வியாழன், 27 ஆகஸ்ட், 2020

பத்துப்பாட்டு

 பத்துப்பாட்டு

______________________ருத்ரா


ராகங்களோடு வந்தது

கண்ணீர் 


நாதஸ்வரக்குழாய்

_________________________1


கயிறு வடம் ஆகிப்போனதன்

கொண்டாட்டம்.


கெட்டி மேளம்

___________________________2


இவன் ரத்தம் மட்டும்

மண்ணில் ஊறுகிறது.


விவசாயி.

‍‍‍‍‍‍‍_____________________________3


சரிந்த குடலே அங்கு

வெற்றி மாலை.


ஜல்லிக்கட்டு

_____________________________4


காதலுக்கும் இனி

அர்ரியர்ஸ் தான்.


ஆன்லைன் கல்லூரி.

_____________________________5


அரிசியோடு கவசம்.

இனி தேனாறு பாலாறு தான்.


ரேஷன் கார்டு.

_____________________________6


பாடம் நடத்தும் பேராசியர்

திரும்பிய போது தான் பார்த்தோம்

தேசிய பொருளாதாரத்தை.


கிழிந்த கோட்டு

______________________________7


சிரார்த்த சடங்குகள் முடிந்தவுடன்

அப்பா கேட்டது "கேட்டது."


பெரியார் படம் எங்கே?


______________________________8


பக்கடாவும் டீயும் தான்

இனி பல்கலைக்கழகங்கள்.


புதிய கல்விக்கொள்கை.


________________________________9


புற்றீசல் என்றால் என்ன என்று

இப்போது தான் புரிந்து கொண்டோம்


மசோதாக்கள்


‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍___________________________________10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக