நவீனத்துவம் கவிதையை
கழுவேற்றும்
கொடுமையைப்பாருங்கள்.
காதலி
ஐ லவ் யூ
சொல்லிவிட்டாளாம்.
காதலன்
வானத்துக்கும் பூமிக்கும்
குதிக்கிறானாம்
எப்படியெல்லாம்?
இப்படியெல்லாம் தான்
யாரையாவது நாலு சாத்து சாத்தி
அப்புறம்
அய்யா தெரியாதய்யா
மன்னிச்சிக்குங்க என்று சொல்லி
புன்சிரிப்போடு
அவருக்கு பிரியாணி வாங்கிக்
கொடுக்கணும் என்று.
அது யாராய் இருக்கும்.
ஏன் காதலியின் அப்பாவாகக்கூட
அது இருக்கலாம்.
தக் லைஃப் என்று
ஒரு வக்கிரத்தின் மென்படலத்தை
அப்படியே பூசி
அதில் ஒரு ரோஜாப்பூ
பார்க்கவேண்டுமாம்.
நாம் திரைப்படங்களில்
பார்த்த சேதுக்களின்
வாழ்க்கையிலும்
இப்படி ஓடிய சோக இழைகளைப்
பார்த்திருக்கிறோம்.
இது நவீனத்துவத்து இலக்கியத்து
ராட்சசமா?
இல்லை சர்ரீயலிசச் சவ்வுப் படலமா?
________________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக