படேல் பார்த்துக்கொண்டிருக்கிறார்
_________________________________________
ருத்ராவின் கவிதைகள்
கொரோனா போட்டது
நாட்டை துண்டு துண்டாய்.
படேல் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
________________________________
கண்ணாடியில் உன்
கல்லறை
மது
_________________
இது என்ன மொழி?
ஹீப்ருவா? லத்தீனா?
பசி
________________
ஜனவரி பெப்ருவரி
அப்புறம் பெட்டியில் டெலிவரி.
கொரோனா கேலண்டர்.
_________________________
இது எவனுக்கு வேணும்?
ஓட்டுக்கு துட்டு போதும்.
தமிழ்
________________________
குதிரையைப்பூட்டி
ஜட்கா ஓட்னா பாத்துக்கலாம்
இந்தி
______________________
இருந்தவர் இறந்தவர் ஆவார்.
இறந்தவர் இருந்தவர் ஆவார்.
வாக்காளர் பட்டியல்.
___________________________
ஊரடங்காவது ஒண்ணாவது
அடங்காது ஆர்ப்பரிக்கும்
அருவி.
___________________________
வகிடு பிரியாமல் விழுகிறது
சீவி விடு என்று
ஐந்தருவி.
______________________________________
ருத்ராவின் கவிதைகள்