சனி, 15 ஆகஸ்ட், 2020

சுக்கா? மிளகா?

சுக்கா? மிளகா?

=========================================ருத்ரா


சுக்கா?மிளகா? சுதந்திரம்

என்று காரசாரமாய் கேட்டானே

பாவேந்தன்

இன்னும் அது நமக்கு

உறைக்கவே இல்லையே.

சுந்திரம் எனும் கத்திமுனையில்

நின்று கொண்டு

காவடிகள் ஆடுகின்றோம்.

மூன்றாவது மொழி படிக்கும்

சுதந்திரம் நமக்கு இருக்கிறது.

ஆனால் அது நம் முதல் மொழியை

வரலாற்றுக் குப்பையில்

கொட்டத்தயாராக‌

வாய்பிளந்து நிற்கிறது.

தேன் தடவிய சொற்களுடன்

மிரட்டல் தொனியையும் கொஞ்சம்

கலந்து பிசைந்து ஊட்டி

வரும் தேர்தலில் 

தமிழ் நாட்டின் ஆணிவேரை

அசைத்துப்பார்க்க நினக்கிறது

மத்தியை ஆளும் கட்சி.

ராமனையும் கிருஷ்ணனையும்

நம் தோளில் ஏற்றி

அவர்களுக்கு 

"பல்லக்கு" தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தஞ்சாவூர் பொம்மை போல‌

எப்படி வைத்தாலும் 

நிமிர்ந்து கொள்ளும் ஒரு

ரகசிய கம்பியூட்டர் அல்காரிதம் கூட‌

நாளை "பட்டன்"களில் இருக்கலாம்.

அதனால் தான் 

கையில் கொத்து கொத்தாக‌

மசோசாதாக்களை வைத்துக்கொண்டு

தமிழ் மொழியையும் 

தமிழ் இனத்தையும்

கொத்து பரோட்டா போட‌

தருணம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகள் ஒரு சூன்யத்துக்குள்

பலமின்றிக் கிடப்பதால்

ஒரு வரலாற்றுப்பேரிடர் இந்தியாவை

விழுங்கக்காத்திருக்கிறது.

மக்கள் இதைப்பற்றி சிந்திக்கும்

சுதந்திரம் இல்லாத ஒரு சுதந்திரத்தில்

"லேசர்"கலை நிகழ்ச்சிகளில்

தூசுக்களாகிபோனார்கள்.

என்று தணியும் இந்த‌

"சுதந்திர தாகம்?"


==============================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக