லூப் குவாண்டம் காஸ்மாலஜி
_____________________________________________________________ருத்ரா
(அளபடைய இயக்கவியல் வளையத்தின் விண்ணியல்)
ஐன்ஸ்டீன் தன் வாழ்நாட்களுக்குள் ஈர்ப்பு விசையையும் சேர்த்து மற்ற ஆற்றல்களுடன் ஒரு பேரொன்றிய கோட்பாடு (க்ரான்ட் யுனிஃபிகேஷன் தியரி) நிறுவ எண்ணினார்.அதற்காகவே தன் பொது சார்புக்கோட்பாட்டில் நிறை பிண்டம் (மாஸ் அன்ட் மேட்டர்) இவற்றிக்கு தொடர்பாய் ஆற்றல் உந்துவிசை உள் திசைய கணிதத்தை (எனர்ஜி மொமெண்டம் டென்சார்) சேர்த்துக் கொண்டார். இருப்பினும் அந்த பேரொன்றியக்கோட்பாடு வேறுவடிவங்களோடு உருவெடுத்தது.மூன்று ஆற்றல் துகள் மற்றும் அதன் ஆற்றல் புலங்கள் ஒரு ஒழுங்கியத்துள் (சிம்மெட்ரி) அடைபடச்செய்ய விஞ்ஞானிகள் முயன்றபோதும் ஈர்ப்புவிசையின் பரிமாணம் நான்கு பரிமாணத்தையும் தாண்டிய அதிகப்படி பரிமாணங்கள்(எக்ஸ்ட்ரா டைமன்ஷன்ஸ்) கொண்ட உயர்மேல் ஒழுங்கியத்தை (சூப்பர் சிம்மட்ரி) நோக்கி தாவ வேண்டிய நிலைக்கு வந்து விட்டது.அதனால் "எல்லாவற்றுக்குமான ஒரு கோட்பாடு" (தியரி ஆஃப் எவெரிதிங்க்) என்பதை நோக்கி விஞ்ஞானிகள் பயணித்தனர்.
இப்போது அள்படை இயக்கவியல் என்னும் குவாண்டம் மெகானிக்ஸ்ம் இதைச்சார்ந்தே நகர்ந்தது.சிம்மட்ரியின் நீட்சியாக ஒரு சூப்பர் சிம்மட்ரிக்குப்பதில் குவாண்டமே "ப்ளாங்க்கின்பிரபஞ்சத்துக்கும் நமது இருப்பு பிரபஞ்சத்துக்கும் இடையே ஒரு பாலமாய்" ( குவாண்டம் ப்ரிட்ஜ் பிட்வீன் ப்ளாங்க் யுனிவர்ஸ் அன்ட் அவர் எக்ஸிஸ்டிங் யுனிவர்ஸ்) மாற்றப்படும் ஒரு கோட்பாட்டு இயற்பியல் உருவெடுத்தது. மேலும் பொதுசார்புக்கோட்பாட்டின் படி கருந்துளைப்பிரபஞ்சத்தில் தோன்றும் அந்த ஒற்றைப்புள்ளி அல்லது "ஒருங்கியம்"(சிங்குலாரிடி) காட்டும் சமன்பாட்டில் நம் இருப்பு பிரபஞ்சத்தின் "புழக்கடை"தான் வந்து முட்டி நிற்கிறது.ஒளி ஆற்றல் அங்கே நுழைந்தால் திரும்புவதில்லை.அந்த ஒளி நிகழ்வின் தொடுவானம் அல்லது முடிவானம் (இவன்ட் ஹோரிஸான்)அங்கே தீர்வு (சொல்யூஷன்) ஆகுவதில்லை.அது போலவே குவாண்ட இயலின் படி ஆற்றல் துகளின் அடி வானமும்(பார்டிகிள் ஹோரிஸான்)அங்கே தீர்வு சொல்லாது.குவாண்ட இயக்கவியல் ஈர்ப்பு ஆற்றலின் புலமான் "கிராவிடானை" அளவு படுத்த இயலாது.குவாண்டம் கிராவிடி என்பது அந்த "ப்ளாங்க்" புலத்தில் செல்லாது.அந்த முனையில் தானே பெருவெடிப்பு எனும் பிக்பேங்கின் திரி பற்ற வைக்கப்படுகிறது.இந்த நிலையில் கிராவிடியின் குவாண்டம் அதிலிருந்து ஈர்ப்புக்கு எதிரான அகல்விசையாய் மாறி குவாண்டம் எதிர் தாவல் (குவாண்டம் பவுன்ஸ்) நிகழ்கிறது.இதுவே பிரபஞ்சவிரிவு அல்லது வீக்கத்திற்கு காரணம் ஆகிறது.இதுவே குவாண்டத்தின் வளையம் (லூப் குவாண்டம்) ஆகிறது.ஐன்ஸ்டீன் ஈர்ப்பு நகர்ச்சியை "காலவெளியின்" ஜியோமெட்ரிகல் டைனாமிக்ஸ் என்றே குறிப்பிட்டார்.அது போல் இந்தகருந்துளை விளிம்பு எனும் சிங்குலாரிடியில் குவாண்டத்தின் நகர்ச்சி ஒரு குவாண்டம் ஜியோமெரியின் டைனாமிக்ஸ் எனலாம்.பிரபஞ்சத்தின் இந்த வடிவமும் ஒரு "காஸ்மாலாஜிகல் மாடல்" தான்.
மேலும் பொதுசார்புக்கோட்பாட்டின் படி கருந்துளைப்பிரபஞ்சத்தில் தோன்றும் அந்த ஒற்றைப்புள்ளி அல்லது "ஒருங்கியம்"(சிங்குலாரிடி) காட்டும் சமன்பாட்டில் நம் இருப்பு பிரபஞ்சத்தின் "புழக்கடை"தான் வந்து முட்டி நிற்கிறது.ஒளி ஆற்றல் அங்கே நுழைந்தால் திரும்புவதில்லை.அந்த ஒளி நிகழ்வின்
தொடுவானம் அல்லது முடிவானம் (இவன்ட் ஹோரிஸான்)அங்கே தீர்வு (சொல்யூஷன்) ஆகுவதில்லை.அது போலவே குவாண்ட இயலின் படி ஆற்றல் துகளின் அடி வானமும்(பார்டிகிள் ஹோரிஸான்)அங்கே தீர்வு சொல்லாது.குவாண்ட இயக்கவியல் ஈர்ப்பு ஆற்றலின் புலமான் "கிராவிடானை" அளவு படுத்த இயலாது.குவாண்டம் கிராவிடி என்பது அந்த "ப்ளாங்க்" புலத்தில் செல்லாது.அந்த முனையில் தானே பெருவெடிப்பு எனும் பிக்பேங்கின் திரி பற்ற வைக்கப்படுகிறது.இந்த நிலையில் கிராவிடியின் குவாண்டம் அதிலிருந்து ஈர்ப்புக்கு எதிரான அகல்விசையாய் மாறி குவாண்டம் எதிர் தாவல் (குவாண்டம் பவுன்ஸ்) நிகழ்கிறது.இதுவே பிரபஞ்சவிரிவு அல்லது வீக்கத்திற்கு காரணம் ஆகிறது.இதுவே
குவாண்டத்தின் வளையம் (லூப் குவாண்டம்) ஆகிறது.ஐன்ஸ்டீன் ஈர்ப்பு நகர்ச்சியை "காலவெளியின்" ஜியோமெட்ரிகல் டைனாமிக்ஸ் என்றே குறிப்பிட்டார்.அது போல் இந்த கருந்துளை விளிம்பு எனும் சிங்குலாரிடியில் குவாண்டத்தின் நகர்ச்சி ஒரு குவாண்டம் ஜியோமெரியின் டைனாமிக்ஸ் எனலாம்.பிரபஞ்சத்தின் இந்த வடிவமும் ஒரு "காஸ்மாலாஜிகல் மாடல்" தான்.இந்த எல் கியூ சி யை எல் கியூ ஜி என்றும் கூறுவார்கள்.அதாவது ஈர்ப்பு லூப் குவாண்டத்தில் வந்து விட்டது.
__________________________________________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக