ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

குறும்பாக்கள் ( ஏடு...6 )



தேர்தலுக்கு  ரோடுகள் தயார் 

கொரோனா அச்சத்தின் தார்ப்பிழம்பில்.


முக கவசத்துக்குள் பிரச்சாரம்.

____________________________________________ 1


கொரானாவுக்கும் மும்மொழி தான்.

அச்சமும் தொற்றும் இரண்டு மொழிகள்.

சாவே மூன்றாம் மொழி.


மும்மொழித் திட்டம்.

__________________________________________ 2


பறவைகள் பிதுங்கி வழிந்தன‌.

சூரியன் கூட ஆரஞ்சுப்பழக் கூழாய்

வீட்டின் மொசைக்கில் வழுக்கியது.


கிரில் சாளரம்.

_____________________________________ 3

23.08.20

____________________________


24.08.20 to 26.08.20



 

பட்டன் தட்டினோம்.

அதற்காக பார்லிமெண்ட் 

தூண்கள்  எல்லாம்  மசோதாக்களா?


ஜனநாயகம்.

_____________________________ருத்ரா



இனி சமூக இடைவெளி

விட்டு தான் தேர்தல்.

இரு பத்தாண்டு இடைவெளியில்!


கொரோனா எனும் தேர்தல் ஆணையம்.

_______________________________ருத்ரா


மிதித்து மிதித்துப் பார்க்கிறேன்.

நசுங்கவே இல்லை.


நிழல்

______________________ருத்ரா.


எப்போ வச்சுக்கலாம்?

இவரைக்கேள் என்றது கிளி.

படத்தில் இருந்தது கொரோனா.


தேர்தல்

_____________________________ருத்ரா





கருத்துகள் இல்லை: