அகழ்நானூறு 10
__________________________________________________
சொற்கீரன்
ஆரம் நிவிய அந்தார் அகலன்
அமை வாங்கு அஞ்சுரம் ஒற்றி
வெண்திங்கள் கண் ஒளித்து வரூஉம்
கடைவிழிக் கடாத்த அற்றைத்திங்கள்
அணிநலம் சிதைஇய அன்பின் நல்அணி
ஊர்ந்தன செய்தான் நல்லூழ் உவப்ப.
அருவரை இழிதரும் மென் திரைத் திவலை
அனைய அஞ்சிறைத் தும்பி ஆர்க்கும்
கயந்தலை மந்தி பார்ப்பின் கடுபசி
அழிக்கத் தாவும் கடுவன் நீள வீழ்த்த
பலவின் தீஞ்சுளைத் தொடத் தொட வெரீஇ
சுரிஇரும் பித்தை சுரும்பு இனம் கவிய
நிழற்கவின் நாடன் அழலவிர் வெஞ்சுரம்
எவன்கொல் தரூஉம் என்னொடு படர்
துயர் நனி இங்கு நிரவினன்.
___________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக