புதன், 2 மே, 2018

கிழங்கொடு ஆர்த்த...

கிழங்கொடு ஆர்த்த...
===========================================ருத்ரா இ பரமசிவன்.

கல்லிய கில்லி கிழங்கொடு ஆர்த்த‌
புல்லிய தொல் இனம் மிடறு ஒலி மூச
பொறிமா அருந்துநீர் மணிநிழல் சுனைய‌
தீவிழி பளிக்கென கூர் ஒளி உமிழும்
நிழலும் அருந்த மெல் நா நுழைக்கும்
உழுவை அதுவென ஓர்த்தபோழ்து
நிலந்தொடா புன்கால் கலிமா வெரூஉய்
புதல் மீமிசையின் கடுவிசை ஏகும்
அடர் கான் நாட!என் படரொலி கேட்டி.
பைம்பசும் பொன்வளை புரிபிறள் பெய்து
பீலியும் வருடி நோகுதல் செய்யும்
பூ மயிர் மெல் இறை புண்படுமாறு
அணிநலம் தேய அங்கயல் திரைய‌
பிழி பிழி பிழிந்து தேம்பிக் கரைய‌
ஒண்ணுதல் ஒழுகுபு வேர்த்து விதிர்த்து
ஒல்லாப்பாவை ஒடுங்கல் அறிதி.
மறை மொழி ஓம்பும் செந்தீ நாவும்
பசப்பிய சொல்லுள் பதடி குவிக்கும்
வெண்மை இறையர் உண்மை இறந்த‌
கொட்பு அன்று என் நிறைமதிக்காதல்.
உள் தொட்டு உணர் ஆழிப் பரவை
அகல நீள்க்கும் விசும்பும் மூழ்க்கும்
காண்குவை மல்ல!நின் நெஞ்சுள் பொதிந்து.


=====================================================
12.11.2014 ல் நான் எழுதிய சங்க நடைச் செய்யுட் கவிதை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக