புதன், 9 மே, 2018

காலா அரசியல் படம் அல்ல.ஆனால் அரசியல் இருக்கு.

காலா அரசியல் படம் அல்ல.ஆனால் அரசியல் இருக்கு.
===================================================
ருத்ரா

இது நிச்சயம் வடிவேலு காமெடி அல்ல.
இது மௌனமாய் ஒரு வெடி வைக்கும் சமாச்சாரம்.
தன்னைச்சார்ந்த சமூகத்தை சிந்திக்கும்
ஒருவர் இயக்கும் படம்.
அது சிறப்பிலும் சிறப்பு.
இந்த நாற்பத்திமூன்று ஆண்டுகளில்
ஸ்கிரிப்ட் எனும் திரைக்கதை
எனக்கு முன்
ஒரு திரைபோட்டு உட்கார்ந்து கொண்டு
இப்படி
இந்த சமுதாயத்தை
அதன் பிரக்ஞையின்
"ஸிப்பை"கிழித்து திறந்து காட்டியதில்லை.
இது திரைக்கதையின் பிரசவம் அல்ல.
மொத்த சமுதாயம்
நிறத்தாலும் மதத்தாலும்
பிரிந்து சல்லடையாய் இருப்பதை
அதன் ஒவ்வொரு கண் வழியேயும்
ரத்தம் ஒழுகுவதை
வலிமிகுந்த அந்த‌
நிசப்த யுத்தத்தை
மௌன இரைச்சல்களை
அட்லான்டிக் சீறல்களாய்
காட்ட முனைந்ததே
ரஞ்சித் எனும்
இன்னொரு இமயம் எனக்கு.
அதிலும் என்னை பயணிக்க வைத்துவிட்டார்.
ஆம்.
எனக்கு பாபா
ஒற்றைக்குழலோ இரட்டைக்குழலோ
வைத்த துப்பாக்கி அல்ல.
பல முனை சுழலும்
எந்திரத்துப்பாக்கி.
மனிதன் கருப்பு அல்ல.
பார்ப்பவர்களே
தன் ஒவ்வொரு ரத்த சிவப்பு அணுவைக்கூட‌
தார் பூசிக்கொண்டு
தர்க்க குதர்க்கங்களில்
பொந்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
மானிடம் என்ற
நியாயமும் உண்மையும்
சாக்கடைக்கருப்பில் அமிழ்த்தப்பட‌
இந்த காலா கருப்பன்
ஒரு போதும் அனுமதிக்க மாட்டான்.
அந்த முரட்டுப்பாறையை
பொடி பொடியாக்க‌
பாபாவையும் நான் ஆயுதம் ஆக்க‌
தயங்க மாட்டேன்.
இப்படித்தான்
சீறுகிறார் குமுறுகிறார்
ரஜனி அவர்கள்
அந்த திரையிசை வெளியீட்டு விழாவில்.
கடல்போல் எதிரே ரசிகர்கள்!
இத்தனையும் லட்சக்கணக்கான
வெறும் விசில்கள் தானா?
விடியல் காணத்துடிக்கும்
செங்கடல் பிளந்து கொண்டு
விடை தேடும் ஆவேசம் தான்
இது என்றால்
இந்நேரம் மோடியும் அமித்ஷாவும்
கர்நாடகாவைகூட மறந்து
இங்கு வந்து உட்கார்ந்து
"கௌடில்யரின் கடுஞ்சூத்ரத்தை "
சோழி போட்டு
குலுக்கிக்கொண்டிருப்பார்களே!
ஆம்
"இலங்கையைத்தாண்டுரா ராமா!
தண்ணீர் கொண்டுவா ராமா!
காவிரித்தண்ணீர் எல்லாம்
மறந்துருடா ராமா ராமா!
என்று ஒரு கயிற்றை
ஏற்கனவே
அவர் இடுப்பில் கட்டி யாகி விட்டது.
நாம் இழுக்க இழுக்க
அவர் இப்படித்தான் பேசுவார்
என்ற ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்
பதியம் போடப்பட்டு விட்டது.
இந்த பாக்ஸ் ஆஃ பீஸ் ரொப்பும்
சமாச்சாரம் பற்றி
அலட்டிக்கொள்ள தேவையில்லை.
சினிமாக் கட்டத்தில்
என்ன வேண்டுமானாலும்
அவர் உமிழட்டும்.
இது தான் "அரசியல் இருக்கு"
என்று அர்த்தம்.
சினிமா கட்டத்தை விட்டு வெளியே
அந்த அரசியல் இருக்காது.
இது "அரசியல் இல்லை"
என்று அர்த்தம்.
எங்களது "அர்த்த சாஸ்திரம் "மட்டுமே
அவரிடம் இருக்கும்.
போகட்டும் விட்டுவிடலாம்.
அவர் கருப்புசட்டையை
துவைக்கப்போட்டால்
கசக்கிப்பிழிந்து வெளியே வருவது
காவி வர்ணமே."

=================================================













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக