பிரம்மம் இல்லாத பிரம்மசூத்திரம்.
==============================================ருத்ரா
பிரம்மம் என்றால் சோறு என்று வைத்துக்கொள்வோம்.அது சட்டியில் இருப்பதாக மூடி வைக்கப்பட்டிருக்கிறது.அதில் சோறு இருக்கிறதா இல்லையா என்று பார்ப்பதே பிரம்மசூத்திரம்.சோறு என்று குறிப்பிட்டிருப்பதற்கு காரணம் இந்த உலகில் எந்த உயிருக்கும் உடனே முதலில் வேண்டுவது உணவு தானே. அதன் பசியாறியபின் தானே அது சுற்றுப்புறங்களை உற்றுப்பார்க்கிறது.இதில் சோற்றின் மெய்ப்பொருளைப்பற்றி அதற்கு கவலையில்லை.அந்த மெய்ப்பொருளை பிரம்மம் என்று வைத்துக்கொண்டால் அதைப்பற்றி தேடும் அறிவு தான் இங்கே "பிரம்மம்" இங்கே அனுமானம் கொள்ளப்ப்படுகிறது சோற்றின் மீது என்ன பசி இருக்கிறதொ அதே பசி தான் இங்கு இருக்கிறது.ஆனால் இதற்குப்பெயர் "அறிவின் அதாவது அறிந்துகொள்வதன்"பசி என்கின்ற "ஞானத்தேடல்" என்று படோடபமாக கூறிக்கொள்ளலாம்.அந்த மூடிக்கிடக்கும் சட்டியில் என்ன இருக்கிறது என்பதை பற்றிக்கற்பனை செய்து அதோடு அதுவரை தான் அறிந்தவற்றையும் சேர்த்து கலக்கியடிக்கும் வேலையைத்தான் "வாதராயணர் எனும் வியாஸர்" செய்திருக்கிறார். ஆனால் தான் எழுதிய அந்த சொற்கள் எல்லாம் மேலே சொன்ன கலக்கியடித்தல் எனும் "காக்டெயிலை" சுருக்கமாக அதாவது சூத்திரங்களாக அமைத்து அவர் எழுதியிருப்பது தான் இங்கே மிகவும் பாராட்டத்தக்கது.அவர் இந்த நூலில்
555 சூத்திரங்களை எழுதியிருக்கிறார்.இதை ஒரு நூல் கண்டு போல எடுத்துக்கொண்டால் அதன் அடி முடி தெரியாது தான்.அவர் ஒரு வரிசைப்படி எழுதியிருந்த போதும் நாம் அந்த நூல் கண்டின் ஏதாவது ஒரு இழையைப்பிரித்தால் அவர் எண்ண ஓட்டத்தின் "குறுக்குவெட்டுத்தோற்றத்தை"அறியலாம்.
அதை வைத்தே (1.2,22) என்னும் சூத்திரத்தை இங்கு பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.
"விசேஷண் பேத வ்யபதேசாப்யாம் ச ந இதரௌ"
இதைச் சேர்த்து எழுதினால்
விசேஷண்பேதவ்யபதேசாப்யாம் ச நேதரௌ" ஆகும்.
இதன் பொருள்
நியாய வைஸேஷிகாவில் முக்கியமாகக்கருதப்படும் பிராதானா எனும் முதற்பொருளும் அதன் உட்கூறுகளாக தனிப்பட்ட பொருளும்இவர் சொல்லும் பரமாத்மா ஜீவாத்மா அல்ல என்கிறார். அவை வேறு விதமானவை என சொல்கிறார். ஒரு உட்கூறு என்பது முதற்பொருளின் தன்மையது தான். அது போல முதற் பொருளும உட்க்கூறின் தமையது தான். இதைத்தான் நம் அத்வைதமும் ஒன்றிழைக்கிறது. அப்படி அல்ல என்று மறுக்கிறார் வேதராயணர். ஆனால் இதற்கு அவர் அடுத்த சூத்திரத்தில் சொல்லியிருப்பதைப்பார்த்தால் அது இன்னும் வேடிக்கை
"ரூபோஉபன்யாஸ்ச "
(ரூப உபன்யாஸ்ச)
இந்த வித்தியாசங்கள் வடிவம் பற்றியவை என்கிறார்.வாதராயணர். நியாவைசேசிகள் இது அறிந்தது தானே.உட்கூறு மிக்கச்சிறு வடிவம் உடையது.முதற்பொருள் ஒரு பிரமாண்ட வடிவுடையது யாவரும் உணர்ந்தது தான் இதில் என்ன வாதம் தேவை என்கிறார்கள் நியாய வைசேசிகள்.ஆனால் அவனிடமிருந்து (ப்ரம்மன்) தான் உயிர்விசை உருவாகிறது" எனும் முண்டோபனிஷத வரிகளை (2.1.3) முன் வைக்கின்றனர்.சரி அப்படியென்றால் பிரம்மம் எனும் அந்த மூல வடிவம் யாராலும் பார்க்கப்படவில்லை அல்லது பார்க்கப்பட முடியாது எனும் போது அதற்கு எப்படி ஒரு வடிவத்தை நீங்கள் காட்டுவீர்கள்? என எதிர் வாதம் புரிகின்றனர் நியாவைசேசிகள்.அதற்கு எப்படியாவது ஒரு முற்றுப்புள்ளி வைக்க முயன்ற வாதராயணர் ஆதரவாளர்கள் இதற்கும் அதே முண்டகோபனிஷத வரிகளைக்காட்டி (2.1.10)"எல்லாமே "புருஷா தான்"என்கின்றனர்.இந்த புருஷாவைத்தான் "புருஷ சூக்தம் ஆக்கி அதில் நான்கு வர்ண சனாதனத்தை பின்னாளில் வந்தவர்கள் தங்கள் ஆதிக்கத்துக்கு பயன்படுத்திக்கொள்கின்றனர். அதை விடுங்கள். அது வேறு விஷயம்.
இந்த நிலையில் வைஸ்வாநரன் என்று இன்னொரு சொல்லை இதனுள் சொருகுகிறார்கள் எப்படியாவது "பிரம்மதை"பார்க்கவே முடியாதனிலையில் அல்லது அறிவின் புலத்துக்குள் கொண்டுவரவே முடியாத போது"அதற்கு உருவம் சமைக்கிறார்கள்.அதுவே "வைஸ்வாநரன்"என்பது.அதன் விவரம் என்ன? பார்போம் அடுத்த சூத்திரத்தில். மயிர் பிளக்கும் வாதங்களைக்கொண்டு தான்இங்கே பிரம்மம் காட்டப்படுகிறது.இது கானல் நீரில் படகு விடுவது ஆகும்.
"
இந்த சூத்திரத்துக்கு சங்கராசாரியார் அவர்கள் உரை எழுதியிருக்கிறார். அவர் எல்லா உபநிஷதங்களையும் கரைத்துக்குடித்து அதை இதில் நிரவ விட்டிருக்கிறார். இந்த சூத்திரத்தில் வாதராயணர் என்ன சொல்ல வருகிறார் என்றால் இவர் காலத்தே சிறந்த நூலாக கருதப்பட்டிருந்த நியாய வைஸேஷிகா எனும் நூலின் உட்பொருள்களை தவறு என்கிறார். அதாவது பிரம்மம் என்பதைப்பற்றிச் சொல்ல வந்த அவர் நியாயவைஸேஷிகாவின் அடிப்படையை தகர்ப்பத்தையே நம் நோக்கமாக இந்த பிரம்மசூத்திரத்தில் நிறுவ முயன்றிருக்கிறார். எனவே பிரம்மசூத்திரம் பிரம்மம் பற்றிய நிலையை அப்படியே வைத்து விட்டு அந்த வாதச் சண்டைகளுக்கு மட்டுமே எழுதப்பட்டதாக தோன்றுகிறது.
=========================================================
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக