ஜனநாயகம்
மனிதனுக்கு அரிப்பெடுத்தது
ஆளுக்கொரு செங்கோலும்
மகுடமும்
மண்டையில் மாட்டிக்கொள்ள.
ஆனாலும் வரலாறு
வற்றி நொறுங்கிய கபாலங்களைத்தான்
மிச்சமாய் குவித்தது.
இப்போதும் அந்த அரிதாரங்களின்
அரிப்பும் தினவும் தாங்க முடிவதில்லை.
ஆட்சி எனும்
ஒரு சட்டாம்பிள்ளை பிரம்பில்
கழுமரங்களும் ஒளிந்து கிடக்கின்றன.
அதை
ரோஜாக்களின் கொத்துக்களாய்
கவிதை கோர்த்துக்கொண்டு
இந்த தேனீக்கள்
நெருப்புத்தேனை
ரத்தத்தீயில் வெளிச்சம் காட்டுகின்றன.
_______________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக