வியாழன், 12 மார்ச், 2026

என்னைக் கும்பிடு

 

12.03.2026

__________________________________________

Feed posts

Vannadasan Sivasankaran S

பிடித்தவை

 ·

10ம.நே

 ·

உண்மையாக இருந்தான்.

அவனுடைய முதுகில் குத்தினார்கள்.

குப்புற விழாமல் மல்லாந்து விழும்போதும்

அவன் முகத்தில். இயல்பான சிரிப்பு இருந்தது.

மேற்கொண்டு நெஞ்சில் குத்தினார்கள்.

குறுவாளை உருவுகிறவனைப் பார்த்து,  'உன் சட்டைப் பித்தான்களை மாற்றிப் போட்டிருக்கிறாய் ' என்றான்.

அவன் வாயில் மிதித்தவனின் குதிங்காலில்

பித்தவெடிப்பு இருந்தது என்பதே அவனுடைய கடைசிக் காட்சியாக இருந்தது.

உங்களுக்குத் தெரிந்திருக்கக்கூடியவர்கள்

__________________________________________________________________


வண்ணதாசன் அவர்களே...


ஒரு கன்னத்தை அடித்தால்

மறு கன்னத்தையும் திருப்பிக்காட்டு.

என்ற வரிகளை

மேலும் மேலும் தோலுரித்துக்

காட்டியிருக்கிறீர்கள்.

பிய்த்து பிய்த்து சதை கிழிகிற மாதிரி

காட்டியிருக்கிறீர்கள்.

இறைவன்களும் சைத்தான்களும்

இப்படி

தத்ரூபம் காட்டிய போது

இன்னும் எந்த வல்லமை மிக்கவ‌னை

வரவேற்றுக்காத்துக்கிடக்கவேண்டும்?

பாவங்களுக்கு தண்டனை கொடுக்க‌

எண்ணெய்க்கொப்பறைகள் காத்திருக்கின்றன

என்ற புராணங்கள் தான் கொப்பளங்களாகிக்

கிடக்கின்றன.

தேவ வசனங்களும் ஒலித்துக்கொண்டே

இருக்கின்றன.

மனிதம் இன்னும்

அன்பின் நிர்வாண தரிசனத்தை 

பெறவே இல்லை.

மிரட்டி மிரட்டி

என்னைக் கும்பிடு

இல்லாவிட்டால் இதுவே தான் 

உனக்கு எப்போதும்

என்று 

காட்டுவதற்கு மட்டுமே

காட்சி தருவது தான் கடவுள்களா?

_____________________________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக