வியாழன், 10 மே, 2018

"செம வெய்ட்டு.."

"செம வெய்ட்டு.."
======================================ருத்ரா

காலா பாடல்
செம ஹிட்டுக்கு
அரங்கேற்றம் ஆகிவிட்டது.
அது என்ன "செம"?
அதாண்ணே.."செம்மை" என்பதன்
குறுக்கம்.
அப்புறம் "வெய்ட்டு"?
அத விடுங்கண்ணே!
அதில் ஒரு கொந்தளிப்பு இருக்கிறது.
காதல் என்றாலும்
சமுதாயம் என்றாலும்
இந்த பரபரப்பு தாண்ணே
இனிப்பு நெருப்பு எல்லாம்.
சூப்பர் ஸ்டாரின் மாப்ளை
"கொலவெரி"யில் தான்
கொஞ்சும் தமிழை
கைமா போட்டார்.
இருபத்திஒன்றாம் நூற்றாண்டு
இளைஞனுக்கு
யாழ் நரம்புகள்
காதுகளை கிழிக்கவேண்டும்.
ரத்தம் வடிந்தாலும்
இனிமை இனிமை இனிமை தானே
அவர்களுக்கு.
ரசிகர்களின் கடல்வெள்ளம்
ஆர்ப்பரித்ததில்
எல்லாம் அடி பட்டு போய்விடும்!
ஆங்கில "ராப்"பும்
மக்கள் இசை என்ற பெயரில்
கானாக்களுமே
காதுகளை நிறைக்கின்றன.
மெல்லிசை இன்னிசை எல்லாம்
புதிய பரிமாணங்களை
போர்த்துக்கொண்டு
ஒலியைத் "தூள் கிளப்புகின்றன"
பக்தி பாடல் கேசட்டுகளைப்போல‌
இவையும் இந்த
ரசிகர் கடல்வெள்ளத்துக்குள்
விற்பனையை தூள் கிளப்பும்.
உரிமை முழக்க‌
போராட்டப்பாடல்கள் தான்.
அவற்றிற்கு என்றுமே
நம் வணக்கங்கள் உண்டு.
ஏறத்தாழ‌
அரைநூற்றாண்டுக்கு முன்
கண்ணதாசன் வரிகளில்
"துடிக்கும் ரத்தம் பேசட்டும்!"
என்று
"துலாபாரம்"
நம் நெஞ்சையெல்லாம்
கிளர்ந்ததே
அந்த வரிகளின் இசையில்
இவற்றை
"சைபர்"பதியம்
போட்டுக்கொள்ள வேண்டியது தான்.

=============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக