திங்கள், 3 ஆகஸ்ட், 2020

உலகத்தமிழர்களே ஒன்று சேருங்கள்.

உலகத்தமிழர்களே ஒன்று சேருங்கள்.
==============================================ருத்ரா

உலகத்தமிழர்களே ஒன்று சேருங்கள்.
நீங்கள் இழப்பது
உங்கள் உயிரான தமிழை
நசுக்கிக்கொண்டிருக்கும்
பல நூற்றாண்டுப் பாறாங்கல்லைத்தான்.

பக்தி இலக்கியம் என்று
பக்கத்தில் வந்து
அந்த புரியாத இரைச்சல்களை
நம் தமிழுக்குள் சொருகி
மண்டிச்செழித்த வடமொழியின்
முள்ளின்  கள்ளிக்காடுகளையும் தான்.

நம் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்
பாழ்பட்டுப் போக 
நம் செவிகளில் எல்லாம்
கொட்டி முழக்கிய அந்த‌
புராணப்புளுகு மூட்டைகளையும் தான்.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தின்
பழைமைக்கும் பழைமையதாய்
சிறந்தோங்கிய நம் தமிழை
நேற்று தோன்றிய மொழியென்று
பொய்மைகள் பரப்பும் சூதுகளைத்தான்.

நம்மீது அழுந்திக்கிடக்கும் 
ஆரியமாயைப் பேய்தன்னை
அடித்து விரட்டி நம் தமிழின்
குன்றா ஒளிச்சுடர் வீசிடத்தான்.

வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!!

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍========================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக