சனி, 14 ஆகஸ்ட், 2021

இந்த தருணங்கள்.

இந்த தருணங்கள்.

______________________________________ருத்ரா


அசோக மரத்து நிழல்கள்

மலட்டுத்தனமான மந்தைவெளியில்

வீழ்ந்து கிடக்கின்றன.

சிங்கமுகக் கல்தூண் 

சக்கரத்துடன் சிலிர்க்கின்றன

சப்தமில்லாமல்.

பீரங்கிகள் உமிழ்ந்தன குண்டுகளை.

அதன் ஒவ்வோரு வெடிமருந்தின் 

துகள்களிலும்

கணிப்பொறியின் சில்மிஷங்கள்

டிஜிடல் கண்களில் ஊடுருவின.

இனி விறைப்பாக சல்யூட் வைப்பதற்கு

"ரோபோ"க்களேபோதும்.

காற்று வீசிய போதும்

கொடித்துணி விரியவே இல்லை.

எங்கிருந்தோ ஒரு "செயலி"

தூரத்து மொழியில்

ஜெய்ஹிந்த் என்றது.

மௌனப்புயல் என்று

மொழிபெயர்த்துச்சொன்னது

இந்தக் கனமான தருணங்கள்.


__________________________________

ஆகஸ்டு பதினைந்து 2021











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக