ஊசியிலைக்காடுகள்............ருத்ரா

சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட‌ இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்

  • கண்ணோட்டம்
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • சொல்கிறார்கள்

ஞாயிறு, 29 மார்ச், 2026

திரு வண்ணதாசன் அவர்களின் கவிதை 30/03/2026 முகநூல்.

 

திரு வண்ணதாசன் அவர்களின் கவிதை 

30/03/2026 முகநூல்



"என் ஆமையைக்காணோம்.."


எவ்வளவு சுகமான வாகனம் 

உங்கள் கவிதை.

அது என்ன‌

பேனா மூடியைத் திறந்தாலே

"கூர்மாவதாரம்" தான்?

நல்லவேளை

திருமாலின் 

நாபிக்கொடி நாற்றங்களெல்லாம் இல்லை.

இருப்பினும்

அந்த பிஞ்சுவின் 

உதடு பிதுக்கலில்

ஏழு சமுத்திரங்களின் ஏக்கம்

பீச்சியடிக்கிறது.

நான் நினைக்கிறேன்

உங்கள் கனவு இடுக்குகளில்

ஃப்ராய்டுகள் 

அசை போட்டுக்கொண்டிருக்கலாம்.

கடவுள் 

தன் படைப்பின் அழகைக்கண்டு

சப்புக்கொட்டுவதற்கு தான்

இங்கே

கவிஞர்களை அனுப்பியிருக்கிறார்

போலும்!

______________________________________

சொற்கீரன்





இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 11:50 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

வெள்ளி, 27 மார்ச், 2026

என் மகளுக்கு இன்று பிறந்தநாள்.

 



என் மகளுக்கு இன்று பிறந்தநாள்.

______________________________________________


என் அருமை மகளே!

உன் இல்லம் நன்கு செழிப்புறக!

உன் குடும்பம் நன்கு

எல்லா நலங்களும் வளங்களும்

நிறைந்து சுடர்க!

மனிதர்கள்

மனம் இருப்பதாலேயே

மனிதர்கள் எனப்படுகிறார்கள்.

அது எப்போது

நிறைந்து இருக்கும்

எப்போது

இல்லாமல் இருக்கும்

என்பதுவே

மனிதன் என்பதன் அர்த்தத்தை

புலப்படுத்தும்.

நானும் நிறைந்த மனத்துடனேயே

உன்னை வாழ்த்துகிறேன்.

நீயும் நிறைந்த மனத்துடனேயே

உன் அன்புப்புன்முறுவலுடன்

எங்களை நோக்குகிறாய்

என்பதையும் நான் அறிகின்றேன்.

உனக்கு

என் அன்பு வாழ்த்துக்கள்.

ஆம்

உங்கள் யாவருக்கும்

எங்கள் 

அன்பு வாழ்த்துக்கள்.

___________________________________

அன்புடன்

வாழ்த்தும் உள்ளங்கள்.

---------------------------------------------------------

சொற்கீரன்.

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 11:02 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

பூமியின் கர்ப்பம்.

 

  லிங்குக்கு நன்றி!!

Scientists intrigued by “negative mass anomaly” under surface of Mars




மேலே காணும் லிங்க் மிகப் பயனுள்ள ஒரு கட்டுரை.

பூமியின் கர்ப்பம்.

--------------------------------------------------------------



ஆங்கிலத்தில் மாஸ் எனப்படுவது தமிழில் "பொருள் திணிவு " ஆகும். இதற்கு நேர் எதிரானது எது ? அது நெகட்டிவ் மாஸ் அனாமலி தான்.தமிழில் அதை பொருள் தன் உள் திணிவை வாந்தியெடுக்கிறது என்று சொல்லலாமா?நியூட்டனின் விதிப்படி.ஓவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான எதிர் விசை உண்டு.அதனால் பூமியிலிருந்து அதன் உள்ளே உள்ள எதிர் விசை காரணமாக அதாவது அதன் ஈர்ப்பு விசைக்கு சமமாக இன்னொரு விசை பூமியின் மையத்திலிருந்து வெளியே  பீ ய்ச்சி க்கொண்டிருக்கிறது.


இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 10:34 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

ஞானபீடமும் அஞ்ஞானக்காடுகளும்


ஞானபீடமும் அஞ்ஞானக்காடுகளும்
____________________________________________
முகநூலில் ஒரு நண்பர் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு ஞானபீடம் அளித்தது சரியல்ல என்று அவரும் ஒரு அஞ்ஞானக்காட்டில் திக்கு தெரியாத மனநிலையில் இருப்பது போன்று தான் எழுதியிருந்தார்.அது பற்றிய கருத்து களே இவை.
இவரும் ஒரு வகையில் புளிச்ச மாவுக்கார எழுத்தாளர் ஜெயமோகனை ஒட்டித்தான் செல்கிறார்.கவிதை எழுதுபவர்கள் எல்லாருமே தன் பேனாமுனையில் ஞான பீடங்களையோ நோபல் பரிசுகளையோ கட்டி உச்சியில் வைத்துக்கொண்டு அந்த மன நோயால் துன்புறுபுவர்கள் அல்ல. ஆனாலும் பெரும்பாலும் அதுவும் ஒரு பேய்நிழலாய் அவர்கள் தோள்களில் உட்கார்ந்து கொண்டிருக்கலாம் என்பதற்கும் அவரே ஒரு சான்று.இல்லை யென்றால் அடுத்த இலைக்கு பாயசம் கேட்பது போல் அந்த மற்றக்கவிஞர்களையும் தன் கட்சிக்கு இழுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.இந்த உலகப்புகழ் பெற்ற பரிசுகளையும் வேண்டாம் அதை உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள் என்று சீற்றம் கொண்ட எழுத்தாளர்களும் இருக்கிறார்களே! அவர்களுக்கு உங்களிடம் என்ன விருது வைத்திருக்கிறீர்கள். கவிஞர் வைரமுத்துவை ஜெயமோகன் போல் புளிச்ச ஏப்பத்துடன் அணுகாமல் அதையும் விட கொச்சையாக நீங்கள் அணுகியிருக்கிறீர்கள்.மனிதனுக்குள் இயற்கையாய் கொழுந்து விட்டு எரியும் பொறாமைத்தீ உங்களிடம் அதிகமாகவே எரிந்தது தான் நீங்கள் கங்கை அமரன் மற்றும் பல கவிஞர்களை உங்கள் தோள் மேல் தூக்கிக்கொண்டது.கவிஞன் என்று பேனா தூக்கியவன் எந்த "மண்டபத்திலே இருந்து பாட்டு எழுதிக்கொண்டிருப்பவனாக இருந்தாலும்" அவனுக்கும் ஒரு நோபல் பரிசை அவனுக்கு முண்டாசு கட்டலாம் தான்.ஆனாலும் இந்த பேய்த்தீயால் தன்னையே எரித்துக்கொண்டு சாம்பாலாக புலம்பும் உங்களைப்போன்றவர்கள் தன்னைப்பற்றி சுய விமர்சனமாக ஒரு கவிதை எழுதியும் அதை வாசித்துக்கொண்டிருக்கலாம்.நீங்கள் எழுதியதைப்பார்த்தால் வைரமுத்து அவர்கள் உங்களிடம் கருத்து கேட்டுக்கொண்டு தான் பேனாவையே தொடவேண்டும் என்பது போல் அல்லவா இருக்கிறாது.கவிஞர்களுக்கு அவர்களது எழுத்துக்கர்வமே அவர்களது வெண்கொற்றக்குடை என்பதில் எனக்கும்
எந்த முரண்பாடு இல்லை. "ரோஜா" திரைப்படத்தில் அவர் எழுதிய "சின்ன சின்ன ஆசை..."என்ற ஒரு கவிதைப்பாட்டு போதும்.நோபல் பரிசே கொடுக்கலாம். இருப்பினும் இப்படி நீங்கள் எழுதுவது ஒரு கவிதை இயலுக்கு முரண்பட்ட மனவியல் ஆகும்.உங்கள் எழுத்துகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍____________________________________________இ பரமசிவன் 

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 12:31 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

வியாழன், 26 மார்ச், 2026

MICROSOFT NEWS ..STORY BY MELISSA AIT LOUNIS dated Mar 14 .2026 /27.3.26

 



"செவ்வாய்க்  கோளில்" உயிர்ச்சான்றுகள்...

சுவையான கட்டுரை   by  

MELISSA AIT LOUNIS  (MSN)

E . PARAMASIVAN 

THANKS FOR THE LINKS

______________________________________

Scientists have released NASA rover photos showing possible insect and reptile life forms on Mars

Daily Galaxy

Scientists have released NASA rover photos showing possible insect and reptile life forms on Mars

Story by Melissa Ait Lounis
Mar 14 • 3 min read • Updated 1w ago
Key takeaways
InfoIcon
  • Insect-Like Creatures: Professor William Romoser identified features in
இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 6:26 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

புதன், 25 மார்ச், 2026

ஓலைத்துடிப்புகள் (28) பொழிப்புரை

 


ஓலைத்துடிப்புகள் ...(28)

________________________________________



பொதிகவுள் வீழ்ந்த வெண்ணரை

======================================ருத்ரா இ பரமசிவன்.

(ஒலைத்துடிப்புகள் ...28)




பொதிகவுள் வீழ்ந்த வெண்ணரை மூசி

அறைதவழ் ஓங்கு வெள்ளிய அருவி

படர்தந்தாங்கு சடைமறைத்த ஊழில்

எதிர்த் தடம் ஊன்றிய‌ நினைப்பில் ஊறித்

திளைத்த காலை மறவேன் மறையேன்

என்றவன் திரங்கிய தோளும் துடித்திட‌

உள் எரியாற்றில் கரிந்தும் ஒளிர்ந்தான்.

அவனுக்கும் விரிந்து திறந்தது வானம்

வெள்ளைக்கனவிலும் மின்னல் தைத்தது.

அவள் வாணுதல் இன்னும் பாசடைக் கரைய

தண்பொழில் தருவென வீமழை தூவும்.

அவள் மின்னிய முறுவல் நரை கண்டது இல்.

வேங்கை வரிய வெண்சுரத்தன்ன வெள்ளெனத்

தோன்றும் வெளியிடையும் நீளும் அவள்

விழிப் பூந்தாதின் நீறாடு களத்தில்.


================================================


நரையுண்ட போதும் காதலின் இரையுண்ட‌

தலைவனின் நினவு மழை பற்றி

நான் எழுதிய 

சங்கநடைச்செய்யுட் கவிதை இது.


==================================ருத்ரா இ பரமசிவன்

சனி, 16 மே, 2020



பொழிப்புரை

__________________________


யாண்டு பல ஆகியும் நரையும் திரை(தோல் சுருங்கிய நிலை)

வருத்திய போதும் காதல் பொங்கும் பழம் நினைவில்

தலைவன் தலைவியோடு காதலில் களிப்புற்ற காட்சியை

நினைவு கூரும் செய்யுள் இது.


பாறையில் வீழ்ந்து ஓங்கி ஒங்கி அறையும் வெள்ளிய 

அருவியைப்போல அவன் கன்னத்தில் விழுந்து புரளும்

அவன் வெள்ளை நரை முடிகள் அவன் மீது படர்ந்து

அந்த சடை வயதுகள் எனும் கால ஓட்டத்தில் (ஊழில்)

அவனை மறைத்து மூடுகின்றது.அவனும் அதை எதிர்த்து

இயங்குவது போல் அந்த நினைவில் ஊறித்திளைத்த பொழுது

அவன் வீறு கொண்டவனாய் அக்காதலை மறவாதவனாய் 

காலத்தால் மறைந்து போகாதவனாய் உடல் வற்றிய‌

நிலையிலும் அவன் உள்ளத்துக்கனலால் கரிந்து போயும்

திமிர்த்து நின்றான்.அவனுக்கும் அப்போது அந்த‌

நெடுவானம் திரை திறந்து ஒரு காட்சி நல்குகிறது.

அந்த வெள்ளை நரை இழையும் கூட மின்னல் போல‌

தெறித்தது அவனுக்கு.அவள் ஒளி பொருந்திய நெற்றி

பசுமையான மரங்கள் அடர்ந்த ஆற்றங்கரைபோல்

தண்ணியதாக இருந்தது.அதில் ஒரு தூறல் மழை

வீழ்ந்தது.அவளது அழகிய அந்த புன்முறுவலில்

நரையேதும் இல்லை.தலைவனோ அந்த வயது

முதிர்ந்த நிலையிலும் "பொருள் தேடும்"தன் 

தொழிலை விட்டான் இல்லை.வேங்கைமரங்கள்

வரிசை கட்டி அவனை துரத்துவது அந்த அடர்வனத்தில்

அவன் "தொடர்ந்து" நடந்து கொண்டே இருந்தான்.

வெறுமை "வெள்ளென" நீளும் அந்த வழியில்

அவன் அவள் விழி சிந்தும் பூந்தாதுகள்  ஒரு

பிரிவுத்துன்பத்தின் நெருப்பாய் அவனை

சாம்பல் ஆக்குவது போல் உணர்ந்தாலும்

அவன் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கிறான்.

______________________________________________________

பொழிப்புரை எழுதியது..5.40 மாலை 25.03.2026.

___________________________________________________________

ருத்ரா இ பரமசிவன்

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 8:52 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

"இதோ ஒரு முடிவு "

 

  DISPENSIONALISM   

Opinion: Why tens of millions of Americans now believe the end is near



"இதோ ஒரு முடிவு "

---------------------------------------------------------------------------------

சொற்கீரன் 


போதும் 

என் மூளையை 

சுரண்டிக்கொண்டிருந்தது .

என் குட்டி நாய்களான 

"க்யுப்பிட்டு "களை  ஏவி விட்டதில் 

அந்த பிரபஞ்ச முகட்டின் உச்சியில் 

போய் நின்று கொண்டு 

"வள் வள்" என்கிறது.

அது ஏ எஸ் ஐ என்கிறது.

மண்டை முற்றியதில் தெரிகிறது 

இந்த அண்டம் 

சீக்கிரம்  உடைந்து போகுமாம்!

இந்த தேங்காயை 

விடலை போடுவது யார்?

பார்ப்போம் ....

(தொடரும்)

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 8:52 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

திங்கள், 23 மார்ச், 2026

பொன்சுடர்த்தமிழே

 


வாயில் 

நுழைய வில்லை உன்

வண்ணத்திருப்பெயர்.

ஆயினும்

ஆயிரம் வாயில் 

திறக்கும் உன் தமிழ்


பிஞ்சுத்தமிழே

பிள்ளைத்தமிழே

நீயே எங்கள்

ஊற்றும் காற்றும்!




பொய்யா விளக்கே

பொன்சுடர்த்தமிழே

உள்ளும் புறமும்

ஒளியா ஒளியே!

உன் ஐஞ்சீர் விரலே

எம் ஐம்பெரும்காப்பியம்..உன்

அன்பும் அறமும்

அறிவும் திறனும்

புன்னகை ஒளியும்

உலகம் ஆளும்.

விண்ணும் மண்ணும்

உன் கணிப்பொறி ஆளும்.

நீடு ஊழி நீடு யுகங்கள்

வாழ்க வாழ்க நீ

வளமுடன் வாழ்க!

அன்புடன் அன்புடன்

வாழ்த்திடுகின்றோம்

உன் ஆச்சி தாத்தா

கஸ்தூரி பரமசிவன்

__________________________________

கற்பகநகர் மதுரை_7


மழலைச்செல்வத்துக்கு

ஒரு வாழ்த்து.

வாயில் 

நுழைய வில்லை உன்

வண்ணத்திருப்பெயர்.

ஆயினும்

ஆயிரம் வாயில் 

திறக்கும் உன் தமிழ்.

புரியா சொல் தானே

மழலை!

உன் மழலைப்பெயரே

எங்கள் மனம் நிறைந்த‌

பெயர்.

அதுவும் இனிக்கும் 

அதுவே மணக்கும்

அதுவே

நனி சிறக்க

வாழ்த்துக்கள் 

எங்கள் வாழ்த்துக்கள்.




மழலைச்செல்வத்துக்கு

ஒரு வாழ்த்து.


வாய் நுழையவில்லை

வண்ணத்திருப்பெயர்!

ஆயினும்

பிஞ்சுத்தமிழே

பிள்ளைத்தமிழே

நீயே எங்கள்

ஊற்றும் காற்றும்!

பொய்யா விளக்கே

பொன்சுடர்த்தமிழே

உள்ளும் புறமும்

ஒளியா ஒளியே!

உன் ஐஞ்சீர் விரலே

எம் ஐம்பெரும்காப்பியம்..உன்

எண்ணும் எழுத்தும்

உலகம் ஆளும்.

விண்ணும் மண்ணும்

உன் கணிப்பொறி ஆளும்.

வாழ்க வாழ்க நீ

நீடூழி வாழ்க.


வளமுடன் வாழ்க!

அன்புடன் அன்புடன்

வாழ்த்திடுகின்றோம்

உன் ஆச்சி தாத்தா

கஸ்தூரி பரமசிவன்

__________________________________

கற்பகநகர் மதுரை_7

ஆச்சி தாத்தா




இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 7:38 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

குன்னக்குடி?

 

குன்னக்குடி?

__________________________________________

(குன்னக்குடி எனும் இசைப்பிரளயம்)


குன்னக்குடியா?


அந்த பிரபஞ்சத்தை

பிக் பேங்க் எனும் இசையை

வயலினில் "ஒலி பெயர்" என்றால்

உடனே மொழி பெயர்த்து விடும்.

அப்போ

இந்த பிரபஞ்சத்துக்கும்

விழி பிதுங்கிவிடும் 

பெரு வெடிப்பின் வியப்பில்!

இசையை

சேட்டை செய்து கொண்டே

அமிர்த எள்ளுருண்டை

உருட்டிப்பிசைந்து தருவார்.

அவர் வயலின் ஆயிரம் மொழி பேசும்.

அந்த 

"மருத மலையை" நான் கேட்டபோது

ஆகாயத்தில்

அவர் பறக்க விட்ட‌

அந்த ஆயிரத்தொரு இரவு "மந்திரக்கம்பளத்தில்"

சுருண்டு நெளிந்து

சுக்கல் சுக்கலாக ஒரு

தேன் மிட்டாய்க்குள் நொறுங்கிக்கிடந்தேன்.

அதை விடுங்கள்.

"காவேரியை"

அவரது வயலின் நரம்பு வில்லில்

தலைக்காவிரியிலிருந்து

கொப்பளித்தார் பாருங்கள்..

அய்யோ..!

அது கும்மாணத்தில் குமிழியடிக்கும் நீர்ப்பிழம்புவரை

ராகத்தில் சடைபின்னிய‌

அனகோண்டாவாய் ஊர்ந்து வந்தது போல்

நான் ஆவியாகிப்போனேன்.

குன்னக்குடி ...குன்றக்குடி

எனக்கும் பிரமைதட்டித்தான் போனது.

ஒரு கணம் மேடையில் தமிழ்ச்சொற்பொழிவாய்

அந்த காவித்தலைப்பாகையில்

மின்னல் இடும்.

மறு கணம் அடிகளார் அற்புதமாய்

"பிடிலுக்குள்" செந்தமிழை 

பிருகாக்களில் 

பிரித்து மேய்ந்து கொண்டிருப்பார்.

ரமேஷ் கண்ணன் அவர்களே

குன்னக்குடியின் டோபாலஜியில்

சங்கீதம் இசைத்தமிழை

நயாகராவாய் ஒலிப்பிரளயம் ஒன்றை

அரங்கேற்றிக்கொண்டே இருக்கிறது.

_______________________________________

சொற்கீரன்




இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 7:24 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

அப்பா என்றொரு ஹோலோகிராம்.

 அப்பா என்றொரு ஹோலோகிராம்.

________________________________________


களிம்பு ஏறிய அப்பாவின்

வெத்திலைச்செல்லம்.

அந்த நடுநிசியில்

கவுளி வெத்திலையுடன்

வெறுமை காட்டியது.

நடு இரவில் எழுந்து

வெத்திலைக்குதப்பி

இருட்டு வானத்தை

சிவப்பு 

வெத்திலைக்குழம்பில்

உற்றுப்பார்ப்பார்.

பாக்கு இடிக்கும்

தன் சிறு இரும்பு உரலில்

உச்சியில் தெரிந்த‌

நட்சத்திரங்களை

போட்டு இடித்து

கொண்டிருப்பது போல்

எனக்கு 

ஒரு நிழலாட்டம்.

_____________________________________

சொற்கீரன்


இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 6:47 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

ஞாயிறு, 22 மார்ச், 2026

அந்த "அரைமஞ்சள் சூரியனை"

 

அன்புக்குரிய வண்ணதாசன் அவர்களே


அந்த "அரைமஞ்சள் சூரியனை"ப் படித்தாக‌

வேண்டும் 

என்றொரு மோகமுள்ளைக்

குத்திவிட்டிருக்கிறீர்கள்.

அந்தப் புத்தகம் தேடி செல்வதே

எனது இப்போதைய "மிஷன்".

ஒன்று குறிப்பிட்டீர்கள்.

அந்த புத்தகத்து பாத்திரம் ஒன்றில்

ஒன்று நீங்கள் ஏற்கனவே 

அச்சிடப்பட்டிருக்கவேண்டும்

அல்லது

ஒவ்வொரு எழுத்துப்பிசிறாய்

உங்கள் சிந்தனை எறும்பு 

ஊர்ந்து ஊர்ந்து போய்

அந்த கற்கண்டின் "பொய் மான் கரடு"தனை

ருசித்து ஊறிப்போய் இருக்கவேண்டும்.

உயிரியல் பரிணாமத்தில்

இதயம் உருவாவதற்கு முன்னே

எழுத்துக்கள் துடிக்க ஆரம்பித்திருக்குமோ?

வாசிப்பு என்பது

அந்த சங்க காலப்புலவர்களின்

"மண்டை நிறைய வெண்சோறும் நறவும்" போன்ற‌

ருசி மிகுந்த தருணங்கள் தானோ?

ஆயிரக்கணக்கான ரோஜா இதழ்களை 

அடுக்கிக்கொண்டு

சரக்கென்று ஒரு ஊசியை செருகினால்

அந்த ஒற்றை இதழின் 

வானவிளிம்புக்குள் 

அந்த தருணத்தின் காலத்துளியில்

என்னென்னத் துடிப்புகள் இழைந்திருக்கும்.

இந்த ஒரு நுண்ணிய கற்பனையின் 

ரத்னக்கம்பளத்தை

தன் நாவலில் அற்புதமாக்கிக்காட்டுவார்

தி ஜானகிராமன்.

உங்கள் இதயம் கோர்த்திருக்கும்

அந்த "அரைமஞ்சள் சூரியனோடு"

சில கழஞ்சு தங்கக்குழம்பு ஊற்றி

சொற்களை சுவைக்கலாம் என இருக்கிறேன்.

______________________________________________

சொற்கீரன்


இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 7:41 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

சனி, 21 மார்ச், 2026

comment on RAMESH KANNAN's kavithai in his FB /20.03.26

 அருமை..அருமைமிகு ரமேஷ் கண்ணன்.


சிமினி விளக்கு தான்.

அது எங்கள் ஊர் 

தாமிரவருணி வாய்க்கால்

குமிழிகளோடு

"நடுமையத்தில்" நின்று கொண்டு

உயரத்தில் நீலமும் சிவப்புமாய்

சிறகடித்து "டொபுக்கென்று"நீருக்குள் விழுமே

அப்படியொரு அழகிய திகிலை எதிர்பார்த்து

எங்கள் வீட்டில்

வட்டாரமாய் அமர்ந்து சாப்பிடுவது

நினைவுக்கு வந்தது.

ஒரு சிறிய "சத்ய ஜித் ரேயின்" குறும்படம்

ஒன்று பார்த்த சிலிர்ப்பு உங்கள் வரிகளில்.

___________________________________

சொற்கீரன்

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 11:06 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

வெள்ளி, 20 மார்ச், 2026

....ஒரு மனிதாபிமானக்கவிதையை.

 

வண்ணதாசன் அவர்களின் 19.03.26ன் முகநூல் கவிதை

_________________________________________________________


அன்புள்ள வண்ணதாசன் அவர்களே.

..."என்று தோன்றுகிறது...."

இப்படி முடித்திருந்தீர்கள் அந்த கவிதை/கட்டுரையில்.

சரிந்து விழ இருந்த உங்களை

தடுத்து பிடித்துக்கொண்டு

முதுகை தடவி ஆசுவாசப்படுத்தியிருக்கிறார்.

கவிதைக்கு பேனா காகிதம் மை எல்லாம் அப்புறம்.

கவிதை நெஞ்சம் ஒன்று

பிழிந்து ஒரு கொத்து மழையை அல்லவா

அங்கே தூவியிருக்கிறது.

அந்த வெள்ளிமோதிரத்தில்

கருணையின் முத்தில்

அலைகள் ஆர்க்கும் நெஞ்சம் அங்கே

ஆரம்பித்திருக்கிறது

ஒரு மனிதாபிமானக்கவிதையை.

இல்லாத மோதிரமோ?

அல்லது 

இருக்க வேண்டிய மோதிரமோ?

கவிதைப் பொட்டலத்து

பொற்கிழி அது.

___________________________________________

சொற்கீரன்


இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 2:21 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

அண்ணல் காந்தி அடிகள்!

 

அண்ணல் காந்தி அடிகள்!


ஒரு தூரிகைக்குச்சியே

கை கால் முளைத்து

குச்சி யூன்றி

வரைந்த அமைதியின் 

ஓவியமே

உலகத்துக்கோர் நிழல்!

________________________________

சொற்கீரன்

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 2:10 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

புதன், 18 மார்ச், 2026

ஜெயகாந்தன்.

மூடியை எடுத்து

இறுக மூடிக்கொண்டு

முடங்கிக்கொண்டது

அந்த பேனா.

அது அந்த இருட்டு யுகங்களின் பேனா.

இவன் 

உயிரெழுத்து அத்தனையும்

மூண்டெரியும்

நெருப்பெழுத்து.

கருப்பிடித்த நாளிலிருந்து

துருப்பிடித்துக்கிடந்த‌

சமுதாயம்

துலங்கித்தெரிந்த‌

தன் மனிதத்தை

உயிர்ப்பு கொண்டு

உயர்த்தித்தந்த 

மெய்யெழுத்துக்கள் அல்லவா

இவன் எழுத்து.

ஏனெனில்

இவன் ஜெயகாந்தன்.

__________________________________

சொற்கீரன்

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 8:23 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

செவ்வாய், 17 மார்ச், 2026

கண்டு கொள்ளமாட்டேன்.

 

நீயும் நானுமா?
___________________________________
எனக்கு வேண்டுமென்றால்
நீ
நரியை பரியாக்கிக்கொள்ளுவாய்.
நானும் ஆட்கொள்ளுவேன்.
நீ
சிந்தித்து
சிவலிங்கத்தை
சிலுவையாகவோ
போதிமரமாகவோ
உருவமற்றோ
மாற்றினால்
உன்னைக்கழுவேற்றுவார்கள்
நான்
கண்டு கொள்ளமாட்டேன்.
___________________________________‍
சொற்கீரன்
இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 8:31 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

VANNADAASAN KAVITHAI/17.03.26

 

உடைந்த சிலேட்

_____________________________________

வண்ணதாசன் அவர்களே

அந்த உடைந்த கண்ணாடியில் 

தெரிந்த உங்கள் முகம்

உங்கள் உடைந்த சிலேட்டு

காட்டிய செந்தமிழ் உருவத்தின் 

சரித்திரமாக தெரிவது தானே

ஒரு உன்னத கவிதை வடிவம்.

உங்கள் கவிதைகளில்

முற்றுப்புள்ளிகளில் தான்

கவிதையின் அக்கினி கொழுந்து வீசிக்

காட்டும் முருகியல் வெளிப்படுகிறது.

அருமை வரிகள் அவை.

இப்படி ஒரு அழகியலில்

நம் தேச வறுமைக்கந்தலை

அழகாக காட்டியிருக்கிறார்

கி ரா அவர்கள்

வேட்டி எனும் சிறுகதையில்!

வேட்டியின் அந்தக்கிழிசல்

நம் தேசப்படம் வறுமையில் கிழிந்து

காட்டும் சரித்திரம் என்பதை

சொல்லாமல் சொல்லியிருப்பார்

கி ரா அவர்கள்.

இலக்கிய மேதைகளுக்கு

எழுதும் வரிகள்

அவர்கள் மடியில் புரளும்

பொம்ரேனியன்கள் தான்

அல்லது

உறுமும் சிங்கங்கள் தான்.

______________________________________

சொற்கீரன்


இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 2:49 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

ஞாயிறு, 15 மார்ச், 2026

பரல் நானூறு....6

 


பரல் நானூறு.. 6

____________________________________________


திரிமருப்பு மாவென விண்ணுய் விழிதரு

நுதலாள் நோக்கின் கூர் அம்பு துளைக்க‌

அழல்சிறை அன்ன வெம்மை வேய்ந்த‌

விதிர்ப்புடன் இவனும் அவள் பால் ஒரு

கொய்சுவல் புரவி பாய்தரும் கலியொடு``

கதழ்பரிந்து ஆர்க்க தழுவல் அன்ன‌

தாகம் போர்த்த தகைவுடன் நவின்றது

கேட்டு ஆங்கு இடிஉமிழ் வான்போல்

வரி வரி பிளந்து உரைத்தாள் மன்னே.

பொன்னும் பொருளும் குவித்தீர் எற்கு ?

இவள் பொன்னுடல் தீயில் வெந்திடவோ?

இற்றவன் சொன்னான் இமிழ்தரு

அருவிப் பெயல் அன்ன பூவில் சொரிந்து.

பொருள்வயின் எதிர்க்கும் சூர்நிறைக்

காடு பூம் அத்தம் கடும்பரல் தூஉய்

கிடைப்படும் அலரிப்  பறந்தலை அன்ன 

ஆங்கு அவிர்தலைச்  செயிர்த்து 

அணைந்த காலை நின் முறுவல் அற்றே 

அணிக்குடை விரிக்கும் சுடு கதிர் 

எல்லனும் தண்ணிழல் தகையும்.

நம்மின் நெஞ்சம் நிறையும் படு 

நல்கூர் ஆங்கு வறளும் முற்றும்மே!

----------------------------------------------------------------





இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 7:11 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

கவிதை தந்தான் வைரமுத்து.

 

கவிதை தந்தான் வைரமுத்து.
__________________________________________
"என்னோடு பல்லாங்குழி விளையாட வா"
வம்புக்கு இழுத்தது வானம்.
கோடி கோடி விண்மீன்கள்
அதன் கையிருப்பு என்ற‌
இறுமாப்பே அது.
கவிஞன் சிரித்துக்கொண்டான்.
இரண்டு மூன்று கல்லெறிந்தான்
மாணிக்கக்கற்களாய்.
எழுதினான் கவிஞன்.
"விண்ணெல்லாம் தமிழ் எனும் கண்கள்"
மறுகணம் இருண்டது வானம்.
கவிதையின் ஒளி மிஞ்சிய ஒளியால்.
"நிறுத்து நிறுத்து
பிரபஞ்ச ஒளியேற்று"
என்றது வானம்.
"கொஞ்சம் இமை துடித்தது தமிழ்.
எங்கும் இதயம் துடித்த தமிழ்".
கவிதை தந்தான் வைரமுத்து.
அதன் கருப்பொருள்
மனித நேயம் மட்டுமே.
_______________________________________
சொற்கீரன்
இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 7:04 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

சனி, 14 மார்ச், 2026

நடு நிசி நடை....

 வண்ணதாசன் கவிதை (முகநூல் 14.03.2026)

_______________________________________________________


" மன்னியுங்கள். உங்கள் உறவினர் பிடிவாதமாக இறந்து போயிருக்கிறார்"


வண்ணதாசன் அவர்களே

இப்படியொரு தலைப்பை

உங்கள் தூரிகையின் மயிர்ச்சிப்பம்

இறுதியில் இழுவித்தந்ததில் 

மின்னல் உயிர்ப்பு அல்லவா

இழையாடி நிற்கிறது.

அந்த ஓவியன் தவிப்பு.

நடு நிசி நடை.

இன்னும் 

அந்த நின்றே போய்விட்ட‌

இதயப்பொந்துக்குள்ளிருந்து

உயிர்த்தெழுந்த ஒலிக்கீறலாய்

விம்மிப்புடைத்த ஒரு கிளிமொழி இது!

___________________________________________________

சொற்கீரன்




இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 6:51 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

வியாழன், 12 மார்ச், 2026

என்னைக் கும்பிடு

 

12.03.2026

__________________________________________

Feed posts

Vannadasan Sivasankaran S

பிடித்தவை

 ·

10ம.நே

 ·

உண்மையாக இருந்தான்.

அவனுடைய முதுகில் குத்தினார்கள்.

குப்புற விழாமல் மல்லாந்து விழும்போதும்

அவன் முகத்தில். இயல்பான சிரிப்பு இருந்தது.

மேற்கொண்டு நெஞ்சில் குத்தினார்கள்.

குறுவாளை உருவுகிறவனைப் பார்த்து,  'உன் சட்டைப் பித்தான்களை மாற்றிப் போட்டிருக்கிறாய் ' என்றான்.

அவன் வாயில் மிதித்தவனின் குதிங்காலில்

பித்தவெடிப்பு இருந்தது என்பதே அவனுடைய கடைசிக் காட்சியாக இருந்தது.

உங்களுக்குத் தெரிந்திருக்கக்கூடியவர்கள்

__________________________________________________________________


வண்ணதாசன் அவர்களே...


ஒரு கன்னத்தை அடித்தால்

மறு கன்னத்தையும் திருப்பிக்காட்டு.

என்ற வரிகளை

மேலும் மேலும் தோலுரித்துக்

காட்டியிருக்கிறீர்கள்.

பிய்த்து பிய்த்து சதை கிழிகிற மாதிரி

காட்டியிருக்கிறீர்கள்.

இறைவன்களும் சைத்தான்களும்

இப்படி

தத்ரூபம் காட்டிய போது

இன்னும் எந்த வல்லமை மிக்கவ‌னை

வரவேற்றுக்காத்துக்கிடக்கவேண்டும்?

பாவங்களுக்கு தண்டனை கொடுக்க‌

எண்ணெய்க்கொப்பறைகள் காத்திருக்கின்றன

என்ற புராணங்கள் தான் கொப்பளங்களாகிக்

கிடக்கின்றன.

தேவ வசனங்களும் ஒலித்துக்கொண்டே

இருக்கின்றன.

மனிதம் இன்னும்

அன்பின் நிர்வாண தரிசனத்தை 

பெறவே இல்லை.

மிரட்டி மிரட்டி

என்னைக் கும்பிடு

இல்லாவிட்டால் இதுவே தான் 

உனக்கு எப்போதும்

என்று 

காட்டுவதற்கு மட்டுமே

காட்சி தருவது தான் கடவுள்களா?

_____________________________________________________

சொற்கீரன்

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 11:59 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

செவ்வாய், 10 மார்ச், 2026

நான்.

 



வரலாறு

ஓடிக்கொண்டே இருக்கிறது.

நேற்றைய வழிகளை

புடைத்து பெயர்த்துக்கொண்டு

ஓடுகிறது.

இது அப்பட்டமாய்

குரல் கொடுக்கிறது.

நாளையப்படுகையில்

எது 

என்னை மறிக்கும்?

எதற்கு 

நான் பதுங்கி பதுங்கி

பாய வேண்டும்?

நேராய் என் உறுமல்கள்

கோரைப்பற்கள் எல்லாம்

தடை செய்பவற்றை

குத்திக்கிழித்துவிடும்.

கரையில் வரிசைகாட்டும்

பச்சைப்புல்லும்

பவள வண்ணப்பூக்களும்

என்னை மயக்கும் கவிதைகள் அல்ல.

நீல வானமும் மேகங்களும் கூட‌

என் முகவரிக்கு

எதிர் முகவரி காட்டும்

வலுவற்றவை தான்.

எனக்கு ஓட்டம் மட்டுமே

உயிர்.

என் குமிழித்துடிப்புகளில்

உங்கள் அத்தியாயங்களை

எழுதிக்கொள்ளுங்கள்.

தட தட வென்று ஓடும்

என் ராட்சச சக்கரங்களில்

உங்கள்

மயிற்பீலிகளை வைத்து

சோதித்துப் பார்க்காதீர்கள்.

உங்கள் இன்றைய சித்தாந்தங்களும்

நாளைய இலட்சியங்களும்

எனக்கு பொருட்டே அல்ல.

எதிர்ப்படும்

எல்லாவற்றையும்

எல்லோரையும்

நொறுக்கித்தள்ளிவிட்டு

ஓடுவதே

என் இயற்கை.

என் வலிமை.

ஒரு சட்டத்துக்குள் என்

சீற்றங்களை அடைத்து நீங்கள்

"நெய் ஓவியங்கள்'வரைந்து 

அழகு பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

இது

அனக்கொண்டாவா?

டி ரெக்ஸ் டைனோசரா?

ட்ராகனா?

இல்லை

ஆயிரங்கால் பூச்சியின்

கோடி கோடி வடிவ‌

மூர்க்கமா?

சரி 

இப்போது கேட்டுக்கொள்ளுங்கள்.

அந்த வரலாறு எனும் 

அமைதியான ஒரு ஆற்றோட்டம்

எனும் சொற்கொத்துகளை

தூக்கி எறியுங்கள்.

நான்

ஜென்ஸி...

ஜென்ஸி மட்டுமே.

நான் அணிந்திருக்கும் 

கண்ணாடியைக்கூட‌

தூள் தூளாக்கி 

முன்னேறுவேன்.

என் வேகம் 

என் கண்விழிக்கோளங்களைக்கூட‌

எனக்கும் வெகு கோடி மைல்களுக்கு முன்னேயே

பிதுங்கிக்கொண்டு 

விழுந்து விடச்செய்து விடும்.

எனக்கு

காட்சிகள் தேவையில்லை.

சாட்சிகள் தேவையில்லை.

நான்

யாருக்கும் எதற்கும்

பாடம் இல்லை.

எனக்கு உருவம் கிடையாது.

வடிவம் கொள்ள எந்த‌

ஜியாமெட்ரியும் கிடையாது.

அழிவும் ஆக்கமுமே

என் "அப்ஸ்ட்ரக்ட் அல்ஜீப்ரா"

வழி விடுங்கள் 

என்னும் 

கெஞ்சலும் கொஞ்சலும்

என் மொழியே அல்ல.

சிதிலங்களைக்கொண்டு

சித்திரம் காட்டும்

சிலிர்ப்புகளின்

பூகம்பமே நான்.

என்னை மறித்துக்கொண்டிருக்கும்

உங்கள்

அஞ்ஞானங்களையும்

விஞ்ஞானங்களையும்

அதே

அஞ்ஞானங்களையும்

விஞ்ஞானங்களையும்

கொண்டு

தவிடு பொடியாக்கிக்கொண்டு

ஓடும்

ஒரு அடாவடிப்பரிணாமமே

நான்.


___________________________________________

சொற்கீரன்

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 2:47 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

திங்கள், 9 மார்ச், 2026

வண்ணதாசனின் "மழ வில்லுகள்"

 

வண்ணதாசனின் "மழ வில்லுகள்"

_________________________________________

சொற்கீரன்


வண்ணதாசனின் வானவில்லுகள் என்று 

அவருடைய கவிதைச்சில்லுகள் தெறித்த‌

வண்ணங்களை ஒக்காந்து 

"அசைபோடும் குறுக்குத்துறை படிக்கட்டுகளாக்கி 

அமர்ந்து ரசிப்பதே 

இந்த "வண்ணதாசனின் மழவில்லுகள்".

பாருங்கள் நம் மலையாழத்தமிழ் 

வானவில்லை எவ்வளவு

கவிதைத்தனமாய் வருடி வருடி சொல்கிறது

"மழ வில்லு"ன்னு!


___________________________________________________



அந்தக்கடிக்காரததை

குலுக்கி குலுக்கி

உசுரு இருக்காண்ணு 

பார்க்கிறது தான் கவிதை.

ஆத்துத்தண்ணி முழிச்சிட்டுருக்கா

தூங்கிக்கிட்டுருக்காண்ணு

கொள்ளிகாட்டைய வச்சு துப்பறியும்

சீடர்கள்ளாம் இல்ல இவங்க.

காது கூர்மைக்குள்ள‌

ஆயிரம் ஃபேவர்லூபா வாச்சுக‌

இருக்காக்கும் இவங்களுக்கு.

அந்த "காலம்" குலுக்குனதுக்கெல்லாம்

கோவப்படல..

எல.. இவங்களுக்கு எப்டிலெ

காது இவ்வளவு கூர்மைன்னு

தெகச்சுட்டுதுலெ.

இந்த சவத்து மூதி இப்டில்லாம்

எசலும்ணுதான்

நம்ம பயலுவ இப்ப‌

வினாடி முள்ள சொருகி வச்சுருக்காம்லே

வாச்சுக்குள்ளெ.


___________________________________________________________

சொற்கீரன்

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 2:59 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

ஞாயிறு, 8 மார்ச், 2026

குடமுருட்டி சங்கரன் கோவிலுக்கு..

 

கோமதிகளுக்குள்

வேறு கோமதி

யாராவது இருக்கிறார்களா

என்று

தட்டாமாலை சுற்றும் பேனாவை

எங்கள்

அம்பாசமுத்திரம் 

குடமுருட்டி சங்கரன் கோவிலுக்கு

வரச்சொல்லுங்கள்.

அந்த ஆற்றங்கரை நாகரிகத்தில்

தடுக்கி விழுந்தால் கூட‌

ஒரு கூழாங்கல் சொல்லும்

"என் பெயர் கோமதி" என்று.

தெய்வங்கள் தோன்றிய போதே

அவற்றின் "மகளிர் தெய்வங்களும்"

தலையில் ஒரு

தவ மூட்டை சுமந்து

"தபஸ்'இருக்கவேண்டும்

நல்ல கணவன் கிடைக்க‌

அல்லது

தான் விரும்பிய கணவன் கிடைக்க.

மகளிர் விடுதலைக்கு

தபஸ் இருக்கும் கோமதிகளே

இன்று காண்கிறோம்

அன்றாட அடுப்புக்கூட்டின்

அக்கினிச்சிறகுகளிடையே.

கணிப்பொறியின் உச்சியேறியும்

அங்கு ஒரு "கைலாச மலை"தேடும்

பாசி பிடித்த பார்வைகளில்

சிகப்புச் சூரியன்கள் இடறிய போதும்

கைபேசி கிளுகிளுப்புகள்

சும்மா விடுவதாயில்லை.

ரமேஷ் கண்ணன் அவர்களே

உங்கள் எழுத்து ஊர்வலத்தின்

வீட்டுச்சித்திரங்கள்

வீதி முனை வரை வந்து

எத்தனை புள்ளி கோலம் போடலாம்

என்று அந்த 

சுண்ணாம்புச்சிரட்டையை

வருடிய போது கூட‌

ஞானம் தெறிக்கலாம்...

இந்த சிரட்டைகளில் பெரும் யுகத்தின்

கங்கோத்ரிகள்

கர்ப்பம் தரிக்கலாம் என்று.

__________________________________________

சொற்கீரன்


(முகநூலில் பதிவிட்ட திரு ரமேஷ் கண்ணன் அவர்களின்

கவிதையில் விழுந்த எனது நிழல்.)



இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 10:29 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

யுகப்புரட்சி

 


யுகப்புரட்சி

_______________________________________________

வளைக்கரங்களில்

கிளு கிளுப்பு ஓசைகளை

பதுக்கி வைத்து

காதல் எனும் ஒரு

அக்கினி மூலையை

மறைத்து வைத்திருந்த பெண்ணே!

"மணம்" எனும் மத்தாப்புக்காட்டில்

மகிழ்ந்து 

இல்லம் எனும் அடுப்புக்கூட்டில் நுழைந்தபின்

வந்த இன்னொரு அக்கினிக்காட்டிலும்

உன் சமையல் சாணக்கியத்தால்

ஒப்பற்றதோர் ஆட்சி செய்கிறாய் நீ  என்று

இவர்கள்

எப்போதும் புகழ்ந்து கொண்டிருப்பார்கள்

இன்ப நெருக்கடிகளின்

கொசுக்கடிகள்

எப்போதும் இருவருக்கும்

பொதுவாகவே இருந்தபோதும்

பாசம் எனும் பூரிப்பு

உனக்கு மட்டுமே ஒரு

பொன்முலாம் பூசுகிறது என்றும்

ஆயிரம் இமயத்துச்சுமைகளின்

அற்புத சுமைதாங்கி நீயே என்றும்

இவர்கள்

ஒரு மகுடம் சூட்டுவார்கள்.

பிள்ளைத்தாய்ச்சி எனும்

இந்த மொத்த பிரபஞ்சத்தையும்

உன் மீது ஏற்றிவிட்டு

இவர்கள் மயிற்பீலி கிலு கிலுப்பைகளால்

உன்னை வருடிக்கொண்டிருக்கும்

விளையாட்டுகளை மட்டும்

செய்து கொண்டே இருப்பார்கள்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்

நீ

சுமந்த புராணங்களும்

சடங்குக‌ளுமே 

உன் விலங்குகளின் மூட்டைகள் தான்.

இதிலிருந்து 

விடுதலைக்கு

உனக்கு பீரங்கிகள் தேவையில்லை.

அந்த அஞ்சறைப்பெட்டிகள் எல்லாம்

இனி உன் அறிவுப்புயல்களின்

நுண்ணறிவுப் பெட்டகங்கள் ஆகட்டும்.

மானிட மலர்ச்சிக்கு

எந்த விடுதலைப்போர்களும் தேவையில்லை

உனது இந்த‌

அறிவு விழித்த 

யுகப்புரட்சி ஒன்றே போதும்.

பெண்ணே!

உன் கண்ணுக்கு 

மை தீட்டிக்கொள்ளும் முன் உன்

பெண்மைக்கு

அறிவின் ஒளி தீட்டிக்கொள்!

______________________________________________

சொற்கீரன்

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 12:07 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

சனி, 7 மார்ச், 2026

பூ!

 

மகளிர் தினம்.

__________________________


பூ!

அப்படியே விடுங்களேன்

தனக்கான புயலை

அதுவே வீசிக்கொள்ளட்டும்!

_____________________________

சொற்கீரன்

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 8:05 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

புதன், 4 மார்ச், 2026

விசில்கள்

 

கனவுகளை

காய்ச்சி வடித்து

குத்து டான்ஸ் 

ஊறுகாயும் 

பஞ்ச் டையலாக்கும்

சேர்த்த சரக்குகளின்

நிழலாட்ட க்கிட்டங்கிகளே


 


சினிமா சினிமா சினிமா.


பொழுது போக்கு 


குடை ராட்டினங்களின்


காதல் காளான் குடைகளின்


நாய்க்குடைகளிலா


உங்கள் லட்சிய நிழல்கள்


கூடு கட்டும்?




நம் அவலங்களின்


நடப்புகளையெல்லாம்


மரக்கடிக்க‌


மறக்கடிக்க


போடும்


போதை ஊசிகள் தான்


மசாலாப்படங்கள்.


அரசியல் எனும் வெளிச்சம் 


படாத 


கொசுக்கிடங்குகளில்


டூயட்டுகள் பாடி


நமக்கு நாமே


அரிதாரம் பூசிக்கொள்வது தான்


சினிமா எனும்


"கச்சா பிலிம்" காடுகள்.


விடியல் தேடி


வாக்கு ஏந்தி வருபவர்களே


கானல் நீர் ஈசல்களே


விழித்தெழுங்கள்.


உதிரப்போகும் உங்கள்


சிறகுகள் மூடி


விசில்கள் எனும் சில்லரைச்


சத்தங்களில்


தோலைந்து போய் விடாதீர்கள்.


அட்டைக்கதாநாயகனா உங்கள்


அடைக்கலம்?


விழித்தெழுங்கள்


______________________________________


சொற்கீரன்


இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 8:17 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

திங்கள், 2 மார்ச், 2026

திருத்தமிழ் ஆற்றுப்படை

 



இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 4:20 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

ஞாயிறு, 1 மார்ச், 2026

"மோக முள்ளின்"...

 



ஒரு பெருங்கதையாடல்!

_____________________________________


ஒரு ராமாயணத்தை

இன்னொரு மகாபாரதம் கொண்டு

சப்ளாக்கட்டையை

தட்டி தட்டி 

சுரங்களையும் அசுரங்களையும்

கலந்து பிசைந்து

கதைக்கும் பெருங்கடலா இது?

தெரியவில்லை.

எழுத்தாளர் பவா செல்லத்துரை அவர்கள்

இன்னொரு

எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின்

எழுத்துக்களின் 

நாடித்துவாரங்களுக்குள் எல்லாம்

புகுந்து புகுந்து

தும்மல் போட்டு போட்டு

புல்லரித்துக்கொள்வது தான் இது.

இரு கல்லும் மோதி

பொறி பறக்கும்

சிக்கிமுக்கி கல்லாக‌

சிந்தனைகளின்

கற்பனை நிகழ்வுகளின்

உரசல்களையெல்லாம்

தேன் பிழிந்து தருவது தான் இது.

இப்படித்தான்

கும்பகோணம் 

அணைக்தால் தெருவுக்குப் போனால்

"மோக முள்ளின்"

பாபுவும் யமுனாவும்

அங்கே தூசிகளிலும் 

காத்துப்பிழம்பின் நெஞ்சுத்துடிப்புகளிலும்

காதல் கொப்பளிக்காமல்

குமிழிகள் விட்டுக்கொண்டே இருப்பதை

புளகாங்கிதத்துடன்

"பௌராணிகம்" செய்வதும் தான் இது.

பவா செல்லத்துரை

நாவல்களின் 

"லைவ்" நாவல்கள்.

இலக்கு இல்லாத திசைகளையும்

கோர்த்து இலக்கிய அனுபவத்தின்

ஆச்சரியமான திசைகளைக்கொண்டு

அருந்தத் தரும் 

அற்புதக்"குடி"யிருப்பு

பவா செல்லத்துரை அவர்கள்

_____________________________________________

சொற்கீரன்

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 3:11 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

சனி, 28 பிப்ரவரி, 2026

vannadaasan kavithai /01.03.26

 


வண்ணதாசன் அவர்களே!


என்ன இப்படி?

ஒரு தீயை அள்ளிப்பூசி

பசியின் கொடும் தீக்கொழுந்து வைத்து

நகங்களுக்கு

விடியல் நகப்பூச்சு பூசுவது போல்

அந்த அழகிய முதுகு மழலைப்பெண்ணின்

முகம் காட்டி

நெஞ்சத்தை கிள்ளி விட்டீர்கள்.

மாவிலை செம்புத்தளிர்

சொட்டிக்காட்டியிருக்கும்

நெருப்பாற்றங்கரை நோக்கிய‌

உங்கள் ஆற்றுப்படைக்குள்

இந்த கற்பாறைகளை

உடைத்து நொறுக்கும்

ஆயுதப்படையிலும்

தேமா புளிமாக்களும்

க‌ருவிளங்கண்ணி 

கூவிளங்கண்ணிகளூம்

கூவிக்கொண்டு தானிருக்கின்றன.

______________________________________

சொற்கீரன்.

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 8:25 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

ஆற்றுப்படை

 


THIS IS MINNOOTTAM FOR "RAMESH KANNAN:'S KAVITHAI ON HIS FACE BOOK ON 

01.03.2016

______________________________________________________________

என்னடா இது.

எசப்பாட்டுகளின் தொல்லையாகிப்போச்சு

என முணுமுணுக்க வேண்டாம்.

ஒரு கவிதையை

ஒரு கவிதையால் தானே பார்க்கவேண்டும்.

கவிதையை படிப்பது அல்ல இது.

ஒகோ!

அவ்வளவு பெரிய அப்பா டக்கரா நீங்கள்?

கருக விட வேண்டாம்.

தளிர் விடும் கவிதை ஆர்வங்களை.

அந்த சொற் துண்டங்கள்

குத்தி குத்திச் சொருகி கொடுத்திருந்த‌

உங்கள்

எழுத்துக்கோர்வைகளின்

ஆற்றுப்படை 

உண்மையிலேயே

சுவையோ சுவை!

அருமையோ அருமை!

________________________________________

சொற்கீரன்

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 5:20 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

அப்போது பிறந்தது தான்.

 

நீங்கள் யாருடைய பிள்ளைகளாக‌

இங்கே பிறக்கப்போகிறீர்கள்?

என்னுடையவர்களாக‌வா?

அவனுடையவர்களாகவா?

இறைவனும் கேட்டான்.

சாத்தானும் கேட்டான்.

சரி.

ஓட்டுப்பெட்டி வைக்கலாம்

எனப்பட்டது.

ஓட்டுபெட்டி முன்னே

குவிந்தனர் கூட்டம் கூட்டமாய்.

ஓட்டுகள் குவிந்தன.

எண்ணப்பட்டன.

இருவருக்கும் சமமாய்

ஓட்டுகள்!

என்ன?

எனக்கு ஓட்டுப்போட‌

இன்னும் இங்கு எவரும் இல்லையா?

என்று

இருவருமே கேட்டனர்.

வெகு நேரம் ஆயிற்று.

யுகங்கள் ஆயிற்று.

கோடி கோடி காலங்கள்

வந்து வந்து

மறைந்து போயின.

அவர்கள் இருவர் மட்டுமே நின்றனர்.

அவர்கள் 

கை குலுக்கிக் கொண்டனர்.

என்ன செய்யலாம்?

அவர் ஓட்டு இவருக்கும்

இவர் ஓட்டு அவருக்கும் 

விழுந்தன.

அப்போது பிறந்தது தான்.

மனிதமும்

மனித அறிவும்!!

________________________________________

சொற்கீரன்

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 4:51 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

வியாழன், 26 பிப்ரவரி, 2026

ஆலங்காட்டு தரிசனத்துக்கு...

27.02.2026.

Vannadasan Sivasankaran S

பிடித்தவை ·12ம.நே ·
ஒரு தெய்வம்
வாகை மரத்தின் கீழ்
பதநீரும் நொங்கும் விற்கிறது.
புனிதமேரி தெருமூலையில் ஒன்றுக்கு
புதன் கிழமையில் மீன் வியாபாரம்.
பொது மருத்துவமனைப் பக்கம் ஒன்று
தோளில் சார்த்திய குளிர்ந்த பிள்ளையுடன்.
முடிதிருத்துகிற ஒரு தெய்வம்
செவ்வாய்க் கிழமை ஓய்வெடுத்துக் கொள்கிறது.
பித்துற்றுப் பேசி ஒன்று
பச்சைப்பழஞ்சேலையுடன் அலைகிறது.
நான்கு கால் தெய்வம் ஒன்று
நடைபாதையில் குட்டியுடன் படுத்தபடி.
தன்னைக் காட்டாது பறக்கும் தெய்வமோ
என் மீது சூடாக எச்சமிடுகிறது.
சிறு தெய்வமோ, பெருந்தெய்வமோ
கோவிலுக்கு வெளியேதான்
கும்பிடுகிறேன் அனைத்தையும்.
%
2013





_____________________________________________________-


 Vannadasan Sivasankaran S..........27/02/2026

பிடித்தவை

 ·

6ம.நே

 ·


நீண்ட காலம் 

படுக்கையில் இருந்தவர்

இன்றைக்கு அவரே எழுந்து 

முகம் கழுவிக் கொள்கிறார். 

அவருக்கு அவர் முகத்தைப் பிடித்திருக்கிறது.

ஈரம் வழியும் ஒடுங்கிய கன்னத்தை,

கண்களின் பள்ளத்தை,

நுனிச் சதை தளர்ந்த மூக்கு நுனியை

எலும்பு தட்டுப்படும் நாடியைப் பிடித்திருக்கிறது.

தண்ணீர் விழும் திருகு குழாயை

கைப்பிடியுள்ள இந்த ப்ளாஸ்டிக் கோப்பையை

அதிலிருந்து சரியும் தண்ணீரைப் பிடித்திருக்கிறது.

நெற்றியில் இருந்து விழும்

ஒரே ஒரு சொட்டை ஏந்துவதற்காக

அவர் அதிகபட்சம் நாக்கை 

நீட்டிக்கொண்டு இருக்கிறார்.


_______________________________________________‍‍


எங்கள் வகுப்பில் தமிழ் ஆசிரியர்

உருவகக்கதை சொல்லுவதில் வல்லவர்.

சுடுகாடு பற்றி

ஒரு கட்டுரை வரைக என்று

மாணவர்களுக்கு

அவர் சொன்னார்.

இந்த கனமான அச்சம் தரும்

தலைப்பு 

இவர்களால்

எப்படி பார்க்கப்படுகிறது என்று

அவர்க்கு அறிய ஆவல்.

மாணவர்களுடைய கட்டுரைகள்

கால் பக்கம் அரை பக்கம் கூட இல்லை.

சில வற்றில்

ஓரிரு வரிகள்

அல்லது வார்த்தைகள் மட்டுமே.

ஒரு கட்டுரை

இரண்டு மூன்று

தாள்களை நிரப்பி எழுதப்பட்டிருந்தது.

அவருக்கு

வியப்பு தாங்க வில்லை.

அதைப்படித்தார்.

"சுடுகாடு..."என்று துவங்கியிருந்தது.

அது அந்த ஆத்தங்கரையில் இருக்கிறது.

அதில் ஒரு அழகிய மரம்.

நாவல் மரம்.

அதன் இலைகள் சிலுக்கு மாதிரி

பளபளப்பில்

பச்சை பச்சையாய் வெட வெடப்பு சத்தத்தோடு

இருக்கும்.

பழங்கள்..

கருப்பு கருப்பாய்

இனிப்பு இனிப்பாய் இருக்கும்.

அது எப்படி?

மரத்தில் சமைக்கிறார்களா?

அது கூட‌

சூடாய் இருக்குமா?

ஆறிப்போய் இருக்குமா?

கீழே விழுந்ததை

பொறுக்கிப்பார்த்து தான்

புரிந்து கொள்ள முடியும்..

. . . . . . 

கட்டுரை தொடர்ந்து கொண்டே போனது.

ஆசிரியர் அந்தக்கட்டுரையை

அந்த மாணவனைக்கொண்டே 

வாசிக்கச்சொன்னார்.

கை தட்டி கை தட்டி

எல்லாரையும் பாராட்டச்சொன்னார்.

தமிழ் மொழி நாவு கொண்டு

உயர் தனி சிறப்பும் செம்மையும்

பெற்றது.

அந்த தமிழ் நாடு 

நாவலந்தீவு

எனும் பெயர் பெற்றது எப்படி 

என்று அவர்க்கு 

இன்று தான் விளங்கியது.

வண்ணதாசன் அவர்களே!

அந்த ஒரு சொட்டு நீருக்குள்

வாழ்க்கை கனத்தின் 

ஏழு கடல்களா?

_____________________________________

சொற்கீரன்



__________________________________________________










(3)


அது

கடைசிச்சொட்டா?

முதல் சொட்டா?

மகப்பேறு பார்த்தவள்

தன் பிஞ்சு மண்டைக்குழவியை

கழுவும்போதும்

அந்த ஒரு சொட்டு

அவர் வாய்க்குள் விழுந்து

பல அடையாறு ஆலமரங்களின்

விழுதுகளை

விட்டிறங்கி

எங்கெல்லாமோ நடந்து

ஏன்

அந்த சிந்துபூந்துறை ஆற்றையும் கூட‌

ருசி பார்த்து

சப்பு கொட்டிக்கொண்டு இருக்கலாம்.

அந்தத் துளியில்

இன்னும் பல ஏ ஐக்கள்

பூதங்கள் காட்டக் காத்திருக்கலாம்.

இருப்பினும்

கடைசியாக அவர் மூடப்படுவது கூட‌

அவருக்கு பிடித்துப்போன காட்சி தான்.

ஆலங்காட்டு தரிசனத்துக்கு

எல்லோரும் தான் வந்திருக்கிறார்கள்

அந்த கூத்தனும் கூடத்தான்.

__________________________________________

சொற்கீரன்.





இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 8:50 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு

பின்பற்றுபவர்கள்

பின்பற்றுபவர்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

பக்கங்கள்

  • நகை மாளிகை (ஜோக்ஸ் ஹவுஸ்)
  • நிகழ்வுகள்
  • சொல்கிறார்கள்

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2011 (2)
    • ►  நவம்பர் (2)
  • ►  2014 (32)
    • ►  பிப்ரவரி (12)
    • ►  மார்ச் (3)
    • ►  மே (9)
    • ►  ஜூன் (2)
    • ►  ஜூலை (4)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  செப்டம்பர் (1)
  • ►  2015 (20)
    • ►  ஆகஸ்ட் (5)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  அக்டோபர் (2)
    • ►  டிசம்பர் (8)
  • ►  2016 (371)
    • ►  ஜனவரி (24)
    • ►  பிப்ரவரி (11)
    • ►  மார்ச் (5)
    • ►  ஜூன் (6)
    • ►  ஜூலை (11)
    • ►  ஆகஸ்ட் (56)
    • ►  செப்டம்பர் (46)
    • ►  அக்டோபர் (57)
    • ►  நவம்பர் (115)
    • ►  டிசம்பர் (40)
  • ►  2017 (496)
    • ►  ஜனவரி (79)
    • ►  பிப்ரவரி (44)
    • ►  மார்ச் (32)
    • ►  ஏப்ரல் (34)
    • ►  மே (41)
    • ►  ஜூன் (31)
    • ►  ஜூலை (27)
    • ►  ஆகஸ்ட் (45)
    • ►  செப்டம்பர் (39)
    • ►  அக்டோபர் (36)
    • ►  நவம்பர் (21)
    • ►  டிசம்பர் (67)
  • ►  2018 (510)
    • ►  ஜனவரி (53)
    • ►  பிப்ரவரி (31)
    • ►  மார்ச் (37)
    • ►  ஏப்ரல் (43)
    • ►  மே (29)
    • ►  ஜூன் (17)
    • ►  ஜூலை (38)
    • ►  ஆகஸ்ட் (47)
    • ►  செப்டம்பர் (36)
    • ►  அக்டோபர் (52)
    • ►  நவம்பர் (67)
    • ►  டிசம்பர் (60)
  • ►  2019 (516)
    • ►  ஜனவரி (53)
    • ►  பிப்ரவரி (51)
    • ►  மார்ச் (72)
    • ►  ஏப்ரல் (46)
    • ►  மே (53)
    • ►  ஜூன் (35)
    • ►  ஜூலை (45)
    • ►  ஆகஸ்ட் (35)
    • ►  செப்டம்பர் (27)
    • ►  அக்டோபர் (35)
    • ►  நவம்பர் (38)
    • ►  டிசம்பர் (26)
  • ►  2020 (341)
    • ►  ஜனவரி (18)
    • ►  பிப்ரவரி (20)
    • ►  மார்ச் (22)
    • ►  ஏப்ரல் (48)
    • ►  மே (33)
    • ►  ஜூன் (29)
    • ►  ஜூலை (29)
    • ►  ஆகஸ்ட் (29)
    • ►  செப்டம்பர் (32)
    • ►  அக்டோபர் (34)
    • ►  நவம்பர் (27)
    • ►  டிசம்பர் (20)
  • ►  2021 (225)
    • ►  ஜனவரி (10)
    • ►  பிப்ரவரி (11)
    • ►  மார்ச் (13)
    • ►  ஏப்ரல் (29)
    • ►  மே (24)
    • ►  ஜூன் (22)
    • ►  ஜூலை (19)
    • ►  ஆகஸ்ட் (30)
    • ►  செப்டம்பர் (21)
    • ►  அக்டோபர் (11)
    • ►  நவம்பர் (12)
    • ►  டிசம்பர் (23)
  • ►  2022 (307)
    • ►  ஜனவரி (7)
    • ►  பிப்ரவரி (12)
    • ►  மார்ச் (20)
    • ►  ஏப்ரல் (22)
    • ►  மே (19)
    • ►  ஜூன் (12)
    • ►  ஜூலை (19)
    • ►  ஆகஸ்ட் (55)
    • ►  செப்டம்பர் (41)
    • ►  அக்டோபர் (30)
    • ►  நவம்பர் (39)
    • ►  டிசம்பர் (31)
  • ►  2023 (350)
    • ►  ஜனவரி (22)
    • ►  பிப்ரவரி (52)
    • ►  மார்ச் (49)
    • ►  ஏப்ரல் (57)
    • ►  மே (12)
    • ►  ஜூன் (24)
    • ►  ஜூலை (59)
    • ►  ஆகஸ்ட் (44)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  அக்டோபர் (9)
    • ►  நவம்பர் (10)
    • ►  டிசம்பர் (11)
  • ►  2024 (505)
    • ►  ஜனவரி (4)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  மார்ச் (14)
    • ►  ஏப்ரல் (6)
    • ►  மே (39)
    • ►  ஜூன் (71)
    • ►  ஜூலை (114)
    • ►  ஆகஸ்ட் (67)
    • ►  செப்டம்பர் (43)
    • ►  அக்டோபர் (46)
    • ►  நவம்பர் (34)
    • ►  டிசம்பர் (61)
  • ►  2025 (635)
    • ►  ஜனவரி (61)
    • ►  பிப்ரவரி (71)
    • ►  மார்ச் (102)
    • ►  ஏப்ரல் (54)
    • ►  மே (45)
    • ►  ஜூன் (39)
    • ►  ஜூலை (45)
    • ►  ஆகஸ்ட் (54)
    • ►  செப்டம்பர் (34)
    • ►  அக்டோபர் (32)
    • ►  நவம்பர் (72)
    • ►  டிசம்பர் (26)
  • ▼  2026 (91)
    • ►  ஜனவரி (12)
    • ►  பிப்ரவரி (50)
      • ஆலங்காட்டு தரிசனத்துக்கு...
      • அப்போது பிறந்தது தான்.
      • ஆற்றுப்படை
      • vannadaasan kavithai /01.03.26
    • ▼  மார்ச் (29)
      • "மோக முள்ளின்"...
      • திருத்தமிழ் ஆற்றுப்படை
      • விசில்கள்
      • பூ!
      • யுகப்புரட்சி
      • குடமுருட்டி சங்கரன் கோவிலுக்கு..
      • வண்ணதாசனின் "மழ வில்லுகள்"
      • நான்.
      • என்னைக் கும்பிடு
      • நடு நிசி நடை....
      • கவிதை தந்தான் வைரமுத்து.
      • பரல் நானூறு....6
      • VANNADAASAN KAVITHAI/17.03.26
      • கண்டு கொள்ளமாட்டேன்.
      • ஜெயகாந்தன்.
      • அண்ணல் காந்தி அடிகள்!
      • ....ஒரு மனிதாபிமானக்கவிதையை.
      • comment on RAMESH KANNAN's kavithai in his FB /20....
      • அந்த "அரைமஞ்சள் சூரியனை"
      • அப்பா என்றொரு ஹோலோகிராம்.
      • குன்னக்குடி?
      • பொன்சுடர்த்தமிழே
      • "இதோ ஒரு முடிவு "
      • ஓலைத்துடிப்புகள் (28) பொழிப்புரை
      • MICROSOFT NEWS ..STORY BY MELISSA AIT LOUNIS dated...
      • ஞானபீடமும் அஞ்ஞானக்காடுகளும்
      • பூமியின் கர்ப்பம்.
      • என் மகளுக்கு இன்று பிறந்தநாள்.
      • திரு வண்ணதாசன் அவர்களின் கவிதை 30/03/2026 முகநூல்.

மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்த வலைப்பதிவில் தேடு

இந்த வலைப்பதிவில் தேடு

இந்த வலைப்பதிவில் தேடு

Copy right to Ruthraa E Paramasivan. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.