திசைகள் கழன்றோம்!
======================================================ருத்ரா
என்ன செய்வது என்றே தெரியவில்லை.
சிகரெட் பிடிக்கிறேன்.
கைபேசிக்குள் நுழைந்து கொள்கிறேன்.
டி.வி யில்
புது சினிமாவின்
குத்தாட்டப்பாடல்காட்சிகளில்
மனம் லயிக்கிறேன்.
புத்தகம் என்றால்
பட்டுக்கோட்டை பிரபாகர்களின்
எழுத்துத்திகில்களுக்குள்
மூழ்குவேன்.
இல்லாவிட்டால்
புத்தகவிழாக்களுக்கு சென்று
வாழ்க்கை உங்களுக்கு செட் ஆகவில்லையா
என்று கேட்பவைகளையும்
ஒரு வாரத்தில் பில்லியனர் ஆவது எப்படி
என்பவைகளையும்
பிரமிடு நம்பிக்கையில்
பிரமிடுகளை கட்டுங்கள் என்பவைகளையும்
சனிப்பெயர்ச்சியில் இனிக்கும் கனிப்பெயர்ச்சிகள்
என்பவைகளையும் வாங்கிக்குவிப்பேன்.
ஓஷோவையும் யோகாவையும்
காக்டெயில் செய்து
வண்டி வண்டியாய் புத்தகங்கள்..
அதில் எனக்கு
ஒரு ஜாதகக்கட்டம் இல்லாமலா இருக்கும்?
இல்லாவிட்டால்
ஃபிகர்களைப்பற்றி அலசி ஆராய்ந்து
நண்பர்களுடன் எங்காவது ஒரு பிளாஸாவில்
உட்கார்ந்து திரிந்து
பீட்ஸா சாப்பிட்டு
பிய்த்து தின்று கொண்டிருப்பது.
பீர் குடிப்பது..குவாட்டர் கட்டிங் போடுவது
இதுவும் கூட
ஃபிகர்களுக்கு ஹீரோயிஸம் தானாம்.
அதிலும்
வர்ணமயமாய் சலம்பல்களுடன்
பொழுது கழியும்.
இல்லாவிட்டால்
எனக்கு பிடித்த நடிகரின்
படங்களையெல்லாம்
வரிசைப்படுத்தி
மீண்டும் அதே டிவியில்
ஊற்றிக்கழுவிக்கொண்டிருப்பார்கள்
அல்லது
லேசர் ஒளிப்பாய்ச்சல்களில்
குமட்ட குமட்ட வாந்தியெடுத்துக்கொண்டிருப்பார்கள்
அதில் முங்கிக் குளிப்பேன்.
அது..சரி..
இளைஞர் யுகம் என்று
ஒன்று இருக்கிறதே...
ஆமாம்.
ஞாபகம் வந்து விட்டது.
ஒரு ட்விட்டர் போடவேண்டும்
நில்
என்ன போடப்போகிறாய்?
வேலையத்த பயலுகள்
சமுதாயம்
தமிழ்
அது இது என்று
ஏதாவது "சிந்தனைகளை நிமிண்டுகிறேன்"
என்று
புதிய கோணங்களை முன் வைப்பார்கள்.
அதையெல்லாம்
அதிரடியாக கலாய்த்து
இந்த சமுதாயத்தையே
மொட்டையாக மழுங்கடிக்கும்
வாசகங்களை அள்ளித்தெளிப்பேன்.
இல்லாவிட்டால்..
இல்லாவிட்டால்..
போய் குப்புற அடித்துப்படுத்துக்கொள்வேன்.
போயேன்
வேலய பாத்துக்கிட்டு...
================================================================
======================================================ருத்ரா
என்ன செய்வது என்றே தெரியவில்லை.
சிகரெட் பிடிக்கிறேன்.
கைபேசிக்குள் நுழைந்து கொள்கிறேன்.
டி.வி யில்
புது சினிமாவின்
குத்தாட்டப்பாடல்காட்சிகளில்
மனம் லயிக்கிறேன்.
புத்தகம் என்றால்
பட்டுக்கோட்டை பிரபாகர்களின்
எழுத்துத்திகில்களுக்குள்
மூழ்குவேன்.
இல்லாவிட்டால்
புத்தகவிழாக்களுக்கு சென்று
வாழ்க்கை உங்களுக்கு செட் ஆகவில்லையா
என்று கேட்பவைகளையும்
ஒரு வாரத்தில் பில்லியனர் ஆவது எப்படி
என்பவைகளையும்
பிரமிடு நம்பிக்கையில்
பிரமிடுகளை கட்டுங்கள் என்பவைகளையும்
சனிப்பெயர்ச்சியில் இனிக்கும் கனிப்பெயர்ச்சிகள்
என்பவைகளையும் வாங்கிக்குவிப்பேன்.
ஓஷோவையும் யோகாவையும்
காக்டெயில் செய்து
வண்டி வண்டியாய் புத்தகங்கள்..
அதில் எனக்கு
ஒரு ஜாதகக்கட்டம் இல்லாமலா இருக்கும்?
இல்லாவிட்டால்
ஃபிகர்களைப்பற்றி அலசி ஆராய்ந்து
நண்பர்களுடன் எங்காவது ஒரு பிளாஸாவில்
உட்கார்ந்து திரிந்து
பீட்ஸா சாப்பிட்டு
பிய்த்து தின்று கொண்டிருப்பது.
பீர் குடிப்பது..குவாட்டர் கட்டிங் போடுவது
இதுவும் கூட
ஃபிகர்களுக்கு ஹீரோயிஸம் தானாம்.
அதிலும்
வர்ணமயமாய் சலம்பல்களுடன்
பொழுது கழியும்.
இல்லாவிட்டால்
எனக்கு பிடித்த நடிகரின்
படங்களையெல்லாம்
வரிசைப்படுத்தி
மீண்டும் அதே டிவியில்
ஊற்றிக்கழுவிக்கொண்டிருப்பார்கள்
அல்லது
லேசர் ஒளிப்பாய்ச்சல்களில்
குமட்ட குமட்ட வாந்தியெடுத்துக்கொண்டிருப்பார்கள்
அதில் முங்கிக் குளிப்பேன்.
அது..சரி..
இளைஞர் யுகம் என்று
ஒன்று இருக்கிறதே...
ஆமாம்.
ஞாபகம் வந்து விட்டது.
ஒரு ட்விட்டர் போடவேண்டும்
நில்
என்ன போடப்போகிறாய்?
வேலையத்த பயலுகள்
சமுதாயம்
தமிழ்
அது இது என்று
ஏதாவது "சிந்தனைகளை நிமிண்டுகிறேன்"
என்று
புதிய கோணங்களை முன் வைப்பார்கள்.
அதையெல்லாம்
அதிரடியாக கலாய்த்து
இந்த சமுதாயத்தையே
மொட்டையாக மழுங்கடிக்கும்
வாசகங்களை அள்ளித்தெளிப்பேன்.
இல்லாவிட்டால்..
இல்லாவிட்டால்..
போய் குப்புற அடித்துப்படுத்துக்கொள்வேன்.
போயேன்
வேலய பாத்துக்கிட்டு...
================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக