனா ஆவன்னா
படிக்கத்தொடங்கி விட்டார்.
எங்கோ இருக்கிற
ஆண்டவன் எதுவோ சொல்வான்
இங்கே இருக்கிற‌
அருணாசலங்கள்
தோப்புக்கரணம் போட்டு
தோற்றுக்கொண்டே இருக்கவேண்டுமா?
அந்த ஆண்டவன்
நான்குவர்ணத்தில்
ஒரு கொடியை அசைத்தாலும்
இவர்கள் அடங்கி ஒடுங்கி
சமாதிக்குள் போய்விடவேண்டுமா?
வளர்ச்சி வேண்டும் வளர்ச்சி வேண்டும்
என்று
பசுமையான வயல்கள் எல்லாம்
மயானம் ஆகவா வேண்டும்?
பொருளாதார சித்தாந்தங்கள் எல்லாம்
புதைகுழிக்குள் போகவா
இந்த எட்டுவழிப்பாதை?
அந்த எட்டாத உயரத்தின் கார்ப்பரேட்டுகளுக்கா
இந்த எட்டுவழிப்பாதை?

ரஜனி அவர்களே!
தமிழ்நாடு முழுவதும் இந்த‌
"தார்ப் பாம்புகளால்" விழுங்கப்பட்டபின்
மிஞ்சுவது
வெறும் தார்ப்பாலவனம் தானே!
தண்ணீர் ஓடும் ஆறுகள் எனும்
ரோடுகளால்
இந்த பாரதத்தை இணைப்போம்
எனச்சூளுரைத்து விட்டு
விவசாய மக்களின்
கண்ணீர்நதிகளைக்கொண்டா
இங்கே இணைக்கப்போகிறீர்கள்?

"ஒருவன் ஒருவன் முதலாளி"
என்று நீங்கள் பாடிய போது
மதங்களையெல்லாம் தாண்டிய‌
ஆண்டவனைத்தான் குறிக்கிறீர்கள்
என்று நினைத்தோம்.
இப்போது
ஆண்டவனைக்கூட எங்கோ கடாசி விட்டு
ஒரு சர்வாதிகாரம் எனும் மதத்தின்
அரிதாரம் பூசிக்கொண்டு அல்லவா
எங்கள் முன்
நடிக்காமல் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

நான் ஒரு தடவை சொன்னா
அது நூறு தடவை சொன்ன மாதிரி
என்ற சினிமாத்திரையின்
உங்கள் "பஞ்ச் கீதை"யில்
பஞ்சம் ஆகிப்போனது
நியாயமும் தர்மமும் தான்.
ஏனெனில்
அந்த "நூறு"குரல்களுக்கு
சொந்தக்காரர்களான
அந்த மர்மத்தனம் நிறைந்த‌
அரக்குமாளிகைக்காரர்களான‌
கௌரவர்களுக்காக அல்லவா
இப்போது
பேசத்தொடங்கியிருக்கிறீர்கள்!

================================================







ஞாயிறு, 15 ஜூலை, 2018

பரிணாமம்

பரிணாமம்
====================================ருத்ரா இ பரமசிவன்


எதிரிகளை மயக்க‌
உடம்பு வண்ணங்கள்.
குச்சி போல் ஒடிந்து கிடந்து
உட்காரவந்த சிறு பூச்சியை
பலகாரம் பண்ணிவிடுதல்.
பாறை போல் படர்ந்து கிடக்கும்
இடத்தில்
குழு மீன்கள்
திடீரென்று காணாமல் போதல்.
பாறையே நாக்கு ஆகிவிடும்
பகீர் வேட்டை.
அழகாய் வாய் பிளந்து
இதழ்கள் முறுவலித்து
ஆடும் கிண்ணப்பூக்களில்
சின்ன வண்டுகள் சிறை.
மனிதனின் மூளை
விரிந்து பரந்து
ஒளி உமிழும் ஆலவிழுதுகளாய்
வெளியே பிதுங்கி
கேலாக்சி விண்மீன் மகரந்தமாய்
தூவி மயக்கி
குவாண்டம் கம்பியூட்டிங்கில்
"அவதார்"புகை மண்டலமாய்
கிராஃபிக்ஸ் காட்டுகிறது.
புடைத்த தொடையுடன் வாலுடன்
முண்டைக்கண் உருள்விழியிலும்
காதலின் பாதரசம் ஊற்றி
...
கடைசியில் அங்கும்
மனிதன் கற்றாய் கரைய‌
ஒன்று ஒன்றை விழுங்கி..
கீதை(13.11) சங்கர பாஷ்யம் கூட‌
வர்ணம் பூசி அழைக்கிறது.

"மயி ச அனன்யயோகேன பக்தி அவ்ய அபிசாரிணீ
விவிக்த தேச சேவித்வ அரதி(ர்)ஜன சம்ஸதி"

பக்தி
காதல்
காமம்
கம்ப்யூட்டர்..எல்லாம் பிசைந்து
நியூரானின்
சைனாப்டிக் ஜங்ஷனில்
ஜெல்லி மீன் மயிர்த்தூவல்களால்
பர்கின் ஜே செல்களாய்
ஸ்லோகன்களில் வரிபிளக்கின்றன.

அந்த "அனன்யயோகம்"....
மக்கள் சுவாசங்களையெல்லாம் விலக்கிய‌
ஒரு "உன்மத்த" மோனம் எனும்
"என்னில்" (மயி)மனம் வை
என்கிறான் கிருஷ்ணன்
கூவி கூவி அழைத்து.



சோமச்செடியை நசுக்கி சாறு பிழிந்து
ரிக்குகளில் நுரைத்தாலும் சரி நொதித்தாலும் சரி..
விழிகள் நிலைகுத்தி
செருகிக்கொள்ள வேண்டும்.
மனசு...
மனசும் மனசும் புணர்ந்து
அறிவு அறிவைக் கலந்து
ஒளிக்கும் நிழலுக்கும்
நழுவிய அந்த‌
பிம்பத்தை
கையில் பிடியுங்கள்..
மின்னலைக்காய்ச்சி வடித்த சாராயம் இது.
ஞானத்தின் போதை அஞ்ஞானம்.
அஞ்ஞானத்தின் சிகரமே இந்த மெய்ஞானம்.
"ஹிக்ஸ் போசானை" கையில் பிடித்துவிட்டு
செர்ன் எனும்
நுணணணுக்கூடத்து வளையங்களின்
வளையல்களின்
ஒரு கிளுகிளுப்போசைக்கு
தவம் இருக்கும்
அந்த விஞ்ஞானம்
இன்னும் ஒரு கிண்ணத்தைக்கையில் ஏந்திக்கொண்டிருக்கிறது..
பரிமாணத்தின் கிண்ணத்தை.

============================================================
05.08.2014





சனி, 14 ஜூலை, 2018

குவாண்டம் கம்பியூட்டிங்கில் சிங்கில் க்யூபிட் ஆபரேஷனஸ்

குவாண்டம் கம்பியூட்டிங்கில் சிங்கில் க்யூபிட் ஆபரேஷனஸ்

==============================================================ருத்ரா


(அளபடைக் கணினியத்தில் ஒற்றை "அளபடைத்துண்டு"களின்
செயலியம்)

அளபடைக் கணினியில் க்யூபிட் எனும் அளபடைத்துண்டுகளை வைத்து
எவ்வாறு கணினிய வாசல்களை (கேட்ஸ்) அமைக்கிறார்கள் என்பதை நாம் உற்று நோக்கினால் நவீன குவாண்டம் கணினி (அளபடைக் கணினி) நம்மை வியக்கவைக்கும் ஒரு அறிவியல் நுண்துளைக்குகை வழியாக எங்கோ அழைத்துச்செல்வதைக்கண்டு பெரு மகிழ்ச்சி அடையலாம்.

ஒற்றை அளபடைத்துண்டு என்பது இங்கே ஒரு "திசையத்துண்டு"
(வெக்டார் பிட்) ஆகும்.இது இரு கலம்பக அல்லது சிக்கல் எண்களால்(காம்ப்ளெக்ஸ் நம்பர்ஸ்) ஆனது.அவற்றின் சமன்பாடு
ஒன்றில் (1) தான் இருக்கும்.இதுவே இங்குள்ள ஒழுங்கு கணிதம்
(நார்ம்) ஆகும்.இதை 2 இன்டு 2 என்ற ஒருமித்த நிரலாக (யுனிடரி
மேட்ரிக்ஸ்) எழுதலாம்.
மேலே உள்ள அளபடைத்துண்டுகளை வைத்து எக்ஸ் ஒய் இஸட்  ஹெச் எஸ் டி என்ற ஆறு குவாண்டம் கணினிய வாசல்களை அமைக்கலாம்.இதன் விவரங்களை இப்போது காண்போம்.




(தொடரும்)

இது சொற்பொழிவு அல்ல‌

இது சொற்பொழிவு அல்ல‌
==================================================ருத்ரா இ பரமசிவன்

சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடிக்கும் பிள்ளையிடம்
தாயின் அன்பு பல தந்திரங்களை கையாளச்சொல்லும்.
"பூச்சாண்டியிடம் பிடிச்சுக்குடுத்திடுவேன்
ஏ பூதம் ..இங்க வர்ரயா ..வேண்டாம் வேண்டாம்.
இவன் சாப்பிட்டுருவான் நீ போ..
பூதம் போய்ட்டான்..நீ சாப்பிடு..
சாப்பிட்டேனா அந்த நிலாவெ புடிச்சு தாரேன்.
உனக்கு வேண்டாமா
அந்த நாய் வருது பாரு..அதுக்கு குடுத்துருவேன்...

தாயின் அன்பு பிள்ளையின் பசியை போக்க
இப்படி ஆரம்பித்த போதும்
குழந்தையின் இயற்கையான ஞானத்தின் மீது
அவளது செயற்கையான அம்புகளே பாய்கின்றன.

அன்ர்ஜுனன் மீதும்
கிருஷ்ணர்
இந்த அம்பு மழையைத்தான் பொழிந்தார்.


அர்ஜுனன் இப்படித்தான்
அடம்பிடித்தான் போர்க்களத்தில்.
கிருஷ்ணர் கையாண்ட தந்திரங்கள்
எல்லாம் சமஸ்கிருத பாஷையில் இருந்தாலும்
மேலே சொன்னதைப்போன்றவை தான்.

சாங்கிய யோகம்
கர்ம..ஞான..சன்யாஸயோகங்கள்
விஞ்ஞான ஞான யோகங்கள்
அக்ஷர பிரம்ம யோகம்
ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்
விபூதியோகம்
க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ யோகம்
குணத்ரய...ச்ரத்தா த்ரய விபாக யோகங்கள்
தேவாசுர சம்பத் விபாக யோகம்
விஸ்வரூப தரிஸன யோகம்.
பக்தி யோகம்
புருஷோத்தம யோகம்
மோக்ஷ ஸன்யாஸ யோகம்

பாருங்கள் ஆச்சரியமாக இல்லையா?
கொலைகள் மிகுந்த அந்த கொல்லம்பட்டறையில்
இந்த ஈக்களுக்கு (யோகங்களுக்கு) என்ன வேலை?

யுத்தம் வேண்டாம் என்பதற்கு
"அமைதியை"ப்பாடும்
இனிய ரீங்காரங்களான‌
இந்த தேனீக்களை (அதே யோகங்கள்)
ரத்தத்தில் மொய்க்கும்
நாற்றம் பிடித்த ஈக்களாக மாற்றும்
ரசவாதமே இந்த வாதங்கள்.

இப்படி போர்க்களத்தில்
ஞான வேள்விக்கு அவசியம் என்ன?
அதற்கு
அர்ஜுனன் துவக்கிய வினாக்கள் மூலம்
கிருஷ்ணர்
கதி கலங்கி போனது தான் காரணம்.
அது விஷாத யோகம் எனப்படுகிறது.

குறி வைத்து அடிப்பதில் மன்னன் அல்லவா
அர்ஜுனன்.
வேதஞானத்தை வைத்தே
பிரம்மத்தின் மீது
பிர்ம்மத்தின் மர்மஸ்தானத்தின் மீதே
குறிவைத்து அடித்து விட்டான்.
அதில் வெல வெலத்ததன் விளைவே
கிருஷ்ணர் இத்தனை யோகங்களை
கொட்டிக்கவிழ்க்க வேண்டியிருக்கிறது.
பதிலுக்கு
அர்ஜுனனின் மீதும்
அதே பாணியில்
குறிவைத்து அடிக்கிறார் கிருஷ்ணர்.


//2. குதஸ்த்வா கஸ்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம்
அநார்யஜுஷ்டமஸ்வர்க்யமகீர்திகரமர்ஜுந

ஸ்ரீ பகவான் உவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான் அர்ஜுந!-அர்ஜுனா

விஷமே-தகாத சமயத்தில் குத த்வா இதம் கஸ்மலம் ஸமுபஸ்திதம்-எங்கிருந்து

உன்னை இந்த உள்ளச் சோர்வு அடைந்தது அநார்யஜுஷ்டம்-ஆரியருக்கு

தகாதது அஸ்வர்க்யம்-வானுலகை தடுப்பது அகீர்திகரம்-புகழையும் தராதது

பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: இந்த முட்டுதலில் இவ்வுள்ளச்

சோர்வை நீ எங்கிருந்து பெற்றாய்? இஃது ஆரியருக்குத் தகாது. வானுலகைத்

தடுப்பது; அபகீர்த்தி தருவது அர்ஜுனா!

3. க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த்த நைதத்த்வய்யுபபத்யதே
ஷூத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப

பொருள் : பார்த்தா பேடித்தன்மையடையாதே! இது நினக்குப் பொருந்தாது.

இழிபட்ட மனத் தளர்ச்சியை நீக்கி எழுந்து நில்; பகைவரைச் சுடுவோனே!

ஆண்மையை இழந்து பேதைபோன்று நடந்துகொள்பவன் அலி ஆகின்றான்.

அர்ஜுனன் பெற்றுள்ள பண்பும் பயிற்சியும் அத்தகையவைகளல்ல. அவன்

உண்மையில் எதிரிகளைப் பறந்தோடச் செய்பவன். மகாதேவனோடு போர்

புரிந்த அர்ஜுனனுக்கும் மனத்தளர்ச்சிக்கும் வெகு தூரம். தற்காலிகமாக

வந்துள்ள தளர்ச்சியை இழித்துப் பேச அதை அடியோடு அப்புறப்படுத்தும்படி

பகவான் தூண்டுகிறார்.//

http://srimadbhagavadgitatamil.blogspot.com/

மேற்கண்ட இரு சுலோகங்களும் அர்ஜுனனின் மையவிசையை

நிமிண்டிப்பார்க்கும் வேலையைத்தான் செய்கிறது.

இரண்டாவது சுலோகத்தில் அவரது குறி இது தான்.

அர்ஜுனா நீ என்ன ஆர்யன் தானே? வெட்கமாயில்லை உனக்கு?
வேதங்களில் ஆரியன் அல்லாதவனான திராவிடன் வேள்விகளின்

எதிரி.கடவுள்களின் எதிரி.அதாவது வேறு கடவுளைப் பற்றி பேசுபவர்கள்.
சிவனைபற்றி ஒரு விரோத மனப்பான்மை விஷ்ணு பக்தர்களிடம் இருந்த
போதும் சிவனும் விஷ்ணுவும் கூட்டணியாக இருந்து செய்த வதங்கள் பற்றி
நிறைய புராணங்கள் இருக்கின்றன.ஒரு வேளை சமன (சமண) மதம் பற்றிய‌
சிந்தனைகளை அர்ஜுனன் செய்ய ஆரம்பித்து விட்டானோ என்றும் கூட இந்த
தாக்குத‌லின் குறியாக இருக்கலாம்.பாண்டவர்கள் வனவாசம் என்றபெயரில் வாழ்க்கையை அதன் எளிமையை மனிதத்தின் சாரத்தை உள்வாங்கிக் கொண்டதன் வெளிப்பாடே அர்ஜுனன் "காண்டீபத்தை நழுவ விட்டது"

"பொட்டைப்பயலா நீ"

மூன்றாவது சுலோகத்தில் "க்லைப்யம்" என்ற அந்த "கிருஷ்ணரின்" சொல்லில் மேற்கண்ட எள்ளலும் உசுப்பலுமே வெளிப்படுகிறது.

"ஷூத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் " என்ற வரியில்

"மன உறுதியில்லாத "சூத்ரனை"ப்போன்ற கோழையா நீ?"என்று கேட்கிற‌ மேல்தட்டு வர்க்க ஆவேசம் வெளிப்படுகிறது.

முதல் அத்தியாயத்தின் (அர்ஜுனனின் விஷாத யோகம்)47 ஸ்லோகங்கள் போக
எழுநூறு ஸ்லோகங்களின் மிச்ச சொச்சம்  யோக தத்துவங்களில் மிடைந்த அம்புகளில் எல்லாம் வர்ணாசிரம விஷமங்களும் யுத்த நெடியுமே அதிகம்.போர்க்களத்தில் நரம்பு முறுக்கேற்றவேண்டிய அவசியத்திற்கு இந்த நுண்மையான யோகங்கள் அவசியமே இல்லை.இதே பாணியில் கிருஷ்ண பகவானை உட்கார வைத்து வியாச பகவான் அர்ஜுனன் உருவில் உபதேசங்களின் மழை பெய்து யுத்தம் வேண்டாம் என்று சொல்லியிருக்க முடியும்.அந்த "யோகங்கள்"பாவம்  என்ன செய்யும்?

குழம்பியவனை தெளியவைப்பதற்குப்பதில் மேலும் குழம்பச்செய்து வில்லேந்த வைக்க கிருஷ்ணரின் தந்திரம் என்றும் இதை எடுத்துக்கொள்ளலாம்.
ஆரம்பத்தில் பிள்ளைக்கு சோறூட்டும் தாய் சொன்னதைப்போல கிருஷ்ணர் சொல்லும் யோகங்களில் எல்லாம் "விசுவரூப தரிஸன யோகம்" தான்
"பூச்சாண்டியைக்கூப்பிடுகிறேன் சாப்பிடுகிறாயா இல்லையா" என்று மிரட்டும் ரகம்.பிள்ளைக்கு சோறூட்டுவதும் யுத்தம் புரிய அம்பு தீட்டிக்கொடுப்பதும் ஒன்று இல்லை தான்.இருப்பினும் அதர்மத்தை அழிக்க தர்மத்தை ஏவி விட்டதாக நினைத்துக்கொள்வோம்.பாண்டவர்கள் கூட அந்த "அதர்மத்தில்" உள்ள முன் எழுத்து "அ" வை கண்டுகொள்ளவே இல்லை.அதை பூதாகரம் ஆக்கியவர் கிருஷ்ணர் தான்.அந்த "அ"வை அழிக்கும் போதும் பின்னாலேயே அந்த தர்மமும் அழிந்து போனதாகத்தானே மகாபாரதம் முத்தாய்ப்பு வைக்கிறது.ஏனெனில் கிருஷ்ண தத்துவம் என்பது பரமார்த்த உருவகம்.மனித உருவங்கொண்ட அந்த கடவுள் அவதாரம் லட்சக்கணக்கான மக்களின் ரத்தவெள்ளத்தில் தான் சம்பவாமி யுகே யுகே என்று காட்டவேண்டுமா?
ஒரு பெண் துகிலுரியப்படும்போது "உடுக்கை இழந்தவளின் உடுக்கையாக"
ஓடி வந்த அந்த பரமாத்மாவால் யுத்தம் புரியத்தூண்டும் "நியூரானை" அன்றே அழித்திருக்க முடியாதா? அந்த லட்சக்கணக்கான ஸ்லோகங்களின் ஒவ்வோரு ஒலித்துளியும் சத்யமேவ ஜயதே என்று சொல்லிக் கொண்டிருக்குமே. பகவான்களின் செயல்கள் எல்லாம் வெறும் பி.சி சர்க்காரின் இந்த்ரஜால் காமிக்ஸ் மட்டும் தானா?

//72. ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி: பார்த நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி
ஸ்தித்வாஸ்யாமந்தகாலேऽபி ப்ரஹ்மநிர்வாணம்ருச்சதி

பார்த ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி:-பார்த்தா! இது பிரம்ம ஸ்திதி, ஏநாம் ப்ராப்ய ந விமுஹ்யதி-இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை, அந்தகாலே அபி-இறுதிக் காலத்திலேனும் அஸ்யாம் ஸ்தித்வா-இதில் நிலை கொண்டு, ப்ரஹ்ம நிர்வாணம் ருச்சதி-பிரம்ம நிர்வாண மெய்துகிறான்.

பொருள் : பார்த்தா, இது பிரம்ம ஸ்திதி. இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை. இறுதிக் காலத்தி லேனும் இதில் நிலை கொள்வோன், பிரம்ம நிர்வாண மெய்துகிறான்.//


அர்ஜுனனை வில்லேந்த வைப்பதற்காக சொன்ன யோகங்களின் சாரம் எல்லாம்
"போர் வேண்டாம்" என்பதில் தான் வந்து நிற்கும்.

சாங்கிய யோக அத்தியாயத்தின் 72வது ஸ்லோகம் மேலே சொல்லியிருப்பதை பாருங்கள்.

மனிதன் கடவுள் ஆவதே பரிமாணத்தின் உச்சம்.இந்த கடவுள் நிலையில் தர்ம அதர்ம மயக்கங்கள் மறைந்து போகின்றன.இந்த பிரபஞ்சத்தின் இத்தகைய மயக்கநிலைகளையெல்லாம் உரித்துப்போடுவதே மகா நிர்வாணம்.கடவுளுக்கு உடலே இல்லை அப்புறம் நிர்வாணம் எங்கே வந்தது?மண் பெண் பொன் ஆசைகளின் வடிவங்கள் தானே போர்கள்.இந்த பிரம்ம நிர்வாணம் அடைந்த பிறகு அர்ஜுனனுக்கு "காண்டீபம்" கண்ணுக்கே தெரியாதே.

ஒவ்வோரு ஸ்லோகமும் அந்த "பரமார்த்தம்" (பரம்பொருள்)பற்றி பேசும்போது
கடைசியில் அர்ஜுனன் குருக்ஷேத்திரத்தையே "பிரம்மாசிரமமாக" அல்லவா மாற்றியிருப்பான்.அங்கே பாஞ்சாலுக்கு துகில் அளித்தவன் இங்கே பார்த்தனின்
துகில்களை (பேராசை போன்றவற்றை)அழித்தவனாக (பிரம்ம நிர்வாணம்)அல்லவா தரிசனம் தருகிறார் கிருஷ்ணர். அப்படியிருந்தும் அர்ஜுனன் "சரி சரி" பகவானே எல்லாம் புரிந்து கொண்டேன் என்று கன்னத்தில்
அடித்துக்கொண்டு போர் புரிய கிளம்பி விட்டான் என்றால் ஒரு உண்மை நிரூபணம் ஆகி விட்டது.

இன்றைய தமிழன் அன்றைய தமிழனின் மிச்ச சொச்சம் என்பதும் அன்றைய அர்ஜுனன் இன்றைய தமிழனின் அச்சு வடிவம் என்பதும் தான் அது.

இன்று கோவிலில் தமிழர்கள் மணிக்கணக்காய் ஸ்லோகங்கள் கேட்டுவிட்டு
எல்லாம் புரிந்து விட்டது என்று வீடு திரும்பி மறுபடியும் சம்சார டி.வி சீரியலை தொடர்கிறார்களே அது போல் தான் எழுநூறு ஸ்லோகங்களையும் கேட்டு விட்டு "சாமி ஏதோ மந்திரம் சொல்கிறார்" சரி சாமி நமோ நமஹ
என்று யுத்தம் தொடங்கி விட்டான்.அத்தனை அர்த்தம் அவனுக்கு புரியாது.புரிந்தால் மகாபாரதம் திசை மாறியிருக்கும் என்பது கிருஷ்ணரும் அறிவார்.

அன்றும் இன்றும் என்றும் இதுவே தான் சமஸ்கிருதத்தின் அல்லது
"த்ரமிள சமஸ்கிருதத்தின்" நிலை.

=============================================ருத்ரா இ.பரமசிவன்.
20.07.2014




செவ்வாய், 10 ஜூலை, 2018

பாலச்சந்தரின் "தண்ணீர் தண்ணீர்"

பாலச்சந்தரின் "தண்ணீர் தண்ணீர்"
================================================ருத்ரா

எங்கள் இதயத்துக்குரிய இயக்குனர்
பாலச்சந்தர் அவர்களே!
இந்தப் படத்தின் பெயரை உச்சரிக்கும்போது
கண்ணீர் கண்ணீர் என்று தான் கேட்கிறது.
தண்ணீர்த்துளிகளில்
உலகம் சிதறுண்டு
கோடி கோடி பிம்பம் காட்டும்
நுட்பத்தை
அன்றே
அந்த அத்திபட்டி கிராமத்தையும்
அகன்ற ஆனால் ஆழம் மிக்க‌
கரிய விழிகளை உடைய‌
சரிதா அவர்களையும் வைத்துக்கொண்டு
ஒரு உயர்ந்த சரித்திரம்
படைத்துவிட்டீர்கள்.
கதை திரு கோமல் சுவாமி நாதன் அவர்களின்
நாடகத்திலிருந்து உருவாகிய போதும்
கார்ட்டுன் சித்திரங்களாய்
ஆனால் கனல்கின்ற உள்ளடக்கம் உள்ள‌
உயிர்ச்சித்திரங்களாய் அல்லவா
படம் முழுக்க விரவிக்கிடந்தீர்கள்.
நாட்டில் நக்சல்பாரி என்பது
இன்னும் இங்கு கெட்டவார்த்தை தான்.
அதன் ஒரு சிறு பிசிறு கூட‌
உங்களிடம்
அந்த படத்தில் ஒரு சிற்பம் ஆக நின்றது.
உங்கள் "டச்"
அந்த தண்ணீர் தாகத்தை
ஆயிரம் காளிதாசன்கள் கூட
நடத்திக்காட்ட முடியாத‌
ஒரு உயிரியல் நாடகமாய் அல்லவா காட்டியது!
அந்த வாத்தியார் ராமனின் பிரம்படிகள்
இன்னும் சுளீர் சுளீர் என்கிறது.
இந்த மக்கள் இன்னும்
இந்த சக்கைப் புல்லுக்கட்டை தான்
மேய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இளைய தலைமுறைக்காரர்கள்
குத்திக்காட்டுவதில்
ஊசி மழை பெய்கிறார்கள் தான்.
ஆனாலும்
தண்டவாளம் நழுவிய ரயிலாகத்தான்
எங்கோ
வழிகள் இழந்து பயணிக்கிறார்கள்.
அவர்கள்
இந்த தண்ணீர் தண்ணீர் படத்தை
லென்சுக்குள் இதயமாக்கி
இயக்கிப்பழக வேண்டும்!
தமிழ் நாட்டின் பெருமைகள்
எண்ணில் அடங்கா!
உங்களை இந்த கனவு உலகத்தின்
சிற்பியாக நிறுத்தி
படைப்பு உலகத்தையே மிரள வைத்தது
தனிப்பெருமை!

=======================================================


எனக்கு ஒரு கடவுள் வேண்டும்.

எனக்கு ஒரு கடவுள் வேண்டும்.
===============================================ருத்ரா இ பரமசிவன்.

இந்த நாட்டில் தான் ஆயிரக்கணக்காய்
சிலைகளாக கிடக்கிறதே
என்று
ஒன்றை நான் எடுத்து
என் பாக்கெட்டில் வைத்துக்கொண்டேன்
இல்லை இல்லை
என் இதயத்துள் செருகிக்கொண்டேன்.
அது பார்த்துக்கொள்ளட்டும்
என்று என் வழிகளின் சந்து பொந்துகளைப்பற்றி
கவலைப்படாமல்
பயணம் செய்தேன்.
தினம் தினம் ஆயிரம் செய்திகள்.
மக்கள் வாழ்க்கையின் குறுக்குவெட்டுத்தொற்றம்
டிவிகளில் காட்சி ஆகிக்கொண்டிருக்கிறது.
சம்பவாமி யுகே யுகே என்று
சமஸ்கிருதம் வாந்தியெடுத்தோடு சரி.
அந்தக் காட்சிகளில்
மனித நீதியும் தர்மங்களும்
கசாப்பு செய்யப்பட்டு
தோலுரித்து தொங்கவிடப்பட்டிருந்தன.
மக்களின் வாழ்வாதாரங்களை காக்கவேண்டும்
என்று
உண்மைக்காக
அமைதியாக ஊர்வலம் வந்தவர்கள்
ஆட்சி எந்திரத்தின் துளைகள் வழியே
தின்னப்பட்டுவிட்டார்கள்.
இதில் யார் கடவுள்?
இதில் யார் சைத்தான்?
கடவுளின் முதுகுப்புறம் தான் சைத்தானா?
இந்தக்கேள்வி
பிசிறு பிசிறாக‌
சிதறடித்துக்கொண்டிருக்கிறது.
ஒட்டுமொத்தமாய் உள்ள‌
ஒரு மக்கள் சமுதாயத்தின்
மனசாட்சி எனும்
அந்த சவ்வுப்படலம் கிழிந்து கந்தலானது.
என் இதயத்தைத்தொட்டுப்பார்த்து
என் கடவுள் என் கையில் நெருடுகிறாரா
என்று தடவிக்கொண்டு
உற்றுக்கேட்டேன்.
அதில் "லப் டப்"கள்
கனத்த ஒலியாய்
ஆயிரம் ஹைட்ரஜன் குண்டுகளின் வெடிப்பாய்
ஒலிக்க‌
இந்த மண் பிய்ந்தது.
இந்த விண் பிளந்தது.
இந்த விசுவரூபத்தில்
கிருஷ்ணர்களும் ராமர்களும்
அந்த உபன்யாசங்களும் பஜனைகளும்
தூசிப்படலமாய் ஆகாயத்தையே
ஆபாசம் ஆக்கியிருந்தது.
நாய்க்குடை காளான் போல்
கரும்புகை மண்டலம் கவிந்து இருந்தது.
வழிகள் மறைந்து போனது.
பயணங்கள் கலைந்து போனது.
கடவுள்கள் காணாமல் போயினர்.

===================================================





திங்கள், 9 ஜூலை, 2018

தலைப்பு இடப்படாத ஒரு ஓவியம்..

UnTitled

 -

Wassily Kandinsky


Kandinsky, Wassily (Russian/French 1866-1944) Expressionist Painter, Also known as: Vasilij Kandinskij, Vasilii Kandinskii, Vasily Kandinski.







தலைப்பு இடப்படாத ஒரு ஓவியம்..
=============================================ருத்ரா இ பரமசிவன்.

ஓவியர் காண்டின்ஸ்கி வாஸ்ஸிலியின்
தலைப்பிடப்படாத 
இந்த ஓவியத்தைப்பாருங்கள்.
என்ன அற்புதம்! என்ன ஆழம்!
புரிந்து விட்டது என்றால் அழகு
புரியவில்லை என்றால் அதைவிட‌ அழகு.

இது ஏதோ கார்பரேஷன் கம்போஸ்ட்
உரக்கிடங்கு போல்...

ஏதோ மனிதங்களின் எல்லா ஆளுமைகளும்
நசுங்கிக்கிடக்கும்
ஜங்க்யார்டு போல...

ஒற்றைக்கண்ணாடியில்
கண்ணும் இல்லாமல் முகமும் இல்லாமல்
லுக் விடும்
ஒரு மௌன அம்பின் கூர்மைத்தாக்குதல்கள்
நம் நுரையீரல் பூக்களை கசக்கிவிடுவது போல்...

உலகப்போர்களின் வக்கிரங்களில்
சர்வாதிகார கொலை வேட்டையில்
மரண ஆவேசங்களின் உந்துதல்கள்
மானிட நேயத்தின் மேல்
அணுக்கதிர் பிதுக்கி
அவசரமாய் மலஜலம் கழித்தது போல்....

கொடுவாள் நிமிர்ந்து விறைத்து
விடியல் வானத்தை குத்திக்கிழிக்க‌
வாய்பிளந்த ஏதோ ஒரு கேலாக்ஸி
சோளப்பொரி கொறிப்பது போல...

இல்லாவிட்டால்
இருக்கவே இருக்கிறது காதல்..
காதலை தேடி அலையும்
பிசாசு ஏக்கங்கள்....
பிய்த்துப்போட்ட தலையணைப்பஞ்சுகளாய்
கனவுச் சிதிலங்களில்
கந்தலாய் கிடக்கும்
முத்தங்களும் ஆலிங்கனங்களும் போல...

புருசு தேய்த்த வர்ணக்குழம்பில்
இதயத்து அடி ஆழத்தின்
லாவா வழியல்களில்
எரிமலையின் எச்சில் ஊறும்
கற்பனைத்தீயின்
"நவரக்கிழி" பிழிசல்களின் ஒத்தடம் போல...

பிரசுரிக்கப்படாத படைப்புகளை
கிழித்துப்போடுவதைக்கூட 
கசாப்பு செய்தாற்போல எறியும் 
ஏதோ ஒரு பத்திரிகை அலுவலகத்தின்
புழக்கடை போல...

என்ன தோன்றுகிறதோ 
அப்படியே கூப்பிடுங்கள்..
அப்படியே
அந்த ரத்த சதைக்கூளத்திலிருந்து
ஒரு பொமரேனியன் குட்டி
உங்கள் பாதம் நக்கிக்கொடுக்க வர‌
ஓடிவரும் தருணங்கள் போல...

===============================================================ருத்ரா


இந்த சுட்டிக்கு  நன்றி.(WITH GRATITUDE)
========================================================

ஓலைத்துடிப்புகள்

ஓலைத்துடிப்புகள்
==============================================ருத்ரா இ பரமசிவன்

 சங்கத்தமிழின் தமிழ் எழுத்துக்களின் நாடி நரம்பாய் சுடர்ந்து நின்றவன் கபிலன். அவன்   பாடிய குறிஞ்சிப்பாட்டில் ஒரு நாள் நுழைந்தேன். சொல்லின் அழகு சொட்டும் வரிகளின் காடு அது.தலைவன் தலைவி ஒலி கல் பூ உயிர் புள் மலை மண் என எல்லாவற்றிலும் மின்னலின் ஒரு சாந்து பூசி கட்டியிருந்தான் அந்தப் பாட்டுக்கோட்டையை. அதில் "கல்" "உயிர்" என்ற இரு சொற்களை அவன் ஆண்ட விதம் என்னை அப்படியே கட்டிப்போட்டது. இவற்றிற்கு"ஒலி" என்ற பொருள் நம் சங்கத்தமிழில் வழங்கியிருப்பது கண்டு நான்வியந்து போனேன்.இந்த "வேர்" வழியே நாம் நம் தமிழ் தொன்மை பற்றி ஆழமாய் இறங்கி ஆராயவேண்டும்.





அவன் அவிழ் ஒரு சொல்
============================================ருத்ரா இ பரமசிவன்

குரூஉ மயிர் யாக்கையின் கரடி உரியன்ன‌
நெடுங்கருப் பெண்ணை பழுனிய பைங்காய்
நுங்கின் இழிநீர் படர் தந்தாங்கு
பளிங்கின் சுனைநீர் உகுக்கும் கல்லிடை.
பசிய அடுக்கமும் கான் பொதி ஒடுக்கமும்
நெடிய ஓங்கலின் நிரல் காட்டும் பொதிகை
அண்ணிய குன்றன் அகலம் தோஒய்
நரம்பின் புன்காழ் முடுக்கிய பண்ணின்
நளிதரு இசையில் நுடங்கும் மயங்கும்
அற்றை முற்றத்துப் பால்பெய் திங்களில்.
கல்லின்று கல்பு உயிரின்று உயிர்பு
கனைகுரல் ஓரும் கண்புதைத்து மாயும்.
அவன் அவிழ் ஒரு சொல் விசும்பு  தூஉய்
எல்லிய திசைகள் ஆர்க்கும் கலிக்கும் .
புல்லிய அரிபரல் பண்ணிய ஓடை
புதல்நீவி என் இறைவளை நெகிழ்க்கும்.
ஊழ் ஊழ் தலைஇ கூழ்தலை ஒக்க‌
மண்ணின் பிளந்து வித்திய காட்டும்.
இடி உமிழ்பு இரும்பிழி வானம்
இயைந்தவர் என்றுகொல் எதிர்வரும் ஆங்கண்
நின்றுகொல் பொழுது தின்னும் நிணமாய்
கான்றல் பூ காந்தள் விரி இணர்
காட்டும் அழலிடை அவிர்பாகத்தன்ன‌
ஆவியுள் ஆவி ஒளிக்கும் வேகும்.
நோதல்மன் என்செயும்  முயங்கு இழைத்தோழி.

=============================================================
(இது 05.05.2015ல் நான் எழுதிய சங்கநடைச் செய்யுட்கவிதை)


பொழிப்புரை
========================================ருத்ரா இ பரமசிவன்


குரூஉ மயிர் யாக்கையின் கரடி உரியன்ன‌
நெடுங்கருப் பெண்ணை பழுனிய பைங்காய்
நுங்கின் இழிநீர் படர் தந்தாங்கு
பளிங்கின் சுனைநீர் உகுக்கும் கல்லிடை.
பசிய அடுக்கமும் கான் பொதி ஒடுக்கமும்
நெடிய ஓங்கலின் நிரல் காட்டும் பொதிகை
அண்ணிய குன்றன் அகலம் தோஒய்
நரம்பின் புன்காழ் முடுக்கிய நுண்சுரம்
நளிதரு இசையில் நுடங்கும் மயங்கும்
அற்றை முற்றத்து பால்பெய்த் திங்களில்.


குட்டை மயிர்களால் ஆன உடம்பை உடைய கரடியின் தோல் போர்த்தது போல் இருக்கும் நெடிய கருப்பு பனைமரத்தில் விளைந்த‌ பசுங்காயின் நுங்கு உரித்தபின் அதில் கசியும் நீர்போல அந்த பாறைகளிடையே பளிங்கு போன்ற சுனைநீர் இழைந்து கொண்டிருக்கும்.பச்சைப்பசேல் என்ற மலைத்தொடர்களும் அவற்றின் ஒடுக்கங்களான சரிவுகளின் இடுக்குகளும் அடர்ந்த‌ காடுகள் பொதிந்து கிடக்கும்.நெடியனவாய் ஆனாலும் உயர்ந்த மலை உயரங்களால் அவை வரிசையாய் அமைந்து "பொதிகை"என அழைக்கப்படும்.அந்த மலையின்
அருகே உள்ள‌ ஒரு சிறு மலையின்தலைவன் மீது காதலில் நான் கட்டுண்டபோது அவன் திரண்ட மார்பில் தோய்ந்து கிடப்பேன்.அன்றொரு நாள் அந்த முற்றத்தில் பால் போல் நிலவு பொழிய யாழின் மெல்லிய நரம்பின் இழையில் முறுக்கேற்றி இசைக்கப்படும் நுட்பமான பண்ணில் குழைவுற்று மெல்லசைவுகளோடு மயங்கிக்கிடப்பேன்.


கல்லின்று கல்பு உயிரின்று உயிர்பு
கனைகுரல் ஓரும் கண்புதைத்து மாயும்.
அவன் அவிழ் ஒரு சொல் விசும்பு  தூஉய்
எல்லிய திசைகள் ஆர்க்கும் கலிக்கும் .
புல்லிய அரிபரல் பண்ணிய ஓடை
புதல்நீவி என் இறைவளை நெகிழ்க்கும்.
ஊழ் ஊழ் தலைஇ கூழ்தலை ஒக்க‌
மண்ணின் பிளந்து வித்திய காட்டும்.

கல்லிலிருந்து ஒலிக்கும்.உயிரிலிருந்தும் ஒலிக்கும்.என்ன அந்த நுண்ணொலி? அந்த ஒலிக்கற்றைகளை உற்றுப்பார்த்துக்கேட்டு கண்கள் மூடி கனவுகளில் மறைந்து கிடப்பேன்.ஆம்.அது அன்று அவன் என்னை நோக்கி அன்பொழுக கூறியது. மடல் அவிழ்ந்த மலர் போல் வந்த சொல் அல்லவா அது விண்ணெல்லாம் பரவி அச்சொல் வெளிச்சமாய் எல்லா திசைகளிலும் எதிரொலிக்கும்படி அதன் துடிப்பு ஒலிகள் கேட்கும். சிறு சிறு கூழாங்கற்களை உருட்டிச்செல்லும்  நீரோடை விட்டு விட்டு ஒலித்து சில குரல் பிஞ்சுகளை தூவிவிடும். அப்போது அது கரையோரத்து புல் புதர்களை
வருடிச்செல்வதைக்கண்டுநான் காதல் நினவில் மெய் நெகிழ்ந்து போக என் முன் கை வளையல்கள் கழன்று  விழும். ஒவ்வொரு பருவத்தேயும் பயிர் செய்யும் காலச்சுழல்களில் அந்தந்த பருவத்திலும் தலைநீட்டும் பயிர் நாற்றுகளிலும்  விதைக்கப்பட்ட வித்து மண்ணைப்பிளந்து ஒலித்துக் காட்டுவது இந்த உயிரொலியே. அவன் விதைத்த சொல் இதோ இந்த மண்ணின் இதயத்துள்ளிருந்தும் ஒலிக்கும்.


இடி உமிழ்பு இரும்பிழி வானம்
இயைந்த போன்ம் அக்குரல் ஓப்பும்
நாள் ஈரும் வாளது கூர்முள்
என்றுகொல் மலர்தலை சீர்க்கும்?
நின்றுகொல் பொழுது தின்னும் நிணமாய்
கான்றல் பூ காந்தள் விரி இணர்
காட்டும் அழலிடை அவிர்பாகத்தன்ன‌
ஆவியுள் ஆவி ஒளிக்கும் வேகும்.
நோதல்மன் யானே முயங்கு இழைத்தோழி.

இடி முழங்கி அடர்மழை பிழியும் வானமாய் இயைந்தது போல் அக்குரல் என்னை கவர்ந்து கட்டுப்படுத்தும்.அப்போது ஒரு நாள் கழிவதும் வாள் போல்  அறுத்து வதை செய்யும்.அந்த கூரிய முள் எப்போது எனக்கு மென்மலராய் விரிந்து என்னைச் சீர் ஆக்கும்? அது வரை காலம் என்னைத் தின்னும் மாமிசமாய்க் கிடப்பேன்.காந்தள் மலர் கூட வெம்மை வறுக்கும்  பூவின் கொத்துகளாய்  இலங்கும்.அதன் அனல் என்னை அவித்துவிடும். உயிரை உறையாக்கி உள் உயிர் ஒன்றில் நான் ஒளித்த போதும் என்னை இந்த வேக்காடு அகலாது. அன்புத் தோழியே நீ அணிந்திருக்கும் உன் அணிகலன்கள் கூட உன்னோடு ஊடல் செய்தது போல் தான் விலகி விலகி எனக்கு தெரிகிறது. இப்போது என் துயர்தனை நீ அறிவாய்.


=======================================================‍‍==========

சனி, 7 ஜூலை, 2018

அந்த இடைவெளி

அந்த இடைவெளி
=========================================ருத்ரா

எத்தனை காலம் நூற்றுக்கொண்டிருக்கிறோம்!
இந்த இழையை.
நம் கைவிரல்கள் கோடி கோடி கணக்கில்
பின்னி பின்னி வருகின்றன.
எது பஞ்சு?
எது பருத்தி?
தெரியவில்லை.
நிகழ்வுகள் சுழல்கின்றன.
கடல் பாசியிலிருந்து
ஒற்றை செல் உயிர்த்துளி
ஊழிகள் அடர்ந்த உயிர்களின்
வனம் ஆயிற்று.
நீரிலிருந்து மண்ணுக்குத்தாவிய
உயிர்
பல வடிவங்கள்
உடுத்துக்கொண்டிருக்கின்றன.
கொம்புகள்.
கோரைப்பற்கள்.
கூர்நகங்கள்.
இறுதியாய்
மனிதன் கையில் வில் அம்பு ஈட்டி!
மனிதர்கள் தங்கள் தலைகளை
தாங்களே கொய்து கொள்கின்றனர்.
மகுடங்கள்
அலங்கரிக்கப்பட்ட கபாலங்களாய்
சரித்திரம் பேசுகின்றன.
வானம் வாக்குகளை உமிழ்கிறது.
பயத்தையும் மரண மழையையும்
தூவுகிறது.
அச்சத்தின் மெல்லிய சல்லாத்துணி
மண்ணின் அடி வரை
மூடிப்படர்கிறது.
மனிதன்
இன்னொரு மனிதனைப்பார்த்து தான்
கடவுளின் பிம்பம் அறிகிறான்.
அது எப்படி
ஒருவன் மீது இன்னொருவன் ஏற்றும்
சிலுவை ஆனது?
ஒருவன் துப்பாக்கி
இன்னொருவன் இதயத்தின்
துடிப்புசதைகளையும்
குருதி ஓட்டத்தையும்
ஏன் சிதைக்கத்துடிக்கிறது?
இந்த கேள்வியின்
ரத்தக்கசிவுகள் இன்னும்
நம் பக்கங்களை
வர்ண அச்சில் வார்த்து வார்த்து
பதித்துக்கொண்டே இருக்கின்றன.
கம்பியூட்டருக்குள்
தெரியும் மூளைப்பிதுங்கல்களிலும்
செத்துப்போன ரத்த அணுக்களாய்
கிராஃபிக்ஸ் காட்டுகின்றன.
மனிதம் மறைந்தே போய்விடுமா?
எங்கிருந்தாவது ஒரு ஏலியன்
மனிதப்பூவின்
அன்பு மின்சாரத்தை
புதிதாக நம்மிடையே
பாய்ச்சாமலா இருக்கப்போகிறது?
இன்னும்
நம் குவாண்டம் கம்பியூட்டிங்
காம்ப்ளெக்ஸ் "ஹில்பெர்ட் ஸ்பேசில்"
அதன் க்யூபிட்ஸ் ல்
நம்பிக்கையின் அந்த
இடைவெளி இருக்கிறது!

===============================================
25.09.2017

வெள்ளி, 6 ஜூலை, 2018

"மண்" கி பாத்.



"மண்" கி பாத்.
=======================================ருத்ரா


இது
தமிழ் மண்ணின் குரல்.
வில் புலி மீன் என்று
கொடி உயர்த்தி
"இமயத்தைக்கூட"
இமை உயர்த்தி பார்க்க வைத்த தமிழ்
இன்று
பத்தோடு பதினொன்றாக‌
பட்டியலிடப்பட்டு
பந்தாடப்பட்டுக்கொண்டிருக்கிறது.
சமஸ்கிருதத்தின் வேரும் கிளையும் கூட‌
இந்த மண்ணிலிருந்து தான்
தோன்றியிருக்கின்றன.
உலகத்தோர்
உயர்ந்ததோர் தனித்த
செம்மொழி இது வென
போற்றிய போதும்
இந்திய இறையாண்மை
நம் தமிழை
எங்கோ ஒரு "கியூ வரிசையில்"
நிறுத்திவைத்து
துன்புறுத்துகிறது.

"மனு"சாஸ்திரம்
என்று கொண்டாடுகிறார்களே
அந்த "மனு" என்பதன்
அடிச்சொல் வேர்ச்சொல்
எல்லாம் "மன்"எனும்
தூய தமிழ் ச்சொல்லிலிருந்து
கிளைத்தது தானே.
சிறந்த
நிலைத்த
உயர்ந்த
மற்றும்
மனம் மனிதன்
என்றெல்லாம்
பொருள்படும்
அந்த தமிழ்ச் சொற் துளி
நம் பெரு மதிப்பிற்குரிய
பிரதமர் அவர்களால்
தினம் தினம்
வானொலியாய் ஒலிக்கப்படுகிறது.
"மன் கி பாத்" என்ற தொடர்
நம் சிந்துத்தமிழின் மிச்ச சொச்சம் தான்!
இந்தியமண் தமிழ் மண் தான்!
அந்த "மண்" கி பாத் தில்
நம் தமிழ் தானே முதலில் ஒலிக்கிறது.
மோடிஜி அவர்கள் தினமும் பேசட்டும்.
அதில் நம் தமிழும் ஒலிக்கட்டும்.

================================================



வியாழன், 5 ஜூலை, 2018

தொடு நல் வாடை






தொடு நல் வாடை 
======================================ருத்ரா இ பரமசிவன்.
{இது எனது சங்கநடை செய்யுட் கவிதை)


வணங்கு சிலையின் நிறம் உமிழ்பு
வால்துளி  வீழ்த்தும் கொடுமின் வானம்
என்பு நெகிழ்க்கும் ஈர் அடு வாடை அவள்
அன்பு குமிழ்க்கும் கொடுநகை செய்யும்
குவி இணர் கூர்த்த தண்புரை இதழும்
மெல்லிய சூட்டின் மெய் அவிர் பாகம்
உள்ளம் காட்டும் உவகை கூட்டும்.
கழை சுரம் புகுதரும் கடும்பனித்தூவல்
பொறிமா போர்த்த வெள்ளிய காட்சி
அணியிழை அகல்விழி அந்தணல் ஆர்க்கும்.
பண்டு துளிய நனை நறவு உண்ட‌
பூவின் சேக்கை புதைபடு தும்பி
சிறைக்க மறந்து சிறைப்படும் வாடை.
சிலம்பு இழீஇய நீர் இமிழ் தாமம்
நெய்தல் பிலிற்றும் வெண்ணகை அருவி
குளிர்ப்புகை தூவி திண்டிய செய்யும்
குலை உருவி கம்பம் படுக்கும்.
மின்னிய எயிற்றின் மிளிர் நகை ஆங்கு
சுருள்மலி வள்ளி இதழ் அவிழ்த்தன்ன‌
சூர்கொள களிக்குமென் திண்தோள் நெஞ்சு.

=====================================================


பொழிப்புரை
==========================================ருத்ரா இ பரமசிவன்

வளைந்த வில்லான வானவில் வண்ணங்கள் வெளிப்படுத்தும்.
வானத்தில் வளைந்த மின்னல் தொடர்ந்து ஒளி பொருந்திய துளிகளில் மழை வீழ்த்தும்.எலும்புக்குள் ஊடி ஆனால் வெப்பம் ஊட்டி நெஞ்சு பிளக்கும் வாடையில் அவள் அன்பு குமிழியிட்டு இதழ் சுழித்து இன்னகை செய்வாள்.பூங்கொத்தின் கூர்முனைகள் போன்ற இதழ்கள் மெல்லிய இன்பத்தின் சூடு ஏற்றி உடலுக்குள் ஒரு வேள்வி நடத்தி அவிர்பாகம் வழங்கும்.அதில் தெரிந்த அவள் உள்ளம் களிப்பு நல்கும். மூங்கில் காடுகளின் அடர்ந்த வழியில் திரியும் மான்களின் மீது பனித்தூவல்கள் புள்ளிகளால் போர்த்த அந்த வெண்மை செறிந்த காட்சியில் அழகிய அணிகள் பூண்ட அவள் அகல விரிக்கும் விழி(மானின் விழியில்)அழகிய
வெப்பத்தை கதிர் வீசும்.பழைய தேன் துளியைப்போல பூவின் நறவில் நனைந்து உண்ட வண்டு அந்த பூவெனும் படுக்கையில் புதைந்து அது சிறகடிப்பதையே மறக்கச்செய்யும் குளிர் அந்த பூவிலேயே அதை சிறைப்படுத்தும்.மலையிலிருந்து இறங்கி ஒலி செய்யும் முத்து நீர்த்துளிகள் வெள்ளிய நகைப்பால் அருவியாய் விழும்.அதனால் நீராம்பல்கள் அலம்பி அலம்பி ஆடும்.குளிர் புகை மூட்டம் போல் திரண்டு
ஈரக்குலையெல்லாம் உருவினாற்போல நடுங்கச் செய்யும்.அவள் சிரிப்பின் மின்னல் தெறிக்க பல்வரிசையின் அழகில் வள்ளி எனும் காட்டுப்பூவின் சுருள் இதழ்கள் மெல்லவே விரிந்த போதும் அதில் எனக்கு இன்பத்தின் ஒரு வித அச்சம் நெஞ்சில் படர்ந்து என் திண்ணிய தோளையும் உலுக்கிவிடும்.

=====================================================================
03.10.2016