அகழ்நானூறு 14
_______________________________________
சொற்கீரன்
ஆறலை கள்வர் கொடுமைக் கொலையின்
வீழ்படு பைம்பிணம் குடற் படர்க் கொடுஞ்சுரம்
கற்பரல் பதுக்கை கொடிவிடு குருதியின்
காட்சிகள் மலியும் கொடும் பாழாறும்
இறந்து நீண்டார் நீளிடை நில்லார்
நின் முறுவல் ஒன்றே மின்னல் காட்டும்.
விலங்கிய குன்றின் சிமையமும் தாண்டி
பன்மொழி தேஅத்து பகைப்புலம் அறுத்து
பொருள் குவை பலவும் கையொடு ஆர்த்து
மீள்வரும் ஆற்றின் முள்ளிய முழையில்
வரியொடு சினத்த வாலெறி விழியின்
பொறிகிளர் வேங்கை பாய்தலும் உவக்க
கூர்வேல் கையன் அகலம் விடைத்த
மள்ளல் தழீஇய விரைவான் கொள்ளை
பட்டுணர் களியின் ஆழம் மூழ்கி
சில்லரி வளையும் உடைதல் கண்டும்
அவன் வழி இழிந்து மணிச்சிறைத்தும்பி
யாழ்நரல் பெயர்த்தாய் அம்ம வாழி.
_______________________________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக