சனி, 7 ஆகஸ்ட், 2021

நெருநல் வேங்கை வெள்வீச் சிதற‌

 நெருநல் வேங்கை வெள்வீச் சிதற‌

___________________________________

(ஓலைத்துடிப்புகள்)



நளி இரு முன்னீர் உருள்நா உழப்ப‌

திண்கலம் திரியா பெருங்கலம் கோடா

அணிநன்கலம் பரவை ஓய்ச்ச‌

பன்மொழித் தேஅம் பலப்பல நாட்டி

நெடுஞ்சிமயத்து நுதல் ஒற்றி ஆங்கே

வில்லும் பொறித்த விடைத்தமிழ் வீரம்

திசைதொறும் தழீஇ நின்று ஒளிருதல் காட்டி

தொல்லிய ஐந்திணை தொகுதரும் மண்ணின்

மண்ணிய தூமொழித் தமிழின் இமிழிசை

ஒலிக்கும் சேர்ப்பன் கண்ணின் ஒளித்து

துயில்பொருதல் என்னே நுவல்வாய் தோழி.

பெருங்கல் விடரளை புள்ளினம் சிலைப்ப‌

எல்லின் கூரொளி குருதிதரக் கீண்டு

செவ்வெழு காலை செயிர்த்த காலை

நெருநல் வேங்கை வெள்வீச் சிதற‌

எந்தன் ஐம்பால் காணிய குறி எச்சம்

நாணுத் தக உடைத்து என் முகம்

யாங்கு கொல் புதைக்கும் அளியள் யானே.


________________________ருத்ரா இ பரமசிவன்

(நான் எழுதிய சங்கநடைச்செய்யுட் கவிதை இது)

(பொழிப்புரை தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக