அகழ்நானூறு 11
______________________________________
சொற்கீரன்
சுரை இவர் பொதியில் குடுமிக் குரம்பை
கவிசினை நீழல் பொறியின் வேங்கை
மாத்தாள் பெயர்த்த அஞ்சுவர் கடவுள் எழுத்தில்
நரைக்கண் இலங்க காழ்த்த கீற்றின்
பாழ்த்த வெளியில் புல்தலை நுடங்கக்
கண்டு வெதும்பும் இல்லாள் எறியின் மூச்சில்
இல்லவன் நெஞ்சும் நோதலில் வேகும்.
பாம்பின் திரியன்ன ஆலத்து நெடுவீழ்
கடுவளி அசைவில் சூர் உரு காட்டி
ஆறு தடுக்கும் அடர்சுரம் போழ்ந்தும்
அவன் அவள் பூண் அகம் நோக்கும் வெரீஇய
நீளிடை அந்தி எழுதகை குருதி வழிய
கதழ்பரி மாவின் கலித்த வெளியில்
அவள் விழி வரிய வான் நோக்கி ஏகுவன்.
____________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக