ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

லூப்

 லூப்

___________________________ருத்ரா


உங்களுக்கு

பாசிடிவ் திங்கிங்கே இல்லை.

நண்பர் சொன்னார்.

கடவுள் இருக்கிறார் என்று

நம்ப வேண்டும்.

நம்பிக்கை எனும் அந்த‌

நட்சத்திர ஒளி போதும்.

அப்புறம் 

இல்லை என்றும்

ஐயம் என்றும் 

கேள்விகள் என்றும்

குப்பைகள் என்றும்

உங்கள் இதயம் முழுதும்

சிஸ்டாலிக் டைஸ்டாலிக்

நசுங்கல் சித்திரங்களே

வதைப்படலங்கள் அரங்கேற்றும்.

யாரோ ஏதோ 

உங்களை இயக்குகிறார்

என்று எதற்கு

இந்த வேதாந்த வியாக்யானங்கள்?

நீங்கள் உங்களைச்சுற்றி

எதற்கு இந்த விலங்குகளை 

பூட்டிக்கொள்கிறீர்கள்.

அதோ அந்த சனிக்கோளும்

செவ்வாய்க்கோளும்

உங்கள் மனங்களை

சொரிந்து கொண்டே 

இருக்கவேண்டுமா?

எள்ளுப்பொட்டல தீபங்களையா

"நாஸா"

அங்கே கொண்டு போய்

இறக்கிக்கொண்டிருக்கிறது?

பாருங்கள் உங்கள்

கவலைகள் பெருகுகின்றன.

கவலைகளைப் போக்க‌

ஸ்ரீ ஆஞ்சனேய ஸ்வாமிக்கு

எத்தனை வடைகள் கொண்ட மாலையை

நேர்ந்துகொள்ளவேண்டும்

என்று

அந்த புங்கமரத்தடி வீட்டு

ஜோஸ்யரிடம் போய்

குறித்து வாங்கிக்கொண்டு 

வரவேண்டுமே!

அந்தப்பெருங்கவலையே

இப்போது உங்கள் பெருமாள்.

போதும் ஸார்.

ஒன்றும் வேண்டாம்.

எதுவும் இல்லை 

இங்கே கும்பிடுவதற்கு?

சாக்கடைப்பண்ணிகள் கூட‌

நாமம் தரித்துக்கொண்டு

நடு இரவு ஸ்வப்பனத்தில்

ஸ்லோகங்கள் சொல்லச்சொல்லி

அந்த வளைந்த கொம்பைக்கொண்டு

வம்பு செய்கிறது.

வேண்டாம்.

எல்லாம் விட்டு விடுங்கள்!

இறுதியாய்

அவரே

பாசிடிவ் எண்ணத்தை

நெகடிவ் ஆக்கி விட்டுப்

போய் விட்டார்.

அவர் அடித்த லூப்

பாசிடிவா? நெகடிவா?

நாத்திகம் என்னும் நெகடிவ்வை

மீண்டும் மீண்டும் 

கழுவி சுத்தப்படுத்திக்கொண்டு

கும்பாபிஷேகம் 

செய்து கொண்டிருக்கிறோம்.


____________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக