https://chennaiphoto.files.wordpress.com/2008/08/white-pilicon.jpg
WITH THANKS FOR THE LINK.
__________________________________________________________________________________
கடவுளின் குரல்
____________________________________
ருத்ரா
என்ன வேண்டும் உனக்கு?
உன் நிழல் வேண்டுமா தின்ன?
மனம் வட்ட வட்ட அலைகளாக
நீர்க்கம்பளம் விரிக்கிறது.
இங்கு செல்கிறது
அங்கு செல்கிறது.
அப்புறம் திரும்புகிறது.
எதை உற்றுப்பார்க்கிறது?
நீரென்றால் நீந்த வேண்டும்.
வானமென்றால் பறக்க வேண்டும்.
மண்ணென்றால் நடக்கவேண்டும்.
எதுவானாலும் அசைந்தகொண்டே இரு.
கொஞ்சம் அசந்தாலும்
உன் மனமே
மண்வெட்டி தூக்கிவிடும்
உனக்கு குழி வெட்ட!
மனம் எனும் அந்த
அலாவுதீன் பூதத்திற்கு வேலை கொடு.
உன்னை அது கேள்வி கேட்டு
மூச்சு திணறுவதற்குள்
நீ உன் கேள்வித்துப்பாக்கியால்
சுட்டு வீழ்த்திக்கொண்டே இரு.
நீ யார்..இது அது.
நான் யார்..இது நீ
நான் யாராயிருந்தால் என்ன
நீ யார்?
நீ யார்?
இப்போது நீ கேட்கிறாய் அதை
யாரென்று?
உன் கேள்விகளால்
அருவியாகி அதன் மீது படர்!
அதற்கும் ஒரு
பாயிண்ட ஆஃப் நோ ரிடர்ன்
உண்டு.
"திரும்பி வராமல்"திணறும்
அந்தப்பாறையில்
அந்தக்கேள்வி நொறுங்கிச்சிதறும்
ஒலி நுரைகளில்
ஆற்றல் நூலாம்படைகளில்
"ஒரு குவாண்டம் ஃபோம்" கோட்பாடு
தோரணங்களாய் தொங்குகிறது.
உன் அறிவுத்துணுக்குகள்
உன் கேள்விகளுக்குள்
ஒரு புதிய வெளிச்சம்
ஒன்றை பாய்ச்சட்டும்.
அமெரிக்காவின் ப்ரூக்ஹெவன்னில்
ரிலேடிவிஸ்டிக் ஹெவி அயன் கொல்லைடர்
எனும் "அணு உருக்கு உலையில்"
"குவார்க் குளுவான் ப்ளாஸ்மா"
என்ற
"ஆற்றல் புலக் குழம்பியம்"
ஒன்றை
நீ புதிதாக அந்த "கும்பாபிஷேகக்குடத்தில்"
ஊற்றி உற்றுப்பார்.
உன்னை நோக்கி
அங்கிருந்து ஒரு குரல் கேட்கும்
கடவுளே உன்னைக்கண்டு கொண்டேன் என்று.
ஆவென்று
வாய் பிளந்த வியப்போடு.
___________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக