பகிர்வனம் by சொற்கீரன்
31.01.2026
________________________________________
Feed posts
Vannadasan Sivasankaran S
4ம.நே
·
சாளர இடுக்குகளுக்குள் இருந்து
புறா தன் குரலைப் பறக்கவிடுகிறது வெயிலில்.
பனிக்காலத்தின் கண்கள் போல் விரிந்திருக்கின்றன
முட்டைகள்.
சாம்பல் நிறமுடையது இந்த உச்சிப் பகல்.
___________________________________________________
பகிர்வனம் 13
விடைக்கும்
சொல்வலிப் பிரளயங்களை
கவிதைகள் என்று
பிரசவிக்கும்
தருணங்கள்
எங்கோ தொலை வானத்தில்
புழுக்கூடுகளின் ஜிமிக்கிகளாய்
ஆடி ஆடி
தொல்லை தருகின்றன.
____________________________________
__________________________________________
Vannadasan Sivasankaran S
5ம.நே
·
ஒரு காலத்தில்
எல்லாம் எளிமையாகவே இருந்தன.
ஒரு கட்டத்தில்
எல்லாம் எளிமையாகிவிடுகின்றன.
எளிமையற்றதென்பது
ஒரு காலத்துக்கும் ஒரு கட்டத்துக்கும்
இடையில் உள்ள
அவரவரின் தூரம் மட்டும்.
_____________________________________________
பகிர்வனம் 14
காலம்
கட்டம் கட்டத்தெரிந்த
காலத்தில்
அந்த கட்டங்கள்
மணலுக்குள் எறிந்த சோழிகளாய்
சவத்துக்கிடந்தன.
நகர்ச்சி எனும் உயிரற்ற
காலத்துக்கு
சிதை மூட்டுவார் யார்?
____________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக