வியாழன், 31 ஆகஸ்ட், 2017

உள்ளே வெளியே

உள்ளே வெளியே
===================================ருத்ரா

தமிழ் நாட்டில்
உள்ளே வெளியே
ஆட்சி விளையாட்டு
நன்றாயிருக்கிறது.
அருமையான ரெஃப்ரி
கவர்னர் கிடைத்திருக்கிறார்.
ஒரே கட்சியின்
ரெண்டு முதலமைச்சர்கள்
உள்ளே
ஒரு முதலமைச்சர்
வெளியே!
வாக்காளர்கள்
தேர்தல் நடத்தும்
கணிப்பொறி எனும்
எலிப்பொறிக்குள்
எப்போதுமே!

==================================

1 கருத்து:

Unknown சொன்னது…

ஒரே ஒரு வாக்களித்து இன்னும் எத்தனை முதல்வர்களைப் பார்க்கப்போகிறது தமிழகம்?

கருத்துரையிடுக