நுட்பம்
================================ருத்ரா
வாழ்க்கை என்றால் என்ன?
கடவுள் என்றால் என்ன?
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார்
என்றால் என்ன?
ந்யாய வைசேஷிகம் என்றால் என்ன?
பூர்வ உத்தர மீமாம்சங்கள்
என்றால் என்ன?
அட நிறுத்தைய்யா?
தண்ணீர் என்றால் என்ன?
கண்ணீர் என்றால் என்ன?
காவிரி என்றால் என்ன?
இது பற்றியெல்லாம்
நீதிபதிகள் கதாகாலட்சேபம்
செய்யப்போகிறார்கள்.
கவனமாய் கேளுங்கள்.
அவர்களின் கனத்த
சட்டப்புத்தகங்களுக்குள்ளிருந்து
கரையான்களும்
அந்துப்பூச்சிகளும்
மீசைகள் துடிக்கின்ற
கரப்பான்களும்
தைரியமாக மேஜைக்கு வந்து
சப்பளாக்கட்டைகள்
தட்டுகின்றன.
நுட்பம் புரிந்து கொண்டீர்களா?
எதற்கும்
ராமஜெயம் கோடி தடவை
இம்போசிஷன் எழுதிய
நோட்டுப்புத்தகம்
கையில் வைத்திருங்கள்.
இதுவே இனி இந்த மர்மதேசத்து
அரசியல் சாசனம்.
=============================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக