திங்கள், 26 ஜனவரி, 2026

சல்யூட்

77வது குடியரசு தினவிழா
________________________________

உள்ளமெல்லாம் பூரிக்கிறது.
மலர் மழைக்குளியல்கள் தான்.
நெகிழ்ச்சிகள் தான்.
மகிழ்ச்சிகள் தான்.
அரசியல் சாசனத்தின்
அட்டைப்படத்தில்
ராணுவ விமானங்கள்
குண்டுகள் உமிழ்வதில்
நம் நரம்புகள் புடைக்கின்றன.
ஆனால்....
அந்த சாசனத்து
உள்ளடக்கத்து தாள்கள்
இனி வெள்ளைப்பக்கங்களா?
"குண்டு முழக்கங்கள்" இனி
சல்யூட் வைப்பதற்கு மட்டும் தானா?
அந்த நான்குவர்ண அச்சத்தில்
மூவர்ண அச்சு 
மறைந்து போகுமோ?
__________________________________________
சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக