உலக இதய தினம்!
_______________________________
உலகமே
உன் இதயத்தை தொட்டுப்பார்க்க
முயலாதே!
மிக இலவசமாய் கிடைக்கிறதே
என்று
இவர்கள் எப்போதோ
சூப் வைத்து குடித்துவிட்டார்கள்
___________________________ருத்ரா
சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
உலக இதய தினம்!
_______________________________
உலகமே
உன் இதயத்தை தொட்டுப்பார்க்க
முயலாதே!
மிக இலவசமாய் கிடைக்கிறதே
என்று
இவர்கள் எப்போதோ
சூப் வைத்து குடித்துவிட்டார்கள்
___________________________ருத்ரா
ஈரோடு தமிழன்பன்.
--------------------------------------------
தமிழ்க்கவிதையின்
புயல் வேகமாய்
சொல் பொருது இறங்கும்
மல்லல் பேர் யாறு
நம்
அருமைப்பண்பாளர்
ஈரோடு தமிழன்பன்.
நீடூழி வாழ்கவே!
------------------------------------------ருத்ரா
https://kandupidi.com/editor/
கண்ணீர்க்கடலின் சுநாமி
================================ருத்ரா
எழுந்து வா
இசைக்கடலே
என்றோம்.
ஒரு கண்ணீர்க்கடலின்
சுநாமி அல்லவா
கிளர்ந்து நிற்கிறது.
எங்கள் இதயநிலாவான
எஸ்பிபி அவர்களே!
கோடிக்கணக்கான
இசை ரசிகர்களுக்கு
மீளாத்துயரம் இது.
எத்தனை பாடல்?
எத்தனை மொழிகள்?
அத்தனையும் எங்களுக்கு
உன் இசையில்
தமிழின் அமுதாக இனித்ததே.
உன்னிடம்
புறமுதுகு இட்டு ஒடிய
கோரோனா கூட
இப்போது சொல்கிறது
எழுந்து வந்து ஒரு பாட்டு பாடு
இந்த உலகைவிட்டே
நான் ஓடிவிடுகிறேன் என்று.
அது கூட உன் பாட்டுக்கு ஏங்கி
அழும் மௌனராகம்
எங்களுக்கு கேட்கிறது!
அந்த "கொரோனா" "இடைவெளியில்"
உன் இசைப்பிரபஞ்சம்
குழைந்து நெளிந்து எந்த
கொடிய வியாதிக்கும் மருந்து ஆகிவிடும்
என்று
இப்போது அது புரிந்து கொண்டிருக்கும்.
என்ன பயன்?
உன் இழப்பு
இந்த மக்களின் தவிப்புக்கடலாய்
அலை வீசுகிறது.
இப்போது உன்
நுங்கம்பாக்கத்துக்கும்
தாமரைப்பாக்கத்துக்கும்
இடையே
புகழ் வீச்சின்
கோடிக்கணக்கான ஒளியாண்டு தூர
இசைக்கதிர்களின்
கல்பாக்கம் உன் அன்பு மிகு
கோடம்பாக்கம் தானே!
உன் இனிய பாடல்கள்
தீயினால் எரிக்கப்படமுடியாது.
மண்ணால் புதைக்கப்பட முடியாது.
மழை கூட சில நாளில் தேனாகலாம்
மணல் கூட சில நாளில் பொன்னாகலாம்
என்று
அந்த கவிஞன் எழுதினான்.
மண் கூட இசையாகி
மரம் ஆகலாம் பூ ஆகலாம்
என்று இன்று எழுதுவான்
அந்தக்கவிஞன்.
அந்த மண்ணுக்கு அடியில்
உன் இசை மகரந்தங்கள்
சங்கீதத்தின் ஒரு ஆரண்ய காண்டத்தை
பதியம் இடும்.
இசைப்பேரரசே!
இந்த இயற்கை கூட
உனக்கு கவரி வீசும்
தன் செவிகளால்.
வாழ்க! உன் இசை!
======================================
கடவுள் கேட்டார்
========================================ருத்ரா
என்னைப்பற்றி
என்ன தெரியும் உனக்கு?
கடவுள் கேட்டார்
ஒரு நாள்.
ஏன் தெரியாது?
பிரபஞ்சம் எனும்
கருப்பையின் கரு நீ.
ஐந்து பூதம் என்று சொல்லி
ஐந்தாயிரம் பூதங்களை
சுருட்டி வைத்துக்கொண்டு
கையை விரித்து பூ என்று ஊதுவாய்.
கையில் பூஜ்யமாக நீ.
விஞ்ஞானிகளிடையே
ஹிக்ஸ் போஸான் என்பாய்.
அயோத்திக்காரர்களின்
அனுமார் வாலில் தீயைப் பற்ற
வைத்துக்கொண்டு...
போதும் போதும்
திகட்டி விட்டது போலும்
கடவுளுக்கு.
அது சரி
உன்னோடு இருக்கும்
சகமனிதனை நீ
எப்போதாவது நினைத்தது உண்டா?
அவன் ஆரம்பித்து விட்டான்.
ஆமாம்.
அடையாளம் தெரிய
வர்ணம் பூசி வைத்திருக்கிறோம்.
இதில் ஏதேனும் தவறு என்றால்
அப்புறம்
எங்கள் கடப்பாரை தான் பேசும்.
அப்புறம் என்ன?
கடவுள் அங்கே
தவிடு பொடியாய்
நொறுங்கிக்கிடந்தார்.
===============================================
கொந்தளிப்பு
=================================ருத்ரா
அடர்ந்த மரநிழலில் செல்லும்போது
உன் கூந்தலைக் கோதியதாய்
உணர்கிறேன்.
பளிங்கு நீரோடையில்
கால்கள் அளைந்த போது
நடப்பது நீயாகவும்
ஓடை நானாகவுமாக
உள்ளம் சிலிர்க்கிறேன்.
பட்டாம்பூச்சிகளின்
பண்ணையில்
உன் இமைச்சிறகுகளின்
இனிய கூடாரத்துள்
நுழைந்த கனவுகளின்
மயக்கம்
என்னைத்துவள வைத்தது.
அன்று
திடீரென்று உன் கடிதம்.
ஆனால் அதில்
கடைசியில்
உன் கையெழுத்து மட்டுமே
இருந்தது.
பின் குறிப்பு சொன்னது.
அது என் இசிஜி மட்டுமே.
இதயத்துடிப்பினைக்கேட்க
நேரில் வா.
இப்போது என் இதயம்
இருந்த இடத்தில்
ஏழு கடலின் கொந்தளிப்பு.
===========================================
கண்ணீர்க்கடலின் சுநாமி
===========================================ருத்ரா
எழுந்து வா
இசைக்கடலே
என்றோம்.
ஒரு கண்ணீர்க்கடலின்
சுநாமி அல்லவா
கிளர்ந்து நிற்கிறது.
எங்கள் இதயநிலாவான
எஸ்பிபி அவர்களே!
கோடிக்கணக்கான
இசை ரசிகர்களுக்கு
மீளாத்துயரம் இது.
எத்தனை பாடல்?
எத்தனை மொழிகள்?
அத்தனையும் எங்களுக்கு
உன் இசையில்
தமிழின் அமுதாக இனித்ததே.
உன்னிடம்
புறமுதுகு இட்டு ஒடிய
கோரோனா கூட
இப்போது சொல்கிறது
எழுந்து வந்து ஒரு பாட்டு பாடு
இந்த உலகைவிட்டே
நான் ஓடிவிடுகிறேன் என்று.
அது கூட உன் பாட்டுக்கு ஏங்கி
அழும் மௌனராகம்
எங்களுக்கு கேட்கிறது!
அந்த "கொரோனா" "இடைவெளியில்"
உன் இசைப்பிரபஞ்சம்
குழைந்து நெளிந்து எந்த
கொடிய வியாதிக்கும் மருந்து ஆகிவிடும்
என்று
இப்போது அது புரிந்து கொண்டிருக்கும்.
என்ன பயன்?
உன் இழப்பு
இந்த மக்களின் தவிப்புக்கடலாய்
அலை வீசுகிறது.
இப்போது உன்
நுங்கம்பாக்கத்துக்கும்
தாமரைப்பாக்கத்துக்கும்
இடையே
புகழ் வீச்சின்
கோடிக்கணக்கான ஒளியாண்டு தூர
இசைக்கதிர்களின்
கல்பாக்கம் உன் அன்பு மிகு
கோடம்பாக்கம் தானே!
உன் இனிய பாடல்கள்
தீயினால் எரிக்கப்படமுடியாது.
மண்ணால் புதைக்கப்பட முடியாது.
மழை கூட சில நாளில் தேனாகலாம்
மணல் கூட சில நாளில் பொன்னாகலாம்
என்று
அந்த கவிஞன் எழுதினான்.
மண் கூட இசையாகி
மரம் ஆகலாம் பூ ஆகலாம்
என்று இன்று எழுதுவான்
அந்தக்கவிஞன்.
அந்த மண்ணுக்கு அடியில்
உன் இசை மகரந்தங்கள்
சங்கீதத்தின் ஒரு ஆரண்ய காண்டத்தை
பதியம் இடும்.
இசைப்பேரரசே!
இந்த இயற்கை கூட
உனக்கு கவரி வீசும்
தன் செவிகளால்.
வாழ்க! உன் இசை!
======================================================
ஓலைத்துடிப்புகள் 39
______________________________________________ருத்ரா
தண்டுளி பேழ்தரு மண்வாய் பூத்து
நெடிய தூம்புடை வேர்விரல் அளைஇ
மரன்பல அடர்ந்து செறிகான் நிறைப்ப
பூவும் புள்ளும் மணிச்சிறைத் தும்பியும்
அஞ்சுரம் ஆக்கி ஆர்கலி படுத்த
கழைவளர் அடுக்கம் கருவி தழைய
நீர்வளத்தோங்கு நீள்மலைக் குடுமிய
குழையுனன் ஆகி கங்குல் ஓட்டும்
கடுங்கதிர்ச் செல்வன் நிழற்கண் விழிப்ப
பாசிலை அடைமரம் நுண்வெளி நுழைந்தாங்கு
நின் வெய்ய பிரிவின் நோன்றல் ஆனா
மடியும் மறந்து துடியும் மறந்து
கல்லென் புல்லென் சேக்கையுள் கிடந்து
வெயில் படு புழுவாய்
அலை உண்டு அலை உமிழ்ந்து
ஆற்றும் கடலாய் உடல் திரிதரும்
என் நோய் தீர்க்க விரைதி விரைதி
வேங்கை மன்ற தலைவ விரைதி.
_________________________________________________
அத்வைதம்
============================ருத்ரா
இயற்பியல் ஒரு முனை கூட்டி நிற்கிறது.
அதுவே கிராண்ட் யூனிஃபிகேஷன்.
ஆற்றல் துகள் இரண்டும் தான்
இப்போது பிரிந்து நிற்கின்றன.
அடிப்படை ஆற்றல்களும்
ஒரே நிலையில் வந்து விட்டன.
ஈர்ப்பு ஆற்றல் மட்டுமே
பிரபஞ்சங்களையெல்லாம் தாண்டி
நிற்கிறது.
ஆற்றல் துகள் இரண்டும்
நிறை என்பதன் புள்ளியில்
ஒன்றிழைந்து விட்டது.
இது பேரொழுங்கியம் எனும்
கிராண்ட் சிம்மெட்ரி ஆகும்.
இது தானே உடைபடும்போது தான்
எலக்ட்ரான் ப்ரோட்டான் நியூட்ரான்
மற்றும்
ஃபோடான் போசான் குழுவான் கிராவிடான்
என்று பிரிவுகளுக்குட்படுகிறது.
பெருவெடிப்பின் போதே
ஹிக்ஸ் புலம் ஒன்று ஊடுருவி விட்டது.
அதுவே ஆற்றல் நிறை என்று
ஒன்றாய் இழைய வைத்து
நெசவு செய்தது.
கோட்பாட்டு உருவில் இருக்கும் போது
அந்த "ஹிக்ஸினாலேயே"அது
கடவுள் துகள் என்ற
கிண்டலடிக்கப்பட்டது.
2013ல் லார்ஜ் ஹெட்ரான் கொல்லைடர்
எனும் மனித சக்தியின் அந்த
அணு உலைக்குள்
ஹிக்ஸ் துகளாக அது சமைக்கப்பட்டுவிட்டது.
அதற்காக
"ஹிக்ஸ்"க்கு அந்த ஆண்டு
நோபல் பரிசு வழங்கப்பட்டு விட்டது.
பாருங்கள்
அந்த "கடவுள் துகளுக்கு"
மனிதன் கட்டிய விஞ்ஞானக்கோயிலை.
அணு உலைக்கூடம்
மனிதனின் அறிவு உலைக்கூடம்!
ஆனால்
கடவுள் தத்துவம்
வெறும் பிதற்றல் ஜன்னியில்
உச்சிக்கு சென்று விட்டது.
உயிர் எனும் ஜீவாத்மா
பிண்டம் எனும் பரம்பொருள்
அல்லது பரமாத்மா
எல்லாம் ஒன்றிழைந்து விட்டதாம்
அத்வைதம் என்று.
அப்படி
எல்லாம் திறந்த வெளியான பின்
ஏன் இன்னும்
அந்த மூடுமந்திரங்கள் எனும்
நான்கு மறை(ப்பு)கள்?
அந்த மறைப்புகள்
ஞானத்தால் கிழிந்து கந்தலான பின்
எதற்கு நான்கு வர்ண புகை மூட்டங்கள்?
எதைச்சொன்னாலும்
உடனே புண்பட்டு போகும்
உங்கள் மன வக்கிரங்கள்
என்றைக்கு நேர்படுகிறதோ
அப்போது தான்
உங்கள் அத்வைதம்
அர்த்தம் கொண்டு நிற்கும்.
பின் எதற்காக இன்னும் அந்த
அனர்த்தங்கள்?
========================
உன் சிரிப்பு
======================================ருத்ரா
உன் சிரிப்பு
ஒரு ஒற்றை ரோஜாப்பூவாய்
அன்றொரு நாள்
என் மடியில் வந்து விழுந்தது.
அது முதல்
நான் இந்த வானம்.
அது முதல்
நான் கடலின் அலைகள்.
அது முதல்
எனக்குள்ளே
தமிழின் ஒலி.
உயிரெழுத்து
மெய்யெழுத்தைக்காட்டியது.
இலக்கணத்துள்
இலக்கியம் புதைக்கப்பட்டிருந்தது
இனிமையாய் நெருடியது.
உன் சிரிப்பின் மகரந்த சேர்க்கைக்கு
எத்தனை கருவண்டுகள்
சிறகுகள் கொண்டு
நிழல் போர்த்தியது.
இதன் நுண்மாண் நுழைபுலம்
மெல்ல கிசு கிசுத்தது
காதல் என்று!
ஆர்வம் மிக
அந்த ரோஜாப்பூவின்
நிறம் தேடினேன்.
அவை சருகளாய் கிடந்தன
ஆனாலும்
அந்த சிரிப்பின் உயிர்ப்புடன்.
அத்தனை யுகங்களா கடந்து போயின?
இப்போதும்
அவை என் ரோஜாவின் "ஃபாசில்கள்"
======================================================
அஞ்சு
___________________________________
கனவு பற்றிய பொறியியல் பட்டம்
இந்த பல்கலைக்கழகம் தந்தது.
பட்டாம்பூச்சி
___________________________ருத்ரா
அதென்ன சிஸ்டாலிக் டையஸ்டாலிக்.
உள்ளே துடிப்பது காதல் தானே?
ஒரு அனாடமி
____________________________ருத்ரா
தற்கொலைக்கு...
காதல் தோல்வி எல்லாம் வேண்டாம்.
இந்த பரீட்சை போதும்.
நீட்
_____________________________ருத்ரா
படிப்பு வரவில்லையா?
"கௌ டெக்னாலஜி" இருக்கிறது.
புதிய கல்விக்கொள்கை
______________________________ருத்ரா
அதெற்கெல்லாம் நேரமில்லை.
மேஜைகள் தட்டினால் போதும்.
மசோதாக்கள்
______________________________ருத்ரா
நாலு
________________________________________
சலூன்காரரை இன்னும் காணோம்.
தாடி அரிக்கிறதே..
அதோ வந்து விட்டார்.
புல்லும் மாடும்
_______________________ருத்ரா
பனியுகத்தில் எழுத உட்கார்ந்தது.
கண்டங்கள் உருகியது தான் மிச்சம்.
ஹைக்கூ
_______________________________ருத்ரா
இரண்டு கெண்டை மீன்களை
பார்த்தேன்.அந்த முகம் எங்கே?
ஒரு தேடல்
________________________________ருத்ரா
தாலியைக் கழற்றினேன்.
எங்கே போட்டேன்?
இந்த வினாமட்டுமே கேள்வித்தாளில்!
நீட்
_______________________________ருத்ரா
மெய்க்கு பொய் அழகு
=============================================ருத்ரா
ஏன் பயப்படுகிறாய்
பொய் சொல்வதற்கு?
அதை விட உண்மைகள்
சொல்வதற்குத் தான்
நீ அதிகமாக பயம் கொள்ள வேண்டும்.
கடவுள் இருக்கிறார் என்று
சொல்வதற்கு என்ன பயம்?
அதைக்கண்டு அல்லது கேட்டு
"சேமே" என்று இருப்பவர் கடவுள்.
நீ சொல்லிவிட்டாயே என்று உன் முன்
விஸ்வரூபம் காட்டவெல்லாம்
அவருக்கு விருப்ப மில்லை.
கொஞ்சம் அசட்டுத்துணிச்சலுடன்
கடவுள் இல்லை என்று
சொல்லிப்பார்
உண்மையை சொல்லி விட்டாயே என்று
வெகுண்டெழுந்து
பிணமாய் கிடக்கின்ற கல்லைக்கூட
பிளந்து கொண்டு வந்து
உன் குடல் கிழிப்பார்.
கடவுள் இல்லை எனும்
உண்மையிலும் உண்மையான
அந்த உண்மையை
கேவலம் இந்த மனிதப்பதர்
எப்படி
இப்படிப்போட்டு உடைக்கலாம்?
என்ற சீற்றம் தான் அது.
சத்யமேவ ஜயதே என்று
கம்பீரமாய் சொன்னாலும்
கடவுள் இல்லை என்ற
சத்யமே அது.
அது சரி
அந்த பொய் சொல்லுவதற்கு
இத்தனை அழகான
நீள நீளமான சுலோகங்களா வேண்டும்?
மெய்க்கு பொய் அழகு.
பொய்க்கு மெய் அழகு.
ராம"சாமியும்" "ராமசாமி நாயக்கரும்"
இப்படி
ஒருவருக்கொருவர்
அழகோ அழகு தான்.
====================================================
மூணு
___________________________
இலைகளின் இடுக்கின் வழியே
வடாம் பிழிந்தது தரையில்.
சூரியன்
____________________________ருத்ரா
ஒரே ஒரு மனிதன் பாக்கி.
மற்றதெல்லாம் பட்டாம்பூச்சிகள்.
புதிய பரிணாமம்.
_____________________________ருத்ரா
பார் எத்தனை அழகு அது?
அது "ஆர்ம்ஸ்"டாங்குகள்" மிதித்த காயம்.
நிலா
______________________________ருத்ரா
குறும்பா நூறு
_________________________________ருத்ரா
(2 ஆம் பத்து)
1
காடுகள் எல்லாம் நட்ட
ஒரே "போன்ஸாய்"
ஹைக்கூ
_________________________________
2
விக்கிரமாதித்தர்களின் வாள்
முறிந்து போனது
இந்த வேதாளத்திடம்.
கொரோனா
_________________________________
3
அம்பது பவுன்.ரெண்டு லட்சம்.
ஏலம் தொடங்கியது.
பெண்பார்க்கும் படலம்
__________________________________
4
செல்கள் குவிந்தன
குரல்களின் மகசூல்
மூட்டை மூட்டையாய்!
வளர்ச்சி
___________________________________
5
ரயில்களையும் தின்பதற்கு
கரையான்கள் ரெடி.
தனியார் மயம்.
___________________________________
6
மாங்கல்யம் தந்துநானே..
தொண்ணூத்தெட்டு வயது ஆகியும்
அர்த்தம் புரியவில்லை.
மந்திரம்
____________________________________
7
அந்த துப்பாக்கியும் கூட
செங்கோல் என்று
விறைத்து நின்றது.
என்கவுண்டர்.
_____________________________________
8
"பிக்காஸோ"க்கள் எல்லாம்
மகரந்தங்களின் பிச்சைக்காரர்கள்.
பட்டாம்பூச்சிகள்.
____________________________________
9
உன் தாஜ்மகால் முடியும் முன்
என் நுரையீரலை தின்றுவிட்டது.
கொரோனா
_____________________________________
10
கடவுள் அறியுமோ
கருங்கல் சுவை?
கோயில்
___________________________________
ருத்ரா
ஒரு விடியல் காட்ட வா!
குறும்பாக்கள்
_________________ருத்ரா
படம் ராமரா?அனுமாரா?
கிளி காட்டினால் தான் தெரியும்.
மசோதாக்கள்
___________________ருத்ரா
காணொளியில் தான் காட்டுவார்கள்
இனி வயிற்றுக்குச் சோறு.
இ_டெமாக்கிரேசி
____________________ருத்ரா
தன் முகம் காட்டும்
நூறு கண்ணாடிகளுடன்.
ஆலோசனைக் கூட்டம்.
_______________ருத்ரா
வெடிவேய் கொள்வது போல ஓடித் தாவுபு உகளும், மாவே; பூவே, விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட; நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய ஐதுஅமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்க் | 5 |
கைவார் நரம்பின் பாணர்க்கு ஒக்கிய, நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்; நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி, வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின், விண்ணிவர் விசும்பின் மீனும், | 10 |
தண்பெயல் உறையும், உறையாற் றாவே. |
புறநானூறு பாடல் 302 ஒரு அருமையான பாடல்.தமிழரின் குதிரை மறம் எனும் குதிரையின் மீது இருந்து போர்புரியும் வலிமையை நன்கு விளக்குகிறார்
"வெடிவேய் "அதாவது தன் கட்டிலிருந்து விடுபடும் அந்த மூங்கில் மரக்கிளையைப்போல சீறிpபாயும் குதிரையை செலுத்தும் வீரத்தை பாடுகிறார் புலவர்.அவர் பாடிய முதல் சொற்கள் என் கற்பனை"குதிரையை" பாயச்செய்ததன் வெளிப்பாடே"ஊழி எழுதிய கல்வெட்டு" என்னும் எனது இந்த சங்கச்செய்யுள்.
அன்புடன் ருத்ரா
=================================================
தேர்தலுக்கு ரோடுகள் தயார்
கொரோனா அச்சத்தின் தார்ப்பிழம்பில்.
முக கவசத்துக்குள் பிரச்சாரம்.
____________________________________________ 1
கொரானாவுக்கும் மும்மொழி தான்.
அச்சமும் தொற்றும் இரண்டு மொழிகள்.
சாவே மூன்றாம் மொழி.
மும்மொழித் திட்டம்.
__________________________________________ 2
பறவைகள் பிதுங்கி வழிந்தன.
சூரியன் கூட ஆரஞ்சுப்பழக் கூழாய்
வீட்டின் மொசைக்கில் வழுக்கியது.
கிரில் சாளரம்.
_____________________________________ 3
23.08.20
____________________________
24.08.20 to 26.08.20
பட்டன் தட்டினோம்.
அதற்காக பார்லிமெண்ட்
தூண்கள் எல்லாம் மசோதாக்களா?
ஜனநாயகம்.
_____________________________ருத்ரா
இனி சமூக இடைவெளி
விட்டு தான் தேர்தல்.
இரு பத்தாண்டு இடைவெளியில்!
கொரோனா எனும் தேர்தல் ஆணையம்.
_______________________________ருத்ரா
மிதித்து மிதித்துப் பார்க்கிறேன்.
நசுங்கவே இல்லை.
நிழல்
______________________ருத்ரா.
எப்போ வச்சுக்கலாம்?
இவரைக்கேள் என்றது கிளி.
படத்தில் இருந்தது கொரோனா.
தேர்தல்
_____________________________ருத்ரா
ஹைக்கூவின் பல்லையே
பிடித்துப் பார்ப்பது
லாவாவில் பல் தேய்ப்பது.
"ஹை" குக்கூ
_________________ருத்ரா
மூன்று
_______________________________________ருத்ரா
சோறு என்பதை ராம ஜெயமாய்
பத்தாயிரம் தடவை எழுதுங்கள்.
புதிய பொருளாதாரம்.
____________________________ருத்ரா
எந்த மரத்தை அறுத்தார்கள்?
இப்படி அழுகிறது.
வீணை.
_______________________________ருத்ரா
சுவர்களுக்கு சாதிகளைப்பூசினார்கள்.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் அழியாதாமே!
நான்கு வர்ணம்
_________________________________ருத்ரா
ஐந்து
_______________________ருத்ரா
1
கார் மிதந்து ஓடுகிறது.
தண்ணீரே பெட்ரோல் ஆச்சு.
வெள்ளம்.
_______________________ருத்ரா
2
உடைந்த வளையல்களிலும்
கலைடோஸ்கோப்!
நம்பிக்கை
_________________________ருத்ரா
3
ஊதுபத்தி முணு முணுத்து
கேட்கிறது?
கடவுள் எங்கே?
______________________ருத்ரா
4
பாட்டியும் இல்லை
வடையும் இல்லை காக்காவுக்கு.
கொரோனா
________________________ருத்ரா
5
பகலில் கூட
அமாவாசை இருட்டு.
கனவு
____________________ருத்ரா
மூணு
________
நான் கட்டிய சிந்துவெளி நகரங்கள்.
"கொட்டி" சொல்லியும் புரியவில்லை நீ.
தேன் கூடு.
________________________________ருத்ரா
ஒரே மண்ணின் பொம்மைகள்.
ராம ராவண அனுமார்கள்.
கொலு.
____________________________ருத்ரா
மழை பெய்தது.
நகரமே தலைகீழாய் கிடக்கிறது.
தேங்கிய நீரின் நிழல்
___________________________ருத்ரா
ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்
=========================================ருத்ரா
ஆசிரியர்கள் முன்னே
மாணவர்கள் பின்னே
அது அந்தக்காலம்
மாணவர்கள் முன்னே
ஆசிரியர்கள் பின்னே
இது இந்தக் காலம்.
சிலபஸ் எக்ஸாம்
என்று ஆசிரியர்கள்
திட்டம் இடும்போது
மாணவர்கள் "செல்களில்"
ஏதோ ஒரு சுவர் ஏறிக்குதித்து
இன்னொரு உலகில்
பயணம் போகிறார்கள்.
இவர்கள் வருங்காலம்
ஏதோ ஒரு சோப்புக்குமிழி என்றாலும்
அந்த சோப்பு
அவள் போட்டுக்குளிப்பதல்லவா
என்று புதிய அகநானூற்றின்
இன்னும் ஒரு புதிய மணிமிடைப்பவளத்தில்
விழுந்து கிடக்கிறான் மாணவன்.
உடம்பெல்லாமே நாக்குகள் ஆகி
ஜிலேபி அண்டாவுக்குள்
விழுந்து கிடப்பது போல்.
இது பரம்பொருளின் பரமானந்தத்துக்கு
பரமஹம்சர் சொன்ன உவமை.
இன்பத்தில் பெரிது ஏது? சிறிது ஏது?
மாணவர்களின் மனங்கள்
எனும் வகுப்புக்குள்
ஆசிரியர்களுக்கு முதலில்
அட்மிஷன் கிடைக்கவேண்டும்.
அதன் பிறகு தான்
இவர் வகுப்புக்குள்
இவர் உலா வர முடியும்.
முட்டி போடச்சொல்லி
பிரம்புகளை உருட்டி
மாணவர்களுக்கு இஸ்திரி போட்டால்
மடிப்புக் கலையாத
மனப்பாட உருத்தட்டல்களின்
சாதனையாக சில கிரீடங்கள் கிடைக்கலாம்.
சிறந்த சமூக விஞ்ஞான சிந்தனைகளின்
சிறகுகள் விரிக்கும்
வேடந்தாங்கலாக
மாணவர்களின் கூட்டத்தை
ஆசிரியர் மாற்ற நினைத்தால்
அவரும் மாணவர்களோடு மாணவராய்
"வேடந்தாங்கல்" வேண்டும்.
அவரது அறிவின் ஆறும்
நிற்காத ஓட்டத்தில்
இயங்கிக்கொண்டேஇருக்க வேண்டும்.
அப்போது தான் மாணவர்கள்
சிதறும் திசையில்
சினிமா இருட்டுக்குள் தேங்க மாட்டார்கள்.
மாணவர்கள் மாணவர்களுக்காக படிக்கவேண்டும்.
ஆசிரியர்கள் மாணவர்களுக்காக படிக்கவேண்டும்.
அது வகுப்பறையா? நூலகமா?
இரண்டின் பயிலகமே அது.
இது ஒரு எதிர் நீச்சல்.
இதிலும் கரை கடந்து
அறிவின் கடல் பலக்கடந்து
மாணவர்களை அற்புதமான
பொன் விளிம்பின் விடியல் காட்டும்
ஒளிர் முனைக்கு இட்டுச்செல்லும்
ஆசிரியர்கள் எத்தனை எத்தனை பேர்
வெற்றி முகம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களை
வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
தலை வணங்கி!
=========================================================
பேட்டி
====================================ருத்ரா
இப்படிப் பாத்தா இரு மொழிக்கொள்கை.
அப்படிப்பாத்தா மும்மொழிக்கொள்கை.
என்னது புரியலீங்களே?
நடப்புக்கணக்கு ஒன்று இரண்டு ...
என்று சொல்வது.
கணிதக்கணக்கு பூஜ்யம் ஒன்று இரண்டு..,
என்று சொல்வது.
அப்படின்னா இரு மொழி.
இப்படின்னா மும்மொழி.
அப்படின்னா
தேசிய வரிசையில்
முதலில் வருவது இந்தி.
அடுத்து வருவது
மாநிலத்தின் தாய்மொழி..தமிழ்.
அதற்கு அடுத்தது
உலக மற்றும் இந்திய
பரிமாற்ற மொழி....ஆங்கிலம்.
அப்போ இந்தி..
அதான் பூஜ்யம் என்று ஆரம்பித்து விட்டதே
பூஜ்யம்னா..புரியலீங்களே
இந்தி படிக்கணுமா? வேண்டாமா?
படிக்கணும் ...ஆனா படிக்க வேண்டாம்..
எல்லாம் நம் மேதை "வடிவேலு" தலைமையில்
ஆராய்ச்சி செய்து எடுத்த முடிவு!
செய்தியாளர்களுடன் பேட்டி முடிந்தது.
====================================================
இது முழுக்க முழுக்க ஒரு கற்பனைப்பேட்டி.
கத்தி.
கொலை.
படப்பிடிப்பு.
________________ருத்ரா
மைக்குகள்.
ஊமை.
கேள்வி நேரம்
___________________ருத்ரா
அரசியல் சாசனம் இனி
தலைகுப்புற.
உபயம்.
கொரோனா
_________________ருத்ரா
நிரந்தரமாய் இனி இங்கே
அரசியலமைப்பின் சிரசாசனம்.
யோகா நம் பாரம்பரியம்.
____________________________ருத்ரா
தேர்தல் ஆனை
__________________________ருத்ரா
இனி ஆனை மாலை போட்டால் போதும்.
நாட்டை ஆள
தேர்தல் "ஆனையம்"
____________________________ருத்ரா
கணினி ஆனைக்குள்
ப்ரோக்ராம் செய்யப்பட்டு
மாலை அவருக்கே விழும்.
நவீன பாரதம்.
_______________________ருத்ரா
முன்னூத்தைம்பது பேர்கள்
உயர்த்திய கைகளுடன் எப்போதும்!
எதற்கு இனி பார்லிமெண்ட்?
ஆன்லைன் "நாயகம்"
______________________________ருத்ரா
எந்தக்கோரோனா ராமன்?
எந்தக்கோரோனா ராவணன் ?
வதம் ஆவது மக்களே !
கொரோனாயணம்.
---------------------------------------------------ருத்ரா
ஆறு குறும்பாக்கள்
____________________________ருத்ரா
ஒளியின் கண்ணாமூச்சி இல்லை
இந்த கொரானா இருட்டுக்குள்.
சினிமா
__________________________________ருத்ரா
இறந்து போன பொருளாதாரத்தின்
தகனக்கூடங்கள்.
தொழிற்சாலைகள்
__________________________ருத்ரா
வெறும் பட்டுச்சேலைகளும்
நகைகளும் தானா வாழ்க்கை?
சின்னத்திரைகள்
___________________________ருத்ரா
கோவில்களின் பூட்டுகள் திறந்தாலும்
கடவுளை திறக்க சாவிகள் இல்லை.
ஊரடங்கு ரத்து
____________________________ருத்ரா
மேஜை தட்டல்கள் மட்டுமே
இனி வீர உரையாற்றும்.
குளிர்காலத்தொடர்.
___________________________ருத்ரா
உண்டியல்களுக்கும்
அகோரப்பசி.
கோவில்களில் ஊரடங்கு
____________________________ருத்ரா
சிதறல்
___________________________ருத்ரா
தினம் தினம்
சூரியன் எனும் செர்ரிப்பழம்
இதோ இதோ
என்று காட்டி மறைந்து கொள்கிறது.
என்ன ஏமாற்று வித்தை இது?
உன் விடியல் மகரந்தங்கள்
ஏன் இன்னும் சிதறவில்லை.
இந்த மலட்டுப்பூக்கள்
காய்க்க வில்லையே!
கனிய வில்லையே!
கடவுள் எனும் முகமூடிகள்
கானல் நீர்த்திடலில்
கைலாசங்கள் காட்டுகின்றன.
பர மண்டலத்தின் குரல்கள்
என்று
வண்டு ரீங்காரங்களை
உமிழ்ந்து கொண்டிருக்கின்றன.
வேதங்கள் என்று
மனிதர்களின் தொண்டைக்குழியிலிருந்து
தவளைகள் கத்திக்கொண்டே
இருக்கின்றன.
மனிதனுக்கு மனிதன்
இடையே உள்ள தோழமை
புரிந்து கொள்ளப்படவே இல்லை.
அருவருப்பான உயர்வு தாழ்வுகளின்
கோரைப்பற்கள்
ரத்தம் ஒழுக அச்சம் காட்டிக்கொண்டே
இருக்கின்றன.
எங்கள் இதய விளிம்புகளின்
அடிவானத்தில்
ஓ எங்கள் அன்பான விடியலே!
இன்னும் பூச்சட்டிகளின்
சிதறல்களாய்த்தான் சிரிக்கிறாய்.
போலி மனிதர்களின் தோல் உரிக்கும்
அறிவுக்கிளர்ச்சிகளை
என்றைக்கு உன் கிழக்கு
முகம் காட்டி அகம் காட்டும்?
ஒரு நாள் அந்த பிரம்மாண்ட
லண்டன் நூலகத்தில்
ஒரு விடியலின்
மின்காந்தப்பாய்ச்சலை
மார்க்ஸ் என்ற மாபெரும் சூரியன்
தீக்குச்சி கிழித்தானே.
அந்த சிந்தனை
ஓ மனிதர்களே
இன்னுமா உங்கள் இருட்டு மூலைகளுக்கு
வெளிச்சம் பாய்ச்சவில்லை.
போதும்.
இந்த பொய் மண்டலப்
புழுக்கூடுகளை
கிழித்துக்கொண்டு
அறிவுச்சிறகை
அகல அகல விரியுங்கள்.
உங்கள் துன்பங்கள்
அகல
அதுவே ஒரு அகல்வானம்!
==================================================
A BOON OR BURN ?
_______________________
IS THE PANDEMIC
A BOON OR BURN?
BUT A GARB
TO BURY
ALL THE PEOPLES' VOICES.
NOT ONLY LOCK-IN
IS A CARD TO PLAY
BUT IT THROTTLES A LOCK OUT
FOR THAT HOLY "VOX POPULI".
THE COFFINS ARE NOT ONLY
FULL OF VIRUS EATEN BODIES
BUT WITH VIRTUAL CORPSE OF
ALL THE FRANCHISE OF
THIS SOIL WHERE ALL THE WAY
IT WAS FOUNDED WITH A
VOTING MIGHT
EVERY NOW AND THEN IS
SOILED AND SPOILED ALAS!
__________________________RUTHRAA
=========================================ருத்ரா
மஞ்சள் பூசிய மங்கையாக
ஒரு நாணத்தின் பொந்துக்குள்
பதுங்கிக்கொண்டாயே?
எங்கே யிருந்து இந்த மஞ்சள் ஒளியை
உன் மீது பூசிக்கொண்டாய்?
சூரியன் அவிழ்த்துப்போட்டு
உலர வைத்த ஆடையை
உன் முகத்திரை ஆக்கிக்கொண்டாயோ!
சூரியனுக்கு ஏது நிர்வாணம்?
இந்த ஆயிரம் கண் இலை இடுக்குகளில்
உன் நிர்வாணம் கூட
தூறல் மழைபோல் ஒரு
ஊசி மழை பெய்கிறதே!
என்ன அற்புதக்காட்சி இது.
"என்னது நான் நிர்வாணமாகத்தெரிகிறேனா?"
திடுக்கிட்டு
அவள் வெளியேறினாள்.
அவள் ஒளியின்
முழு உடையைப் போர்த்துக்கொண்டு தான்
நின்றாள்.
இயற்கை ஓவியமே!
உனக்கு கிச்சு கிச்சு மூட்டும்
தூரிகைகள் இங்கு ஏதும் இல்லை.
ஒரு நிர்வாணத்தைக்கொண்டு
ஒரு நிர்வாணம்
ஒரு நிர்வாணம் என்று
தலைப்பிட்டு
ஓவியம் தீட்டிய போதும்
இருட்டு எனும்
அழகிய கவிதையே
உன் மரக்கிளையின் அக்குள் களில்
மரகத துளிர்ப்புகளை
கசிய விட்டுக்கொண்டிருக்கிறது.
காட்சி எனும் போதை
கண்களின் கண்ணாடி விழிகளில்
நொதி நிலை அடைவதில்லை.
அகக்கொதிப்புகளின்
செங்குமிழிகள்
ஒரு ஏக்கம் பாய்ச்சி நின்று
மில்லியன் மில்லியன் ஒளியாண்டு நீள
நாக்கினால்
ருசி பார்த்துக்கொண்டு நிற்கிறது.
தூரத்து நட்சத்திரங்கள்
அசையாமல் அசைந்து
துகிலுரி நடனங்களை
சிலுப்பிக்கொண்டிருக்கின்றன.
அதில் கூர்மையான ஒரு கடும் வெப்பமான
தாகம்
என் தொண்டையை வறளச்செய்யும் அளவுக்கு
தகிக்கிறது.
இந்த தாகமே
எல்லா உயிர்களுக்கும் உயிர்களாய்
உள்ளிருந்து உந்துகிறது.
அதன் முட்டல் முனைகளின்
உறுத்தல்களை உணர்கிறீர்களா?
உணரும்போது உணருங்கள்.
அது வரை
இந்த இடைவேளை
பல யுகங்களின் திவலைகளை
உங்கள் மீது
தெறித்துக்கொண்டிருக்கட்டும்.
======================================================
LIC Building | |
---|---|
என்றும் வளர்க நம் எல் ஐ சி!
___________________________________________________________________
இ பரமசிவன் ஏ ஏ ஓ (ஓய்வு)
அன்பான
எங்கள் எல் ஐ சி கட்டிடமே!
வெறும் சிமென்ட் கட்டுமானமா நீ?
நம் சோசலிச நிகழ்வின்
வரலாற்றுச் சின்னமாய் இன்னும்
நின்று காட்டி
வென்று காட்டி
புன்னகை காட்டும் நம்
ஒற்றை மைல் கல் அல்லவா நீ!
உன் அந்த உயரமும்
பெருமிதமும்
மக்கள் சேவையின் சிகரம்.
இமயங்கள் கூட இதன் முன்
கூழாங்கற்களே!
மனிதன்
இறப்பு எனும்
தன்னைத்தொடர்ந்த நிழலுக்கு
அஞ்சி அஞ்சி "செத்த போது"
அந்த தருணங்களை
நம்பிக்கையின் பாதுகாப்பின்
வெண் கொற்றக்குடையாக்கி
ஆட்சி செய்தாய்!
ஆட்சி செய்து கொண்டிருக்கிறாய்!
ஆட்சி செய்து கொண்டிருப்பாய்!
மக்களை போர்த்திக்கொண்டிருக்கும்
எல் ஐ சி எனும்
அந்த மெல்லிய கவசம்
குறுக்கிழையும் நெட்டிழையுமாய்
நெய்யப்பட்டிருக்கும்
நம் பொருளாதார நிதியத்தினாலேயே ஆகும்!
சில தனி நபர் ஆதிக்கங்களுக்கு
இதில் எச்சில் ஊறலாம்.
எச்சரிக்கை! எச்சரிக்கை!
எச்சரிக்கை கொள்ளுங்கள்
பாலிசிதாரர்களே! மக்களே!
இன்னும் நம் அன்பான ஆதரவாளர்களே.
பிரீமியத்தின் ஒற்றைப்பைசாவிலிருந்து
ஆயுள் நிதி என்னும்
பிரம்மாண்ட பிரவாகம்
பெருக்கெடுத்து ஓடுகிறது.
எங்கள்
சாயாத "பைசா"கோபுரம் நீ
இதில்
மக்கள் நலம் செழிக்கட்டும்.
இந்தியாவின் வறுமைக்கோடு
அழித்தொழிக்கப்படட்டும்.
வாழ்க வாழ்க நம்
ஆருயிர் எல் ஐ சி!
வளர்க! வளர்க!!
என்றும் வளர்க
நம் எல் ஐ சி!
====================================