காவினள் கலனே சுருக்கினள் கலப்பை.
(ஓலைத்துடிப்புகள் 108)
பச்சை யாழ் நரம்பின் பண்ணிய
பாலை ஓர்ந்த அம்புள் அஞ்சிறை
இணர் துழாஅய் தாது இறைப்ப
விண்ணின் மூசு நீடிழை விறைத்து
ஆய் இழை ஆங்கு அவன் நெஞ்சு ஊர
நேர்ந்த போழ்தில் இவளும் இமிழும்
வெள்ளருவி வெறியாட்டயர்வ போல்.
ஆன்று அவிந்து ஆங்கு அடங்கினாளன்ன
காவினள் கலனே சுருக்கினள் கலப்பை.
அச்சம் நாணம் மடம் பயிர்ப்பென
நால்வகை கலனும் ஒன்றே வாய்த்து
நீங்கினாள் ஆங்கண் அம்புயல் அன்ன.
கராஅம் கலித்த குண்டுநீர் இலஞ்சி
பெய்யும் நிழலும் கண்விடு ஒளியும்
கதூஉம் கரையில் இனநிரை முதலை
அன்னவன் பரவும் அவள் நோக்கி
அவன் கண்ணுமிழ் சிமிழின் ஒளிகூர.
வேங்கை முன்றில் கூன் வெள் இளம்பிறை
வாங்கு அமை கண்ணிடை புல்லொளி பிலிற்ற
வெண்ணிப்பறந்தலை அன்ன மார்பன்
அகலக்கிடந்து துயிலா துயிலில் ஆங்கு
முயங்கல் எழில்நலம் ஐம்பால் மூடிய
அணைப்பில் ஆழ்ந்தாள் நனிகளியுற்றே.
___________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக