சந்திராயண் 2
=======================================ருத்ரா
இந்தியவிஞ்ஞானிகளின்
அறிவியல் சிந்தனை
யாருக்கும் சளைத்தது அல்ல.
சறுக்கல்களும் தவறுதல்களும் கூட
இயல்பு தான்.
பெருமதிப்பிற்குரிய
திரு.சிவன் அவர்களுக்கு
நம் வாழ்த்துக்கள்.
இதில் கண்ணீருக்கு இடமில்லை.
கண் துஞ்சா இரவுகள்
எத்தனை கடந்திருப்பீர்கள்?
உங்கள் கணிதசூத்திரங்களின்
கால்கள் அங்கே
எப்போதோ தடம் பதித்துவிட்டது.
கவலைகள் வேண்டாம்.
நம் பார்வைக்கு அகப்படாத
நிலவின் அந்தக் கன்னத்தை அல்லவா
செல்லமாக கிள்ளவேன்டும்
என்று நினைத்தீர்கள்.
உலக சிந்தனையிலிருந்து
மாற்றி யோசித்த
நம் விஞ்ஞான சிந்தனை
நிச்சயம் வெற்றி அடையும்.
அந்த நிலவைத்தொட்டு
தோண்டித்துருவி
அங்கிருந்தும் கூட
ஆற்றல் வளத்தை இங்கு
நமக்கு அருவியாய்க்கொட்ட
ஒரு புது முயற்சியில்
நாம் இறங்கியே தீருவோம்.
இந்த சந்திராஷ்டம சங்கடத்துக்கு
பரிகாரம்
சந்திரன் கோயிலில் கோடியார்ச்சனைகள்!
கணபதி ஹோமம் தொடங்கி
சஹஸ்ர ருத்ர யக்ஞம் வரை
செய்தல் வேண்டும் என்று
பஞ்சாங்க பரிவாரங்கள்
படையெடுக்கலாம்.
அவற்றை புறந்தள்ளுவோம்.
சிவன் அவர்களே
உங்கள் அறிவியல் சாதனை
எனும் அந்த சடைமுடியிலிருந்து
சந்திரனும் இறங்கி வருவாள்.
கவலை வேண்டாம்.
வாழ்க உங்கள் விஞ்ஞானம்.
வெல்க உங்கள் விஞ்ஞானம்.
===============================================
=======================================ருத்ரா
இந்தியவிஞ்ஞானிகளின்
அறிவியல் சிந்தனை
யாருக்கும் சளைத்தது அல்ல.
சறுக்கல்களும் தவறுதல்களும் கூட
இயல்பு தான்.
பெருமதிப்பிற்குரிய
திரு.சிவன் அவர்களுக்கு
நம் வாழ்த்துக்கள்.
இதில் கண்ணீருக்கு இடமில்லை.
கண் துஞ்சா இரவுகள்
எத்தனை கடந்திருப்பீர்கள்?
உங்கள் கணிதசூத்திரங்களின்
கால்கள் அங்கே
எப்போதோ தடம் பதித்துவிட்டது.
கவலைகள் வேண்டாம்.
நம் பார்வைக்கு அகப்படாத
நிலவின் அந்தக் கன்னத்தை அல்லவா
செல்லமாக கிள்ளவேன்டும்
என்று நினைத்தீர்கள்.
உலக சிந்தனையிலிருந்து
மாற்றி யோசித்த
நம் விஞ்ஞான சிந்தனை
நிச்சயம் வெற்றி அடையும்.
அந்த நிலவைத்தொட்டு
தோண்டித்துருவி
அங்கிருந்தும் கூட
ஆற்றல் வளத்தை இங்கு
நமக்கு அருவியாய்க்கொட்ட
ஒரு புது முயற்சியில்
நாம் இறங்கியே தீருவோம்.
இந்த சந்திராஷ்டம சங்கடத்துக்கு
பரிகாரம்
சந்திரன் கோயிலில் கோடியார்ச்சனைகள்!
கணபதி ஹோமம் தொடங்கி
சஹஸ்ர ருத்ர யக்ஞம் வரை
செய்தல் வேண்டும் என்று
பஞ்சாங்க பரிவாரங்கள்
படையெடுக்கலாம்.
அவற்றை புறந்தள்ளுவோம்.
சிவன் அவர்களே
உங்கள் அறிவியல் சாதனை
எனும் அந்த சடைமுடியிலிருந்து
சந்திரனும் இறங்கி வருவாள்.
கவலை வேண்டாம்.
வாழ்க உங்கள் விஞ்ஞானம்.
வெல்க உங்கள் விஞ்ஞானம்.
===============================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக