அகழ்நானூறு 13
__________________________________________
சொற்கீரன்.
நீர்வாழ் முதலை ஆவித்தன்ன
ஆரக்கால் வேய்ந்த அகல் படப்பையின்
அணிசேர் பந்தர் இவரிய பகன்றை
அணிலொடு கொடிய அசைவளி ஊர்பு
தேரை ஒலியில் பசலை நோன்ற
சேயிழை இறையின் செறிவளை இறங்க
சென்றனன் வெஞ்சுரம் மாண்பொருள் நசையிஇ
காந்தளஞ்சிறு குடி கௌவை முரல
பல்லியம் கறங்க பாழ்நீடு இரவின்
அரிவாய் குரலின் அஞ்சிறைப்பூச்சி
பகுவாய்த் தெள்மணி அலம்பல் மாக்கடல்
ஓதம் நிறைத்தன்ன பாயல் பரவி
ஊடிய நுண்மாண் நுழை ஊசி ஊர்பு
துன்பியல் செவ்வழி உய்த்த பண்ணின்
யாழ ஊழ்த்த நோய்மிகு இரவில்
நகையும் செய்வாள் அவனை ஆளும்
அன்பின் சுடுகணை மைவிழி உயிர்த்தே.
_____________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக