வெள்ளி, 6 செப்டம்பர், 2019

ரஜனியோடு ஓர் "பலீஞ்சடுகுடு"

ரஜனியோடு ஓர் "பலீஞ்சடுகுடு"
==============================================ருத்ரா

சூபர்ஸ்டார் தமிழ்நாட்டில்
மொத்த ஓட்டுவங்கியின்
"ஒவர்ஹெட் டேங்க்"
ஆக இருப்பதாக‌
மூலை முடுக்கெல்லாம்
தெறிக்கவிடப்பட்டிருக்கிறது.
தொலைக்காட்சியானாலும் சரி
பத்திரிகைகள் ஆனாலும் சரி
எல்லாம்
ரஜனியை தொட்டு தொட்டு
தவில் அடித்து தங்கள்
டிஆர்பி ரேட்டையும் உயர்த்தி
கல்லாப்பெட்டியையும் நிரப்பி
பிசினஸ் செய்கிறார்கள்.
திரைப்படத்துறையோ
இவர் தான்
வானத்து மொத்த நட்சத்திரங்களையும்
திரட்டி வைத்திருப்பதாக‌
அவர்களுடைய பிலிம்களுக்கே
பிலிம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
எம் ஜி ஆரின்
நான் ஆணையிட்டால்...
என்று
சுளீர் சுளீர் என
சவுக்கடிகளின் இன்ப அதிர்ச்சியில்
மரத்துப்போன‌
நம் தமிழ் நாட்டு
மண்புழுக்கள்
ஏற்கனவே சிறகு முளைத்ததாய்
சிலிர்த்துக்கொண்டே
மல்லாந்து கிடக்கிறார்கள்.
அதே போல்
சாட்டைக்குப்பதில்
"பஞ்ச்" டைலாக்குகளில்
நம் மக்கள்
அவரது சினிமா இருட்டின்
நிழலையே
கஞ்சி குடித்துக்
கவலை மறந்து கிடக்கிறார்கள்.
இந்த லட்சணத்தில்
"கஞ்சி குடிப்பதற்கிலார்..
என்று
"நெஞ்சு பொறுக்குதில்லையே" பாட்டு
இந்த "நிலைகெட்ட மனிதர்களுக்காக"
எங்கொ ஒரு ஒலிபெருக்கியில்
அந்த எரிமலை பாரதியின்
சொற்துண்டுகளை தீக்கங்குகளாக‌
உமிழ்ந்து கொண்டிருக்கிறது.
சரி..
வரப்போகிற சட்டமன்றத்தேர்தலில்
தமிழ் நாட்டை காவி மண்டலமாக்கும்
அந்த "கமண்டலத்தை"
ரஜனி கையில் அவர்கள் தரப்போகிறார்கள்.
அவருக்குத் தெரியும்
அவரது ஆன்மீகத்துக்கும்
இவர்களது "மாட்டிறைசிக்கும்"
ஒட்டவே ஒட்டாது என்று.
இருப்பினும்
தூதுகள் அவரைத் துரத்துகின்றன.
ராஜனியோடு
பலீஞ்சடுகுடு
ஆடத்துவங்கி விட்டார்கள்.
ஈ வி எம் குள்ளேயே
தூண்டில் வீசி
இந்தியாவை
துள்ள துடிக்கப்பிடித்து
காவித்துண்டாக்கி
கக்கத்தில் சுருட்டி வைத்திருப்பவர்கள்.
இவருடைய
"தர்பாரை" வைத்து
அவர்களுக்கு
"கபர்தார்"
சொல்வாரா இவர்?


============================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக