விடியலின் வெளிச்சம்!
================================சொற்கீரன்
.
மக்கள் ஜனநாயகம் எனும் கனவு
ஒரு நிழல் போல்
மக்கள் மீது படர்கிறது.
அது
நமது நிழல் தான் என்று
புரிந்து கொள்ளாத மக்களே
இங்கு அதிகம்.
ஒரு சோசியல் சோம்னாம்புலிசம் எனும்
தூக்கத்தில் இயங்குகின்ற
ஒரு சமூகமே இங்கு
ஓட்டுப்பெட்டியை நிறைத்துவிட்டு
மறுபடியும் தூங்கப்போய்விடுகிறது.
அதனால் தான்
உண்மையான மக்களின்
ஜனநாயக் நிழல்
அவர்கள் காலடியிலேயே
நசுங்கிக்கிடக்கின்றன,
அவர்களின் கனவுக்குள் கனவுகளாக
உலவும் பொய்மைக்கனவுகளே
சாதி மத
மத்தாப்பு வெளிச்சங்களைக்காட்டி
ஏய்க்கின்றன.
இந்த சமுதாய பிரபஞ்சத்தின்
டார்க் எனர்ஜியும் டார்க் மேட்டரும்
மேலே சொன்ன கனவு உருவங்களாய்
புதைந்து கிடக்கின்றன.
இந்த சமுதாயம் இதன் மேல் தான்
மிதந்து கொண்டிருக்கிறது.
பொய்மைப் போதையின்
இந்த தொப்புள்கொடி என்றைக்கு
அறுபடுமோ
அப்போது தான் நமக்கு
விடியலின் வெளிச்சம்!
==========================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக