செவ்வாய், 1 செப்டம்பர், 2020

என்றும் வளர்க‌ நம் எல் ஐ சி!


LIC Building
LIC building.jpg

என்றும் வளர்க‌ நம் எல் ஐ சி!

___________________________________________________________________

இ பரமசிவன் ஏ ஏ ஓ (ஓய்வு)




அன்பான‌

எங்கள் எல் ஐ சி கட்டிடமே!

வெறும் சிமென்ட் கட்டுமானமா நீ?

நம் சோசலிச நிகழ்வின்

வரலாற்றுச் சின்னமாய் இன்னும்

நின்று காட்டி

வென்று காட்டி

புன்னகை காட்டும் நம்

ஒற்றை மைல் கல் அல்லவா நீ!

உன் அந்த உயரமும்

பெருமிதமும்

மக்கள் சேவையின் சிகரம்.

இமயங்கள் கூட இதன் முன்

கூழாங்கற்களே!

மனிதன் 

இறப்பு எனும் 

தன்னைத்தொடர்ந்த நிழலுக்கு

அஞ்சி அஞ்சி "செத்த போது"

அந்த தருணங்களை

நம்பிக்கையின் பாதுகாப்பின்

வெண் கொற்றக்குடையாக்கி

ஆட்சி செய்தாய்! 

ஆட்சி செய்து கொண்டிருக்கிறாய்!

ஆட்சி செய்து கொண்டிருப்பாய்!

மக்களை போர்த்திக்கொண்டிருக்கும்

எல் ஐ சி எனும்

அந்த மெல்லிய கவசம்

குறுக்கிழையும் நெட்டிழையுமாய்

நெய்யப்பட்டிருக்கும் 

நம் பொருளாதார நிதியத்தினாலேயே ஆகும்!

சில தனி நபர் ஆதிக்கங்களுக்கு

இதில் எச்சில் ஊறலாம்.

எச்சரிக்கை! எச்சரிக்கை!

எச்சரிக்கை கொள்ளுங்கள்

பாலிசிதாரர்களே! மக்களே!

இன்னும் நம் அன்பான ஆதரவாளர்களே.

பிரீமியத்தின் ஒற்றைப்பைசாவிலிருந்து

ஆயுள் நிதி என்னும்

பிரம்மாண்ட பிரவாகம் 

பெருக்கெடுத்து ஓடுகிறது.

எங்கள்

சாயாத "பைசா"கோபுரம் நீ

இதில்

மக்கள் நலம் செழிக்கட்டும்.

இந்தியாவின் வறுமைக்கோடு

அழித்தொழிக்கப்படட்டும்.

வாழ்க வாழ்க நம்

ஆருயிர் எல் ஐ சி!

வளர்க! வளர்க!!

என்றும் வளர்க‌

நம் எல் ஐ சி!


====================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக