மெய்க்கு பொய் அழகு
=============================================ருத்ரா
ஏன் பயப்படுகிறாய்
பொய் சொல்வதற்கு?
அதை விட உண்மைகள்
சொல்வதற்குத் தான்
நீ அதிகமாக பயம் கொள்ள வேண்டும்.
கடவுள் இருக்கிறார் என்று
சொல்வதற்கு என்ன பயம்?
அதைக்கண்டு அல்லது கேட்டு
"சேமே" என்று இருப்பவர் கடவுள்.
நீ சொல்லிவிட்டாயே என்று உன் முன்
விஸ்வரூபம் காட்டவெல்லாம்
அவருக்கு விருப்ப மில்லை.
கொஞ்சம் அசட்டுத்துணிச்சலுடன்
கடவுள் இல்லை என்று
சொல்லிப்பார்
உண்மையை சொல்லி விட்டாயே என்று
வெகுண்டெழுந்து
பிணமாய் கிடக்கின்ற கல்லைக்கூட
பிளந்து கொண்டு வந்து
உன் குடல் கிழிப்பார்.
கடவுள் இல்லை எனும்
உண்மையிலும் உண்மையான
அந்த உண்மையை
கேவலம் இந்த மனிதப்பதர்
எப்படி
இப்படிப்போட்டு உடைக்கலாம்?
என்ற சீற்றம் தான் அது.
சத்யமேவ ஜயதே என்று
கம்பீரமாய் சொன்னாலும்
கடவுள் இல்லை என்ற
சத்யமே அது.
அது சரி
அந்த பொய் சொல்லுவதற்கு
இத்தனை அழகான
நீள நீளமான சுலோகங்களா வேண்டும்?
மெய்க்கு பொய் அழகு.
பொய்க்கு மெய் அழகு.
ராம"சாமியும்" "ராமசாமி நாயக்கரும்"
இப்படி
ஒருவருக்கொருவர்
அழகோ அழகு தான்.
====================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக