சனி, 3 ஜனவரி, 2026

"இன்றைய தங்கம் விலை!"

 "இன்றைய தங்கம் விலை!"

என்னருமைத் தமிழ் மக்களே!
நம் அருமைத்தமிழச்சிகளின்
தமிழ்
மேலே இருக்கும் விலைப்பட்டியலின்
சங்கப்பலகையில் தான்
தங்கப்பலகையாய்
தினம் தினம் தொங்கி தொங்கி
ஊஞ்சல் ஆடுகிறது.
அந்த கற்பனையின்
காக்காய் முள் தினம் தினம்
காயப்படுத்திய போதும்
கஞ்சிக்கில்லாத காரணத்தின்
ஒரு மூலைக்குள் சிலிர்க்கின்ற‌
ஒரு தோரணமாய்
ஒரு முழுப்பக்க விளம்பரக்
கலைடோஸ்கோப்பின்
ஏக்கங்களாய்
நிழல்களை தாலாட்டுகிறது.
________________________________________
சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக