செவ்வாய், 1 மே, 2018

மே ஒன்றாம் தேதி

மே ஒன்றாம் தேதி
===================================ருத்ரா

பல இமயங்களை
தன் தோளில்
அழுத்த அழுத்த‌
பளு சுமந்த தொழிலாளி
கொஞ்சம்
இமை நிமிர்த்திப்பார்த்த‌
கனல் பொறிந்த நாள் அல்லவா
இப்பெரு நாள்!
எட்டு மணி நேர வேலை
எட்டாக்கனியாய் இருந்த அன்று
அதற்கு ஒரு
உரிமைப்போர் துவக்கிய‌
நாள் அல்லவா இந்நாள்!
துப்பாக்கிக்குண்டுகளை
மார்பில் ஏந்தி
துணிச்சல் காட்டிய‌
அந்த உப்புக்கரித்த வர்க்கத்தை
இன்னும்
போக்கு காட்டிக்கொண்டல்லவா
இருக்கிறது
இந்த "உப்பரிகை வர்க்கம்."

சமுதாய அடுக்குகளில்
மேலடுக்கு
கீழடுக்கு
இடைவெளிகளில் இன்னும்
ரத்தம் கசிந்துகொண்டுதானே
இருக்கிறது.
இருக்கட்டும்.
எல்லாம் நமக்கு
ஓவியங்களில்
காவியங்களில்
இன்னும்
எழுத்து ஃ பாசில்களில்
எதையோ சொல்லி
நச்சரித்துக்கொண்டு தானே இருக்கின்றன.
ஒரு வகையில்
எச்சரித்துக்கொண்டு தான் இருக்கின்றன.
கிடக்கட்டும்.
அந்த  வேர்வை
கடற்கரையில்..சிலையில்
விறைத்து ..உறைந்து கிடக்கிறது.
மே ஒன்றாம் தேதி ...
காலண்டர் தாள்களில்
வரலாற்று நமைச்சல்கள்!

================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக