கூண்டுக்கிளி
இந்தக் கூண்டோடு
சண்டை போடுவதில்லை.
சும்மா சும்மா
தன் சிவந்த அலகால்
அந்த கம்பி வலையை
கொத்தி கொத்தி
கொஞ்சி விளையாடுகிறது.
இதுவே
இந்தியப்பெண்ணியம்.
________________________ருத்ரா
சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
கூண்டுக்கிளி
இந்தக் கூண்டோடு
சண்டை போடுவதில்லை.
சும்மா சும்மா
தன் சிவந்த அலகால்
அந்த கம்பி வலையை
கொத்தி கொத்தி
கொஞ்சி விளையாடுகிறது.
இதுவே
இந்தியப்பெண்ணியம்.
________________________ருத்ரா
வாழ்க எல் ஐ சி !
___________________________
மனித உழைப்பு எனும்
பாற்கடலை கடைந்தெடுத்த
அமுத கலசம்
நம் ஆயுள் காப்பீட்டுக்கழகம்
மரண ஃபண்டு என்று
பயங்காட்டி
மொத்த நிதியத்தையும்
விழுங்கிக்கொண்டிருந்த
பழைய சுரண்டல் வாதிகளின்
சுருக்குப்பைக்குள்
விழுந்து விடும் ஆபத்து தான்
இப்போது
அரங்கேறத்
துடித்துக்கொண்டிருக்கிறது.
ஆனால்
நமது அந்த "அகல் விளக்குச்சுடரின்"
எண்ணெயும் திரியும் சுடரும்
நாட்டின் வளர்ச்சிக்கு
போராடுகின்ற பாட்டாளிகளின்
எரிமலைக்குழம்பு எனும்
ரத்தத்தில்
வேர் பிடித்து நிற்கிறது.
வாழ்க எல் ஐ சி.
வெல்க எல் ஐ சி
_____________________________ருத்ரா
காதல் காதல் காதல்
_________________________ருத்ரா
காதலில் இரண்டு வகை.
கன்னிக்காதல் எனும்
முதிரா காதல்.
முதிர் காதல் எனும்
முழுமை பெற்ற காதல்.
முதல் வகையில்
காதல் காதல் காதல்
காதல் போயின்
காதல் போயின்
சாதல் சாதல் சாதல்.
முதிர் காதலில்
காதலுக்கு
வெற்றி தோல்வி இல்லை
காதல் வந்திடினும்
காதல் போயிடினும்
காதல் காதல் காதல்.
இதில்
காதலுக்கு
முகம் மட்டும் இல்லை.
காதலுக்கு அகமும் உண்டு.
அண்டம் முழுதும்
அன்பால் அளக்கும்
பேரகம் உண்டு.
இந்த சமுதாயத்தின் முகமான
மனிதம் மலர்த்தும்
முகம் அந்த அகத்தில்
நிறைவாய் சுடரும்!
அதனால்
காதல் வாழ்க!
காதல் வாழ்க! வாழ்க!
_______________________________
காவினள் கலனே சுருக்கினள் கலப்பை.
(ஓலைத்துடிப்புகள் 108)
பச்சை யாழ் நரம்பின் பண்ணிய
பாலை ஓர்ந்த அம்புள் அஞ்சிறை
இணர் துழாஅய் தாது இறைப்ப
விண்ணின் மூசு நீடிழை விறைத்து
ஆய் இழை ஆங்கு அவன் நெஞ்சு ஊர
நேர்ந்த போழ்தில் இவளும் இமிழும்
வெள்ளருவி வெறியாட்டயர்வ போல்.
ஆன்று அவிந்து ஆங்கு அடங்கினாளன்ன
காவினள் கலனே சுருக்கினள் கலப்பை.
அச்சம் நாணம் மடம் பயிர்ப்பென
நால்வகை கலனும் ஒன்றே வாய்த்து
நீங்கினாள் ஆங்கண் அம்புயல் அன்ன.
கராஅம் கலித்த குண்டுநீர் இலஞ்சி
பெய்யும் நிழலும் கண்விடு ஒளியும்
கதூஉம் கரையில் இனநிரை முதலை
அன்னவன் பரவும் அவள் நோக்கி
அவன் கண்ணுமிழ் சிமிழின் ஒளிகூர.
வேங்கை முன்றில் கூன் வெள் இளம்பிறை
வாங்கு அமை கண்ணிடை புல்லொளி பிலிற்ற
வெண்ணிப்பறந்தலை அன்ன மார்பன்
அகலக்கிடந்து துயிலா துயிலில் ஆங்கு
முயங்கல் எழில்நலம் ஐம்பால் மூடிய
அணைப்பில் ஆழ்ந்தாள் நனிகளியுற்றே.
___________________________________________
தியரி ஆஃப் ப்ராபபலிடி
___________________________________ருத்ரா
காலையில் தான் காரை
எலுமிச்சம் பழம்
நசுக்கி எடுத்துவந்தார்.
மதியம் அவர் கார்
அந்த சாலை திருப்பத்தில்
எலுமிச்சம் பழம் ஆகிப்போனது.
________________________________
ஒரு பொழிப்புரை
===================
ஒள்ளிய மௌவல் நிரைத்தன்ன
___________________________________கல்லிடைக்கீரன்
(ஓலைத்துடிப்புகள் 107)
சீறிலை அங்கொடி அணியிழைக் கூந்தல்
அலமரல் எழுதகை உருகெழு செத்து
இருபால் குழன்ற சுரியல் தழீஇய
மெல்பூங்காற்றின் அணுக்கம் சிவணிய
வருத்தம் நோன்று ஓங்கல் நாடன்
ஒள்ளிய மௌவல் நிரைத்தன்ன எயிற்றன்
முறுவல் கொய்து மாய்ந்தே மடுக்கும்.
புலம்பு இறை கொள்ளும் வரிமணல் மயிரிய
தொடியும் வீழ்தரு துன்பம் பொருதனள்.
உழுவை குத்தினன் வீறு கொள் நடுகல்
குறிசெய்தான் செய்தி அவிழ்த்த தோழி
செந்தழல் பூசி நாணிய செய்தாள்
எல்லினன் நுங்கிய பெருங்கல் நத்தம்
குருதி சொரிந்தன பேஎய் வீக்கள் போன்ம்.
மாலையும் மடிந்தது வெரூஉய் தந்து.
_____________________________________________
இது எனது சங்கநடை செய்யுட் கவிதை
"கல்லிடைக்கீரன்"
_______________________________________________
பொழிப்புரை
__________________________________கல்லிடைக்கீரன்
சீறிலை அங்கொடி அணியிழைக் கூந்தல்
அலமரல் எழுதகை உருகெழு செத்து
இருபால் குழன்ற சுரியல் தழீஇய
சிறிய இலைகளுடன் கூடிய அந்தக்கொடி தலைவியின் கூந்தல் எழுந்து எழுந்து வீசி ஒரு தோற்றம் தந்ததைப் போல இருந்தது.(செத்து = போல இருந்தது) அது இருபக்கமும் குழைந்து சுருண்டு (குழன்ற சுரிய) அவளைத்தழுவி விழுந்து கிடந்தது.
மெல்பூங்காற்றின் அணுக்கம் சிவணிய
வருத்தம் நோன்று ஓங்கல் நாடன்
ஒள்ளிய மௌவல் நிரைத்தன்ன எயிற்றன்
முறுவல் கொய்து மாய்ந்தே மடுக்கும்.
புலம்பு இறை கொள்ளும் வரிமணல் மயிரிய
தொடியும் வீழ்தரு துன்பம் பொருதனள்.
உழுவை குத்தினன் வீறு கொள் நடுகல்
குறிசெய்தான் செய்தி அவிழ்த்த தோழி
செந்தழல் பூசி நாணிய செய்தாள்
எல்லினன் நுங்கிய பெருங்கல் நத்தம்
மெல்லிய தென்றல் அவளை மிக நெருக்கத்துடன் பொருந்தி தலைவனைப் பிரிந்த துயரத்தை வெளிப்பத்துமாறு அந்த மலை நாட்டுத் தலைவன் ஒளிபொருந்திய "வரிசையாய் அமைந்த சிறிய வெள்ளைப்பூக்கள் ஒத்த பற்களை உடையவனாக (மௌவல் நிரைத்தன்ன எயிற்றன்) இருந்தான்.அவன் புன்முறுவல் செய்து செய்து அவளையே கொய்து விடுவான் போல் இருக்கிறது.உற்றுக்கேட்டால் அந்த சிற்றொலி கூட மறைந்து நின்று ஒலிக்கும் என்பது போல் இருக்கிறது தலைவிக்கு .கொடி கொம்பு இல்லாமல் ஒரு மலர்க்கொடி அங்கும் இங்கும் தள்ளாடுவது போல (புலம்பு என்ற சொல் அதை குறிக்கிறது.புலம்பு என்றால் அக்கொம்பையும் சேர்த்து கொடியும் கொம்பும் தள்ளாடுவதைகுறிக்கும்) அவளது முன் கை (இறை) தடுமாறுகிறது. மெல்லிய மணல் வரி போல் படர்ந்திருக்கும் அழகிய மயிர் படர்ந்த அவள் முன் கையில் அணிந்த வளைகள் நெகிழ்ந்து வீழும் துன்பத்தோடு போராடுகிறாள். அப்போது அவள் தோழி "புலி குத்தி"எனும் நடுகல் அருகே (புலியோடு போராடிய வீரனின் நடுகல்) தலைவன் அவளை சந்திக்க இருப்பதாக வரும் செய்தி(குறி) பற்றி குறிப்பிடுகிறாள்.அப்போது அவள் அடைந்த நாணம் இருக்கிறதே!அது ஒரு அரிய காட்சி.தோழி சொன்னது அவள் மீது நெருப்பு போன்ற செந்நிறத்தைப்பூசியது. எல்லினன் (மாலைச்சூரியனை) நுங்கிய (விழுங்கிய) பெருங்கல் அத்தம (பெரிய மலையின் அந்த எல்லையோரம்)
குருதி சொரிந்தன பேஎய் வீக்கள் போன்ம்.
மாலையும் மடிந்தது வெரூஉய் தந்து.
ரத்தம் பீறிட்டது போலும் அச்சம் தரும் வகையில் சிறிய சிறிய சிவப்புப்பூக்கள் சிதறிய காட்சி போலும் இருந்தது.அந்த அச்சத்தால் அந்தி வேளையும் துயில் கொள்ளப்போய் விட்டது.
_______________________________________________________________
நான் பொதுவாக சங்கத்தமிழ்ச்செய்யுட்களை புரட்டி வாசிக்கும்போது பொருள் செறிந்த சொற்களில் புதியனவாய் தோன்றும் சொற்களை தேடித் தேடி படிப்பேன். அப்படி படிப்பது அந்தச் செறிவுத்தன்மையை உள் நோக்கி காணச்செய்யும்.அது ஒரு
வகை இலக்கிய இன்பம்.அகநானூறு 21 ல் "காவன் முல்லைப்பூதனார்" (பாலைத்திணை) பயன் படுத்திய "மௌவல்" "நிரைத்தன்ன" "சுரியல்" மற்றும் "புலம்ப" என்ற சொற்கள் எனக்கு மிகவும் ஆழ்ந்த பொருளைத் தந்தனவாகத் தோன்றின.அவற்றைத்தான் இச்செய்ளில் பயன் படுத்தி உள்ளேன்.
வழக்கமாய் அப்படி ஓரிரு சொற்களை மட்டும் எடுத்துக்கொண்டு என்
முழுச்செய்யுட் கவிதையை எழுதுவேன் அல்லது ஒரு குறிப்பிட்ட "வரியை" மட்டும் எடுத்து "தலைப்பு" ஆக்கி என் முழுச்செய்யுளை அமைப்பேன். சங்கச்செய்யுளின் ஒவ்வொரு சொல்லும் மிக மிக அழமும் அழகும் நுட்பமும் கொண்டவை. அதன்சிறப்பே என்னை இப்படி ஈர்த்துள்ளது.
______________________________________________________
என் கடவுள்
__________________________ருத்ரா
என் கோவிலுக்குள்
ஒரு கடவுளை
நிறுவி விட வேண்டும் என்று
கடவுளிடமே
கோரிக்கை வைத்தேன்.
அவரும் ஒரு
சுபயோக சுபதினத்தில்
பிரதிஷ்டையாகி விடுவேன்
கவலை வேண்டாம்
என்றார்.
இன்னும் அவர்
வந்த பாடில்லை.
கோவிலுக்குள் தினமும்
வந்து போகிறேன்.
கவலைகளைப்போக்க
ஒரு கடவுளை நிறுவும் கவலையே
இப்போது
என் கடவுள்!
____________________________
இணையம்
பிரபஞ்சங்கள் எல்லாவற்றுக்கும்
கூட்டிச்செல்கிறது.
என்னை இந்த ட்ஜிடல்
கூட்டில் அடைத்து வைத்து!
________________________________
ருத்ரா
அழகு பார்க்கிறேன்
உன்னை பட்டம் விட்டு
அழகு பார்க்கிறேன்
என் மனதை நொறுக்கி
"மாஞ்சா" ஆக்கி!
__________________ருத்ரா
கண்ணாடி வீடு
___________________________ருத்ரா
இதன் அருகே
கல்லெறி விளையாட்டு
நடத்துபவன் தான்
கவிஞன்.
எங்கோ தெரியும்
வானவில் பார்த்து
கற்பனை முக்கி
அவன் அம்பெய்தான்.
சில்லு சில்லாய்
சீனாக்களிமண் பொம்மையாக
சிதறிப்போனான்.
வில்லும் அம்பும் இருந்தால்
போதுமா?
குறி பார்த்து எய்யும்
கூர்மை வேண்டாமா?
அவன் சொற்கள் எல்லாம்
கடலில் வரைந்த நீர்க்கோலம்.
அவ்வளவு பெரிய கடலை
அவன் அருகே
குப்பைக்கூடையாய் வைத்தது யார்?
கானல் நீர் மான் பார்த்து
குறி வைத்தான்.
நீரும் மறைந்தது.
மானும் மறைந்தது.
வில்லை முறித்து தூர எறிந்தான்.
அதையும் அவன் செய்வதற்குள்.
இற்று வீழ்ந்தான்.
தரையில் விழாமல் தாங்கி நின்றன
அவன் மீதே எய்த
அத்தனை ஆயிரம் அம்புகளும்.
_________________________________________
கழுமரத்தின் மீது ஒரு கவிஞன்
____________________________________
எழுதிக்கொண்டிருக்கும் போதே
கவிதையை முடிக்கும் முன்
அந்தப் பேனா
முறிந்து விழுந்தது.
திட்ட ஆரம்பித்து விட்டது.
"ஏண்டா?
உனக்கு கொஞ்சமாவது
ரோஷம் இருக்கா?
எனக்கு
வாய் இல்லேங்கிறத்துக்காக
நீ
இப்படிக்கிறுக்கிக் குவிச்சா
என்ன அர்த்தம்?
ஏதாவது ஒரு "தொகுப்பு"
போட்டிருக்கிறாயா?
உனக்கு ஏதாவது அங்கீகாரம்
உண்டா?
என் குறுக்கை இப்படி
உடைக்கிறாயே
தினம் தினம்!
நீ மழுங்கிக்கிடக்கிறதும்
இல்லாம
இந்த நிப்பு முனைக்கு
நேர்த்திக்கடன் இருக்கிற மாதிரி
தினம் தினம்
மொட்டையடிச்சு
வழிச்சு வழிச்சு சந்தனம் பூசுறியே!
எல! அடுக்குமால இது.
அந்த திருச்செந்தூரு முருகன்
கேப்பாம்ல.
இந்தாக்ல ஒரு பரிகாரம் பண்ணா
நீ பொளச்சுக்குவல!
எல! நீ உக்காந்துருக்கிற இடத்துல
மொதல்ல
ஒன்ன விட ஒயரமா
ஒரு குப்பக்கூடய வச்சுகிட்டு
அதுல
எளுதி எளுதிப் போடுல!"
அந்தக்கவிஞனாகிய
நான்
வேறு ஒன்றும் செய்யவில்லை.
ஒரு கழுமரத்தில் ஏறிக்கிடந்து
கழுகுகளுக்காக
காத்திருக்கிறேன்.
________________________________________
ருத்ரா
என்ன இல்லை
இந்த திருநாட்டில்?
ஏன் இப்படி இந்த
இந்திய புத்திரர்கள்
ரோட்டோரங்களில்
கொசுக்களோடு ஈக்களோடு
மாட்டுச்சாணத்தோடு
மல்லாந்து கிடக்கவேண்டும்?
ஜெயஸ்ரீராமனோடு ராமனாக
தைக்கப்ப்ட்டு
கந்தல் துணிகளாய்
நைந்து கிடக்கவேண்டும்?
விவசாயிகள்
ஒரு புதிய உண்மையை அல்லவா
பஞ்சாப் டெல்லி வீதிகளில்
நாற்றுப்பாவிக்கொண்டு இருக்கிறார்கள்!
இந்த மானிடத்தின் எரிசக்தி
எத்தனை ஆயிரம் எரிமலைகளுக்கும் கூட
பெட்ரோல் பெய்யுமே?
அப்படியும்
ஏன் இந்த நீண்ட அமையதியான
போர்ச்சத்தத்தின்
ஊதுகுழலை
அந்த விடியலை ஏந்திய
எக்காளமாக்கிக்கொண்டிருக்கிறார்கள்?
சன்னமான குரலில் ஒலியெழுப்பி
சன்னலை திறந்து கொண்டிருக்கிறார்கள்?
போலித்தேசியத்துக்கு
பொய்யாய்
ஒரு அக்மார்க் முத்திரை
குத்திக்கொண்டு
அந்த பணமூட்டைகள்
நம் கோதுமை மணிகள் மூலமாய்
நம் கரும்புக்காடுகள் மூலமாய்
நம் மிளகாய்ச்செடிகளின் கொத்துக்களில்
டாலர்களை அள்ளும் கனவுகளோடு
இந்த சமுதாய சமநீதி தாகத்தை
அவித்துவிடவே பார்க்கிறார்கள்.
அவர்கள் பை நிறைய
பீரங்கிகள்
ரஃபேல் விமானங்கள்
இன்னும் எல்லாம்.
பிதுங்கி வழிகின்றன.
இந்த மனிதப்பூச்சிகள் நசுக்கப்பட
சாதி மத புராண அரிதாரங்கள்
மட்டும் போதும்.
ஆனாலும்
இந்த வயல்காட்டு புத்திரர்களின்
ஏர்கலப்பைகள் கூட
அவர்களை
கதி கலங்கச்செய்கிறது.
அதற்குள் ஆயிரம் ஆயிரமாய்
விஷ்ணுவின் வஜ்ராயுதங்களின்
விதைகள் தூவப்பட்ட்டிருக்குமோ
என்று.
நானா சாகிப்
தாந்த்யா தோபே
லாலா லஜபத் ராய் மற்றும்
பகத்சிங் தோழர்களின்
மிச்ச சொச்ச
விடியல் வானங்களின்
அக்கினிக் கீற்றுகள்
அந்த வயற்காட்டின் சதுப்புக்குள்ளிருந்து
முளைத்து வந்து விடுமோ என்று?
மீண்டும்
நம் இதயத்தின் ரத்த நங்கூரத்தின்
அடி நுனியிலிருந்து
பாடுவோம்
"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?"
__________________________________________________
ருத்ரா
சாமி
எங்க வீட்டுக்கு வந்து
தீட்டு கழிச்சு
சாமிக்கு பூஜை பண்ணிக்குடுங்க
சாமி!
முடியாதுடா.
ஏஞ்சாமி?
அவாள்ளாம் வந்து
அர்ச்சனை ஓதினாளோ இல்லியோ.
சாமியே தீட்டு ஆயிடுச்சு.
என்ன சாமி சொல்றீங்க!
ஆசாமியோ பேந்த பேந்த முழிச்சான்.
தீட்டா?
பாற்கடலில் படுத்திருந்த
பரந்தாமனுக்கும்
ஒன்றும் புரியவில்லை.
தமிழில்
"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு!"
ஆகா!
தேன் மழையோடு
நெய் அமுதும் வழிந்தது போல் அல்லவா
இருக்கிறது
என்று திளைத்திருந்த பகவானுக்கு
அவர் சொன்ன "தீட்டு" என்பது தான்
அவர் காதிலேயே ஈயத்தைக்காய்ச்சி
ஊற்றியது போல் இருந்தது.
துடியாய்..துடித்தார்.
நாரதா நாரதா என்று
அலறிக்கொண்டிருக்கிறார்.
_____________________________________
ருத்ரா
லூப்
___________________________ருத்ரா
உங்களுக்கு
பாசிடிவ் திங்கிங்கே இல்லை.
நண்பர் சொன்னார்.
கடவுள் இருக்கிறார் என்று
நம்ப வேண்டும்.
நம்பிக்கை எனும் அந்த
நட்சத்திர ஒளி போதும்.
அப்புறம்
இல்லை என்றும்
ஐயம் என்றும்
கேள்விகள் என்றும்
குப்பைகள் என்றும்
உங்கள் இதயம் முழுதும்
சிஸ்டாலிக் டைஸ்டாலிக்
நசுங்கல் சித்திரங்களே
வதைப்படலங்கள் அரங்கேற்றும்.
யாரோ ஏதோ
உங்களை இயக்குகிறார்
என்று எதற்கு
இந்த வேதாந்த வியாக்யானங்கள்?
நீங்கள் உங்களைச்சுற்றி
எதற்கு இந்த விலங்குகளை
பூட்டிக்கொள்கிறீர்கள்.
அதோ அந்த சனிக்கோளும்
செவ்வாய்க்கோளும்
உங்கள் மனங்களை
சொரிந்து கொண்டே
இருக்கவேண்டுமா?
எள்ளுப்பொட்டல தீபங்களையா
"நாஸா"
அங்கே கொண்டு போய்
இறக்கிக்கொண்டிருக்கிறது?
பாருங்கள் உங்கள்
கவலைகள் பெருகுகின்றன.
கவலைகளைப் போக்க
ஸ்ரீ ஆஞ்சனேய ஸ்வாமிக்கு
எத்தனை வடைகள் கொண்ட மாலையை
நேர்ந்துகொள்ளவேண்டும்
என்று
அந்த புங்கமரத்தடி வீட்டு
ஜோஸ்யரிடம் போய்
குறித்து வாங்கிக்கொண்டு
வரவேண்டுமே!
அந்தப்பெருங்கவலையே
இப்போது உங்கள் பெருமாள்.
போதும் ஸார்.
ஒன்றும் வேண்டாம்.
எதுவும் இல்லை
இங்கே கும்பிடுவதற்கு?
சாக்கடைப்பண்ணிகள் கூட
நாமம் தரித்துக்கொண்டு
நடு இரவு ஸ்வப்பனத்தில்
ஸ்லோகங்கள் சொல்லச்சொல்லி
அந்த வளைந்த கொம்பைக்கொண்டு
வம்பு செய்கிறது.
வேண்டாம்.
எல்லாம் விட்டு விடுங்கள்!
இறுதியாய்
அவரே
பாசிடிவ் எண்ணத்தை
நெகடிவ் ஆக்கி விட்டுப்
போய் விட்டார்.
அவர் அடித்த லூப்
பாசிடிவா? நெகடிவா?
நாத்திகம் என்னும் நெகடிவ்வை
மீண்டும் மீண்டும்
கழுவி சுத்தப்படுத்திக்கொண்டு
கும்பாபிஷேகம்
செய்து கொண்டிருக்கிறோம்.
____________________________________________
THEORY OF EVERY "THINK"
______________________________________________
when iam blank
that bears a glorified name
simply
a trash can
which can do nothing but
with all pin-pricks
with all mountains made of
mole-hills
with all cheap advices
to get rid of all vices
with a bunch of olive leaves
and a torch
tom-toming
to play your life
rather than to live a life
with...
with..
and with what not?
my verbal version always
conflicts with my
virtual version
when the real version
stealthily
dissolves in panics and battering
again
diffusing in the
void and vanity...
that's all about a
BIG BLANK THEORY !
____________________________
ruthraa paramasivan
காதல் இனிது
_____________________
24.05.2015
எழுதிப்பார்த்தேன்.
காகிதம் இனித்தது.
எறும்பு மொய்த்தது
பேனா நிப்பில்.
ஊதிவிட்டேன்
காற்றின் அணுக்களில்.
காதல் மகரந்தம்
உயிர்த்தது தெரியும்
மண்ணாங்கட்டியும்
பிருந்தாவனங்கள்!
அருகம்புல்லிலும்
ஆதாம் ஏவாள்.
நிலவையும் உரசி
தீப்பொறி உதிர
திங்கள் இங்கே
ஞாயிறு ஆனது.
பொன் பூசிய
அட்டைகள் குவியும்.
இதய மேடுகள்
எழுத்துகள் நிரடும்.
அவளை நினைத்த
அவளில் நனைத்த
அஞ்சல் தலைகளில்
ஆயிரம் தடவை
ஆயிரம் நாவு.
தேனில் ஊறிய
நிமிடங்கள்.
பஞ்சு மிட்டாய்
தருணங்கள்.
வருடங்கள் தோறும்
வருட வந்திடும்
மனதில் ஆயிரம்
மயிற் பீலிகள்.
வேலன்டைன்
வேட்டையின்
காகித அம்பில்
சிக்குமா அது?
"ஐ லவ் யூ டா.."
அலைவிரிக்கும்
சொல்லில் ஆயிரம்
வங்காள விரிகுடா.
கடலின் குமிழியாய்
சூரியன்
எழுவதும் வதும்
காதலின் மூச்சுகள்.
காதல் கடலின்
பாய்மரம்
கரை தட்டும் வரை
காற்றே உணவு.
____________________________________
கல்லிடைக்கீரன் கவிதைகள்
அஞ்சு ஐக்கூக்கள்
______________________கல்லிடைக்கீரன்
ஆற்றங்கரைச் சன்னல்
நாரைகளுக்கு.
நாணல்கள்
___________________________________1
கூந்தல் வாரும் ஒலி
எப்போதும் கேட்கும்.
அருவி
___________________________________2
இறக்கைகள் இருந்தும்
இதன் வானமே
நீர் தான்.
வாத்து
____________________________________3
சாக்கு நிறைய சேர்த்தார்கள்
மாலை டிஃபனுக்கு.
நண்டுகள்
___________________________________4
கழுதைப்பொதிகள் அளவுக்கு
அத்தனை மூவிகள் காசுக்கு.
ஓடிடி திரை.
____________________________________5
மகுடம்
___________________________ருத்ரா
எழுபத்தைந்து ஆண்டுகளின்
கனமான சுதந்திரம்
இதோ
நம் ஒவ்வொருவரின் தலையிலும்
சுடர்கிறது
மணிமகுடமாய்!
வரலாற்றின் தியாகத் தருணங்கள்
நம் முன்னே நிழலாடுகின்றன.
தூக்குக்கயிறுகள்
துப்பாக்கி குண்டுகள்
அதிரடியான பீரங்கிகள்
இவற்றில்
மடிந்த இந்திய புத்திரர்கள்
வெறும் குப்பைகளா?
மியூசியங்களில் அவர்கள்
உறைந்து கிடந்த போதும்
அவர்களின் கனவுகள் இன்னும்
கொழுந்து விட்டு எரிகின்றன
ஆம்
இன்னும் நமக்கு வெளிச்சம்
தருவதற்குத்தான்!
ஆனால்
ஓ! இந்திய மண்ணின் வேர்த்தூவிகளே
இன்னுமா
நீங்கள் இருட்டில் கிடக்கவேண்டும்?
சாதி மத வர்ணங்கள்
எத்தனை தூரிகைகள் கொண்டு
தீட்ட வந்த போதும்
ஓவியத்தின் வரி வடிவம்
விடியல் கீற்றுகளையே
நம் கண்ணில் இன்னும் காட்டவில்லையே!
இப்போது அந்த மகுடத்தின்
கனம் தெரிகிறதா?
அவை மயிற்பீலிகள் அல்ல
அவற்றுள் மறைந்திருப்பது
புயற்பீலிகள்!
உங்கள் சுவாசமாகிப்போன
அந்த பெருமூச்சுகளில்
நம் மூவர்ணம் படபடத்துப்
பறப்பது
உங்களுக்குத் தெரிகிறதா?
"ஜெய்ஹிந்த்!"
____________________________________________
இந்த தருணங்கள்.
______________________________________ருத்ரா
அசோக மரத்து நிழல்கள்
மலட்டுத்தனமான மந்தைவெளியில்
வீழ்ந்து கிடக்கின்றன.
சிங்கமுகக் கல்தூண்
சக்கரத்துடன் சிலிர்க்கின்றன
சப்தமில்லாமல்.
பீரங்கிகள் உமிழ்ந்தன குண்டுகளை.
அதன் ஒவ்வோரு வெடிமருந்தின்
துகள்களிலும்
கணிப்பொறியின் சில்மிஷங்கள்
டிஜிடல் கண்களில் ஊடுருவின.
இனி விறைப்பாக சல்யூட் வைப்பதற்கு
"ரோபோ"க்களேபோதும்.
காற்று வீசிய போதும்
கொடித்துணி விரியவே இல்லை.
எங்கிருந்தோ ஒரு "செயலி"
தூரத்து மொழியில்
ஜெய்ஹிந்த் என்றது.
மௌனப்புயல் என்று
மொழிபெயர்த்துச்சொன்னது
இந்தக் கனமான தருணங்கள்.
__________________________________
ஆகஸ்டு பதினைந்து 2021
நிழல்
_________________________ருத்ரா
என் நிழல் எனக்குள்
ஒரு நிழல் தருகிறது.
என் மனத்தில்
ஒளிந்து கொள்ளுகிற
நிழலில்
இந்த உலகம் தெரிவதில்லை.
அண்டை மனிதனை
மறைத்துக்கொண்டு
மறந்து கொண்டு
இந்த நிழற்பூதம்
பெரிதாய் வீங்குகிறது.
அவன் கண்ணீரும் அவலமும்
எனக்கு எதற்கு?
இந்த நிழல் எப்படி
என் மீது விழுந்தது?
என் பெற்றோர்
என்னை
பிள்ளையாருக்கு
தோப்புக்கரணம்
போடச்சொன்னார்கள்.
கீ கொடுத்தது போல்
பகவானுக்கு
ஸ்லோகங்கள் சொல்லச்சொல்லி
என்னை வார்த்தெடுத்தார்கள்.
நான் வளர வளர
இந்த நிழலும்
வளர்ந்தது.
இந்த இருட்டுக்குள்
எனக்கு மட்டும்
எந்த வர்ணமும் இல்லை.
ஈசா வாஸ்யம் சொல்றதுடா.
வெளிச்சம் சின்ன பிரம்மம்னா
இருட்டு பெரிய பிரம்மம்டா
என்றார்கள்
அப்புறம்
எப்படி இங்கு அந்த நான்கு வர்ணம்?
எதற்கு அந்த நான்கு வர்ணம்?
அந்தக்கேள்வியைக் கேட்கவே கூடாது டா.
நாக்கு துருத்தி மிரட்டினார்கள்.
அப்புறம் விஸ்வரூபம் வந்து
பஸ்பமாக்கி விடும் என்று
பாஷ்யம் சொல்லிவிடு.
என்றார்கள்.
நூல் படிக்கின்றேனோ
இல்லையோ.
வருடா வருடம்
நூல் மாற்றிக்கொள்கிறேன்.
இந்த நிழலுக்கு
கற்பித்து விட்டார்கள்.
கடவுளாவது ஒண்ணாவது.
நமக்கு மட்டுமே தெரிந்த
பிரம்ம ரகசியம்டா இது!
இதுவே நம் பிரம்மாஸ்திரம்.
மறக்காதே.
என் காதில் அந்த உபதேசம்
விழுந்ததிலிருந்து
வெளிச்சத்தை தேடாத
வெளிச்சத்தை விரும்பாத
அந்த நிழல் தான்
என்னை ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறது.
__________________________________________________
ஒரு படப்பிடிப்பு
_______________________________
ருத்ரா
வாழ்க்கை என்பதன்
திரைப்படக்கதை
எங்கிருந்தோ
எழுதப்பட்டது
எழுதப்படுகிறது
எழுதப்படப்போவது
அப்படித்தானே
நிமிடத்துக்கு நிமிடம்
டிவி சீரியல்களின்
கதை
கொப்பளிக்கப்படுகிறது.
இங்கு எழுதுவது பேனா அல்ல.
விளம்பரதாரர்களின் தூண்டில்.
இந்த பொருட்களின் சந்தைத்திடலில்
கண்ணீரும் கொலையும் ரத்தமும்
காதலும் கத்தரிக்காயும்
குடும்பங்களோடு பிசையப்பட்டு
பிண்டம் பிடிக்கப்படுகின்றன.
பார்ப்பவர்கள்
எல்லோருடைய ஆசைகளும் அவலங்களும்
உக்கிரங்களும் வக்கிரங்களும்
வர்ணங்களில் தோய்க்கப்பட்ட
பிம்பங்கள் ஆகின்றன.
என் இனிய நண்பனே
உன் வாழ்க்கையின் திரைப்படக்கதைக்கு
திரையே ஒரு வெறுமை தான்.
பிம்பங்கள் எனும் நிழல்கள் ஏற்படுத்தும்
காரணம் கூட
ஒரு பூஜ்யம் தான்.
ஒரு படப்பிடிப்பின்
அந்த மெகா சீரியல்
ஒரு ஹோலோகிராஃபி எனும்
சூனியத்தின் சித்திரங்கள் தான்.
அதற்கு
தலைவிதி எனும் பெயரிட்டு
ஆயிரங்கள் அல்ல
லட்சங்கள் அல்ல
கோடிக்கணக்காய்
ஒவ்வொரு மனித ஆசையின்
மயிர்த்துடிப்புகளில்
"எபிசோடுகள்"
இங்கு ஓடிக்கொண்டிருக்கின்றன.
கண்ணுக்குத்தெரியாத
அந்த விளம்பர தாரராய்
கடவுள் இருப்பதாய்
அவரது காமிரா பரிவாரங்களாய்
சமுதாய சாதி மத ஓட்டை ஒழுகல்களும்
ஊழல் ஒழுங்கீனங்களும்
வெண்கொற்றக்குடையேந்தி
வருகின்றன.
இந்த சொக்கட்டான் விளையாட்டை
அப்படியே
கொட்டிக்கவிழ்த்து விடுங்கள்.
இப்போது தெரியும்...
எல்லாம் அம்மணமாய் ஓடுவது.
மானிட வாசனையையே
மானிட அன்பையே
அதன் சமுதாய சமநீதியையே
கீழே நசுக்கிக்கொண்டு
ஓடும் ஒரு
லாபவெறியின் அனக்கொண்டா பாம்பு
வாய் பிளப்பது நன்றாகத்தெரியும்.
புருடா விடப்பட்டுக்கொண்டிருந்த
அரிதாரங்களும் அவதாரங்களும்
சாயமிழந்து போன
வரலாற்று அவமானங்களும் கூட
துல்லியமாய்த் தெரியும்.
"ஆன் லைனில்"கூட
அலை அலையாய் வரும்
ஆக்கிரமிப்புகளில்
நம் சிந்தனைகள் சிதைந்துவிடலாகது.
சமுதாய அறம் கூர்மை கொள்ளட்டும்.
சாதி மதங்களின் ஆதிக்கமே
இங்கு ஒரு பெருங்கோயிலாக
எழுப்பப்படும் தோற்றங்கள்
வெறும் நுரைக்கோபுரங்களாய்
நொறுக்கப்பட வேண்டும்.
வென்றெடுக்க வேண்டிய
வருங்கால வெற்றிகளின்
நம்பிக்கைகளின்
முதுகெலும்புகள் அந்த பாம்புகளால்
கூழாக்கப்படும் முன்
குபுக்கென்று குமுறியெழுங்கள்.
இவர்களின் தந்திர சித்திரங்கள்
கலைந்தொழியட்டும்.
ஒளிபடைத்த கண்ணினராய் இந்த
இருட்டு அமைப்புகளை
தவிடு பொடியாக்கி
முன்னேறுங்கள்..ஆம்
முனைப்புடன் முன்னேறுங்கள்
__________________________________________
https://www.youtube.com/watch?v=zZdu_3ZWs_g
கல்லிடைக்குறிச்சியே யார் நீ?
___________________________________ருத்ரா
நீ மண்ணா?
நீ மலையா?
நீ பளிங்கு நீரா?
நீ மருதமரக்கூட்டமா?
நீ வயற்காடா?
நீ நாரைகள் பூத்த வானமா?
நீ தென்னைச்சிலுப்புகளா?
அதோ
அங்கு வானத்தை நோக்கி
வாய் பிளந்து
பசியோடு
ஒரு மவுனத்தை
எரிமலைப்பிழம்பு போல்
போக்கு காட்டி
அழகு காட்டுகிறதே
அந்த மலையா?
எது சொல்?
என் இதயம் முழுதும்
நிரவி நிற்கும்
துடிப்பா நீ?
__________________________
அம்மாவின் தோளில்
இருக்கும் மகன் என்ற
அந்த சிறுபயல்
அம்மாவை
இன்னும் முழுதாக
புரிந்து கொள்ளவில்லை.
நாளை வரும்
அவன் மனைவியே
அன்பில்
அவள் அம்மாவுக்கு
போட்டி என்று.
தோளை விட்டு இறங்கிய
இப்போதைய இந்த
மகனுக்கும்
புரியவில்லை
இந்த மனைவிதான்
அவன் அம்மா என்று.
அதனால் தான்
மனைவி பரிமாறும்போதெல்லாம்
என் அம்மாவின் கைப்பக்குவம் வருமா
என்று கேட்கிறான்.
அந்த மல்லிகைப்புன்னகையுடன்
இலையில் விழும்
மல்லிகைப்பூ சாதத்திலும்
முட்களைத் தேடுகின்றான்.
சொற்கள் கூட பூக்கள் தானே.
அதைக்கொண்டா கல்லெறிவது?
_______________________________ருத்ரா
https://www.youtube.com/watch?v=pm0i_yYyzcM&list=PLEt6xjuYap2ey-mdP5lP32K8DorXLBfUM&index=2
https://www.youtube.com/watch?v=dJ2VxjAiJ-4
ஓ! தென்னை மரமே!
வேடிக்கை பார்த்துக்கொண்டே இரு.
உன் கூந்தலை
சிலுப்பி சிலுப்பிக்கொண்டிருந்தாலும்
ஒன்றும் நிற்கப்போவதில்லை.
இந்த மக்களின்
கண்ணாடி பிம்பம்
சுக்கல் சுக்கலாக
நொறுங்கிக்கொண்டிருக்கிறது.
அப்போதும்
இந்த மண்ணின் கனவு
மொழி இனமாண்பு
எல்லாம்
நொறுங்கிப்போன நிழல்களாக
கீழே கிடக்கின்றது.
பன மரத்திற்கும் தென்னை மரத்திற்கும்
ஈச்ச மரத்திற்கும் விடுதலை
என்று அன்று
நம் சுதந்திர சுவாசத்தை
கொண்டாடினார்கள்.
ஆனாலும் நம் வெளிச்சக்கதிர்கள்
எல்லாம்
அந்த கண்ணாடிப்புட்டிகளின் வழியே
இன்னும் இங்கே
ஏழுவர்ணம் காட்டுகின்றது.
பழைய பத்தாம்பசலிகளின்
நான்கு வர்ணங்களோடு
இன்னும் பல
குறுகியவெறி வர்ணங்களும்
சேர்ந்து
அதோ தோரணங்கள் ஆடிக்கொண்டே தான்
இருக்கின்றன.
புதிய கொண்டாட்டங்களுக்கு
கொடியை
துணிவிரித்துக்காட்டப்போகும்
உற்சாகங்களையும்
வேடிக்கை பார் தென்னை மரமே!
எத்தனையோ கோடி மக்கள்!
இவர்கள் எழுச்சி பெற்றால்
என்னாவது?
ஓ மக்களே!
பத்து பேருக்கு நூறு ஒற்றர்கள்!
இதற்கு பேரா நாடு?
உங்கள் முதுகை சுரண்டிக்கொண்டிருக்கும்
அந்த முட்களின் காம்பினிலே தான்
முகம் காட்டுகின்றன
அந்த மூவர்ணரோஜாக்கள்.
__________________________________________
https://www.youtube.com/watch?v=91PjBulmDQg
குடமுருட்டி சங்கரன்கோவில்
_____________________________________ருத்ரா
பாயும் அந்த வைரத்திவலைகளில்
எனது பத்து வயதுகளும்
பதினொன்று வயதுகளும்
கோலி விளையாடுகின்றன.
அம்மாவின் இடுப்புச்சட்டியில்
கமகமக்கும் கூட்டாஞ்சோறு.
கால்கள் அளைய அளைய
என் தம்பியும் நானும்
அந்த தாம்பிரபரணியின்
முதுகில் சவாரி செய்வது போல்
அந்த கல் அடுக்கு பாலத்தில்
நடப்போம்.
தூரத்து வைராவிகுளத்தின்
மரக்கூட்டங்களும் வெள்ளைநாரைகளும்
எங்களுக்கு காட்சி இன்பம்
பருகக் கொடுத்தன.
மணிமுத்தாறும் பொருநையும்
சங்கமிக்கும் "சங்கத்தமிழ்"
ஓலைப்பாட்டுகள்
சல சலவென்று
இதயங்களில்
"களங்கனி அன்ன கருங்கோட்டுச்சீறியாழை"
(கபிலர் பாடல் 145 புறநானூறு)
சிலிர்த்துக்கொண்டு ஓடுகிறது.
வெறுமையாய்ச்சுருண்டு
அந்த நாட்களை
அதோ தூர எறிந்து விட்ட
அந்த பற்பசைகுழாயிலிருந்து
மீண்டும் பிதுக்கி எடுக்கமுடியுமா என்ன?
பருக்கைக்கற்களின் சரசரப்பில்
அந்தக்காலம் முணுமுணுக்கிறது.
கால் சட்டைகளின் சுவடுகளில் கூட
கனமான சரித்திரங்கள் தான்.
___________________________________________
வைரஸ்
________________________________ருத்ரா
இது
வாழ்க்கையா?
உயிரா?
உயிராய்ப்பார்க்கும்போது
இரத்த அழுத்தம் சொல்லும்
பாதரச பூனைக்கண்கள்
எண்களாய்
ரப்பர் குமிழ்களை
பிசுக்கு பிசுக்கு என்று
பிசுக்குகிறது.
வாழ்க்கையைப்பார்க்கும் போது
கையில் பிடிக்கமுடியாத வானமாய்
ஆசை..பேராசை எல்லாமே
"ஆயிரங்கண்"வலை கொண்டு
போர்த்துகிறது.
கூட்டிப்பெருக்கிய
குப்பையாய்
கனவுகள் தெருமுனையில்
எறியப்படுகின்றன.
தூசிகளின் விஞ்ஞானம் தான்
கருந்துளையும் விண்வெளியும் என்று
கணித சூத்திரம் சொல்லும்
விஞ்ஞானியே!
என்னை அப்படி ஒரு தூசியாய்
பல கோடி ஒளியாண்டு தூரத்துக்கு
ஒரு குவாண்டம் டெலிபோர்டேஷன் செய்து
அனுப்பி விடு.
அப்போதும்
நான் மனிதனின் கண்களில் தான்
மேய்ந்து கொண்டிருக்கவேண்டும்.
அந்த காட்சிகளுக்குள்
நான் பொதிந்துகிடக்கவேண்டும்.
உயிர் கழன்றபின்னும்
வாழ்க்கை எனும்
எனும் ஒரு நுண்வைரஸ்
அதோ அந்த மேகங்களில்
அல்லது
ஓடும் வாய்க்காலின் பளிங்கு சிலேட்டில்
தன் கூரிய அலகால்
சிவப்பு நீல வண்ணத்தில்
முங்கியெழும் மீன்கொத்தியின்
சிறகுத்துடிப்பாய்
அல்லது
எவனாவது எவளாவது
தன் இளம்பருவ மூச்சுக்குமிழிகளில்
செதுக்கும் ஏக்கச்சிற்பத்தின்
வரி வடிவாய்
உலவிக்கொண்டிருக்கவேண்டும்
என் கூரிய பார்வைகளுடன்.
______________________________________________
நெருநல் வேங்கை வெள்வீச் சிதற
___________________________________
(ஓலைத்துடிப்புகள்)
நளி இரு முன்னீர் உருள்நா உழப்ப
திண்கலம் திரியா பெருங்கலம் கோடா
அணிநன்கலம் பரவை ஓய்ச்ச
பன்மொழித் தேஅம் பலப்பல நாட்டி
நெடுஞ்சிமயத்து நுதல் ஒற்றி ஆங்கே
வில்லும் பொறித்த விடைத்தமிழ் வீரம்
திசைதொறும் தழீஇ நின்று ஒளிருதல் காட்டி
தொல்லிய ஐந்திணை தொகுதரும் மண்ணின்
மண்ணிய தூமொழித் தமிழின் இமிழிசை
ஒலிக்கும் சேர்ப்பன் கண்ணின் ஒளித்து
துயில்பொருதல் என்னே நுவல்வாய் தோழி.
பெருங்கல் விடரளை புள்ளினம் சிலைப்ப
எல்லின் கூரொளி குருதிதரக் கீண்டு
செவ்வெழு காலை செயிர்த்த காலை
நெருநல் வேங்கை வெள்வீச் சிதற
எந்தன் ஐம்பால் காணிய குறி எச்சம்
நாணுத் தக உடைத்து என் முகம்
யாங்கு கொல் புதைக்கும் அளியள் யானே.
________________________ருத்ரா இ பரமசிவன்
(நான் எழுதிய சங்கநடைச்செய்யுட் கவிதை இது)
(பொழிப்புரை தொடரும்)
what is Nothing?
whether this is a Question
or an Answer?
Put another Question
What is a thing?
You can say anything
on this thing.
But
yourself or some one else
may try a concept
to bound that thing
or it will blow up
to a void.
Now again that same question
hinges on it...
what is a void?
chain of words go on..
concepts go on
a bang or a whimper.
an emotive syndrome?
a thing
or
a nothing
a beautiful clothing of a frothing
bubbles a lot.
the bubbles make ocean
or a universe.
Can you visualize
with empty intuition
and say it a god!
that may be one of those bubbles
that just bear the labels
as either a thing
or a nothing!
______________________ruthraa e paramasivan
அர்ச்சனை
___________________________________ருத்ரா
உன் அர்ச்சனைச்சீட்டையும்
பொருள் புரியா கூச்சலையும்
தூர எறி!
அகர முதல என்று ஆரம்பி.
இந்த விண்ணையும் மண்ணையும்
தாண்டிச்செல்.
இந்தக்கடல் கூட
உன் உடம்பின் உழைப்பின்
வேர்வை மாதிரி தானே!
அதன் இயற்பியல் பற்றி
விளம்பு.
அதற்குள்ளும்
உன் கல்பாக்கங்கள்
கண்ணுறங்கிக்கிடக்கிறது
என்று உணர்.
என் முன் உனக்கு
சிந்தனை கதிர் விரிக்க
வேண்டும்.
எனக்கு ஏற்படுத்திய
இந்த அட்டைக்குடும்பத்தை
தட்டி யெறி.
எனக்கு உடம்பு கொள்ளாமல்
பொண்டாட்டிகளாம்.
எனக்கும் என் ஆனைக்குட்டிப்பிள்ளைக்கும்
இன்னும் ஆறு தலை முளைத்த
அருமந்த செல்வனுக்கும்
நீ நம ஓம் நம ஓம்
என்று சொல்லிக்கொண்டிருப்பதாய்
இந்த தவளைகள்
இரைச்சல் இட்டுக்கொண்டே
இருக்கின்றன.
இந்த மந்திரக்குப்பைகளை
தூர எறி.
நீ உன் சிந்தனையை
நீ உன் அறிவை
கூர் தீட்டும்
இடமாக இது இருக்கட்டும்.
சரி
இன்றிலிருந்து உன் மூளையை
சாணை தீட்டு.
ஒரு பெரிய வெடி வெடித்த
ஆற்றல்களின்
மிச்ச சொச்சங்கள் தானே
இந்த "அண்டம்".
அப்படியென்றால்
அந்த திரியைப் பற்றவைத்தது
யார்?
அதற்கு முன் அதன்
நிலை என்ன?
எல்லாமே நீ தான்.
உன் மூளையில் தானே
இப்படியெல்லாம் உதிக்கிறது.
மனிதனே!
தினம் தினம்
சூரியன் அந்த கிழக்கு விளிம்பிலா
உதிக்கிறது?
இல்லை!இல்லை!!
உன் மூளையின் மலை மடிப்புகளிலிருந்து
தினமும்
வெளிச்சம் பரவுகின்றது.
அது தான் சொல்கிறது
"ப்ளாங்க்" என்பவன் கண்டுபிடித்த
மாறிலி எனும் பரம்பொருளை.
அது விண்டு விண்டு விளக்குகிறது.
என்னைப்பற்றி
புராணங்கள் புளுகியது போதும்.
அதன் அடிச்சிந்தனையில்
தேறும் அறிவு ஒளியின் செதில்களை
சேகரிக்க முயல்.
கடவுளே.
என்ன இது?
நான் உன்னைப்பாடுவதற்குப்பதில்
நீ என்னைப்பாட ஆரம்பிக்கிறாய்?
அந்தக்குரல் தொடர்கிறது.
போதும்
இந்த வவ்வால் புழுக்கைகளின்
நாற்றம் தாங்க முடியவில்லை.
இந்த கோவில்களை
நூலகம் ஆக்கு.
தேக்கம் அடைந்து அந்த
நூலாம்படை நூல்களை
மார்பில் அணிந்து கொண்டா
இன்னும் வாந்தி யெடுக்கப்போகிறாய்?
இந்த "கல்" கூடங்களே
இனி எதிரொலிக்கட்டும்
கல் கல் என்று.
ஆம்! இவை
உன் பல்கலைக்கழகங்கள்.
காலமும் வெளியும்
இந்த பிரபஞ்சத்தின் புழக்கடையில்
சுழியங்களாய் தொலைந்து போயிருக்கின்றன
என்று இயற்பியல் ஞானம் கூறுவதை
இங்கு வந்து பட்டைதீட்டிப் படித்து அறி.
கருந்துளை எனும்
அந்த முற்றுப்புள்ளியிலிருந்து கூட
அறிவுத்திறளின் ஆற்றல் கதிர்வீச்சு
(ஹாக்கிங் ரேடியேஷன்)
முளை விடுகிறதாய் முனைப்பு காட்டும்
அந்த கல்வியில் கரு உறு!
வெறும்
பிறப்பால் பிரம்மனின்
கொம்பு முளைத்திருப்பதாய்
ஆதிக்கம் செலுத்தும்
சூழ்ச்சிகளையெல்லாம்
முறியடித்து
அந்த கொட்டு மேளங்களை முழக்கு!
___________________________________________