சனி, 3 ஜனவரி, 2026

"வண்ணதாசனின் வண்ணத்துப்பூச்சி"

   

"வண்ணதாசனின் வண்ணத்துப்பூச்சி" __________________________________________


ஆயிரக்கணக்கான மயிர்த்தூவிகளில்

ற்பனையை சிலிர்த்துக்கொண்டு

அந்த கம்பளிப்பூச்சி

கவிதையின்

"அகர முதல"வை
சொட்டு சொட்டாய்

மின்சாரம் பாய்ச்சிக்கொண்டு

ஊர்ந்து செல்லும் காட்சி கூட‌

மிக மிக இனிப்பான‌

திருவாதிரைக் களியாய்

குழைவில் தன்

உயிரெழுத்தை

பூசிக்கொண்டே காணாமல் போகிறது.
_____________________________________________
சொற்கீரன்.
ஏறியிறங்கி ஏறியிறங்கி
ஒரு அலையிட்டுப் பறக்கிறது.
பார்க்க ரொம்ப ரம்மியம்
வெயில் அதே தட்டையான வெயில்தான்.
தூரத்தில் கொஞ்சம் ஆவாரம் பூ மஞ்சள்.
ஆனால் அவ்வளவு அழகான பறத்தல்.
வேறு ஒன்றுமில்லை.
இன்று வண்ணத்துப் பூச்சி ' நல்ல
form இல் இருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக