வியாழன், 17 செப்டம்பர், 2020

அத்வைதம்

 அத்வைதம்

============================ருத்ரா


இயற்பியல் ஒரு முனை கூட்டி நிற்கிறது.

அதுவே கிராண்ட் யூனிஃபிகேஷன்.

ஆற்றல் துகள் இரண்டும் தான்

இப்போது பிரிந்து நிற்கின்றன.

அடிப்படை ஆற்றல்களும்

ஒரே நிலையில் வந்து விட்டன.

ஈர்ப்பு ஆற்றல் மட்டுமே

பிரபஞ்சங்களையெல்லாம் தாண்டி

நிற்கிறது.

ஆற்றல் துகள் இரண்டும்

நிறை என்பதன் புள்ளியில் 

ஒன்றிழைந்து விட்டது.

இது பேரொழுங்கியம் எனும் 

கிராண்ட் சிம்மெட்ரி ஆகும்.

இது தானே உடைபடும்போது தான்

எலக்ட்ரான் ப்ரோட்டான் நியூட்ரான்

மற்றும்

ஃபோடான் போசான் குழுவான் கிராவிடான்

என்று பிரிவுகளுக்குட்படுகிறது.

பெருவெடிப்பின் போதே

ஹிக்ஸ் புலம் ஒன்று ஊடுருவி விட்டது.

அதுவே ஆற்றல் நிறை என்று

ஒன்றாய் இழைய வைத்து 

நெசவு செய்தது.

கோட்பாட்டு உருவில் இருக்கும் போது

அந்த "ஹிக்ஸினாலேயே"அது

கடவுள் துகள் என்ற‌

கிண்டலடிக்கப்பட்டது.

2013ல் லார்ஜ் ஹெட்ரான் கொல்லைடர்

எனும் மனித சக்தியின் அந்த‌

அணு உலைக்குள் 

ஹிக்ஸ் துகளாக அது சமைக்கப்பட்டுவிட்டது.

அதற்காக‌

"ஹிக்ஸ்"க்கு அந்த ஆண்டு 

நோபல் பரிசு வழங்கப்பட்டு விட்டது.

பாருங்கள்

அந்த "கடவுள் துகளுக்கு"

மனிதன் கட்டிய விஞ்ஞானக்கோயிலை.

அணு உலைக்கூடம்

மனிதனின் அறிவு உலைக்கூடம்!


ஆனால்

கடவுள் தத்துவம் 

வெறும் பிதற்றல் ஜன்னியில்

உச்சிக்கு சென்று விட்டது.

உயிர் எனும் ஜீவாத்மா

பிண்டம் எனும் பரம்பொருள்

அல்லது பரமாத்மா

எல்லாம் ஒன்றிழைந்து விட்டதாம்

அத்வைதம் என்று.

அப்படி 

எல்லாம் திறந்த வெளியான பின்

ஏன் இன்னும்

அந்த மூடுமந்திரங்கள் எனும்

நான்கு மறை(ப்பு)கள்?

அந்த மறைப்புகள்

ஞானத்தால் கிழிந்து கந்தலான பின்

எதற்கு நான்கு வர்ண புகை மூட்டங்கள்?

எதைச்சொன்னாலும் 

உடனே புண்பட்டு போகும்

உங்கள் மன வக்கிரங்கள்

என்றைக்கு நேர்படுகிறதோ

அப்போது தான்

உங்கள் அத்வைதம்

அர்த்தம் கொண்டு நிற்கும்.

பின் எதற்காக இன்னும் அந்த‌

அனர்த்தங்கள்?

========================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக