நிழல்
_________________________ருத்ரா
என் நிழல் எனக்குள்
ஒரு நிழல் தருகிறது.
என் மனத்தில்
ஒளிந்து கொள்ளுகிற
நிழலில்
இந்த உலகம் தெரிவதில்லை.
அண்டை மனிதனை
மறைத்துக்கொண்டு
மறந்து கொண்டு
இந்த நிழற்பூதம்
பெரிதாய் வீங்குகிறது.
அவன் கண்ணீரும் அவலமும்
எனக்கு எதற்கு?
இந்த நிழல் எப்படி
என் மீது விழுந்தது?
என் பெற்றோர்
என்னை
பிள்ளையாருக்கு
தோப்புக்கரணம்
போடச்சொன்னார்கள்.
கீ கொடுத்தது போல்
பகவானுக்கு
ஸ்லோகங்கள் சொல்லச்சொல்லி
என்னை வார்த்தெடுத்தார்கள்.
நான் வளர வளர
இந்த நிழலும்
வளர்ந்தது.
இந்த இருட்டுக்குள்
எனக்கு மட்டும்
எந்த வர்ணமும் இல்லை.
ஈசா வாஸ்யம் சொல்றதுடா.
வெளிச்சம் சின்ன பிரம்மம்னா
இருட்டு பெரிய பிரம்மம்டா
என்றார்கள்
அப்புறம்
எப்படி இங்கு அந்த நான்கு வர்ணம்?
எதற்கு அந்த நான்கு வர்ணம்?
அந்தக்கேள்வியைக் கேட்கவே கூடாது டா.
நாக்கு துருத்தி மிரட்டினார்கள்.
அப்புறம் விஸ்வரூபம் வந்து
பஸ்பமாக்கி விடும் என்று
பாஷ்யம் சொல்லிவிடு.
என்றார்கள்.
நூல் படிக்கின்றேனோ
இல்லையோ.
வருடா வருடம்
நூல் மாற்றிக்கொள்கிறேன்.
இந்த நிழலுக்கு
கற்பித்து விட்டார்கள்.
கடவுளாவது ஒண்ணாவது.
நமக்கு மட்டுமே தெரிந்த
பிரம்ம ரகசியம்டா இது!
இதுவே நம் பிரம்மாஸ்திரம்.
மறக்காதே.
என் காதில் அந்த உபதேசம்
விழுந்ததிலிருந்து
வெளிச்சத்தை தேடாத
வெளிச்சத்தை விரும்பாத
அந்த நிழல் தான்
என்னை ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறது.
__________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக